தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வை வளர்ப்பதற்குத் தான் “சாஸ்திரங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்”
மனித வாழ்க்கையில் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளையும்
சித்திரை (சிறு திரை) மறைத்துக்
கொள்கின்றது. புது வருடத்தில் (வெளிச்சத்தை
மறைக்கும் இருளைப் பிளந்து ஆறாவது அறிவின் துணை கொண்டு இருளைப் போக்கிப் பொருள்
காண வேண்டும் என்பது
புது வருடம் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் விசேஷத்தை வைத்ததின் நோக்கங்கள் 12
ராசி என்றும் வைப்பார்கள்.
1.இந்தப் 12 மாதத்திலும்
ஒவ்வொரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…?
2.ராசியின் தன்மை எவ்வாறு விளைய வேண்டும்
என்று நான் 12 மாதத்திலும் 12 ராசிகள்
என்று சொல்வார்கள்.
ஒவ்வொரு மாதத்திலும் நாம் எதை எதைச் செய்ய வேண்டும்…? என்ற நிலையில் சித்திரை பிறக்கும் பொழுது நாம் எதைச் செய்ய
வேண்டும்…? என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.
வருடம் பிறந்து விட்டது… நமது
வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறைக் கண்டுனர்ந்தாலும் அச்சித்திரையை…
1.உத்தராயணம் என்ற இந்த ஒளி கொண்டு இருளைப்
போக்கிப் பொருள் கண்டு
2.புது வருடம் நாம் நடக்க வேண்டும் என்பதற்குத்தான்
வரிசைப்படுத்தி நமக்குத் தத்துவத்தைக் கொடுத்தார்கள் மாதங்களையும் அமைத்தார்கள்.
ஆனால் அதை எல்லாம் யாரும் நமக்கு விளக்கமாகச் சொல்வதற்கு
இன்று இல்லை. யாம் இப்பொழுது இதைச் சொன்னால் “புதிதாக ஏதோ சொல்கிறார்…” என்று எம்மைச்
சொல்கின்றார்கள்.
ஏனென்றால் இன்று ஒவ்வொரு மாதத்திலும் இதைச் செய்ய வேண்டும்
அதைச் செய்ய வேண்டும் என்று எத்தனையோ ஐதீகங்களையும் சாங்கியங்களையும் தான் நாம் செய்து
கொண்டிருக்கின்றோம்.
காரணம்… காலத்தால் இந்த
உண்மைகள் மறைந்து விட்டது… மறைத்து விட்டார்கள்.
சித்திரை – ஒரு கனி விளைந்த பின்
அது எப்படித் தன் வித்தாக ஆகின்றதோ இதைப் போன்று
1.பல கோடி உணர்வின் தன்மை தனக்குள் கனியாகும்
பொழுது
2.அதனின் வித்து ஒவ்வொன்றும் தன்னைக்
காத்துக் கொள்ளும் உணர்வாக விளைந்தது.
இதைப்போல்
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக்
கொள்ளும் உணர்வே விளைந்தது
2.அந்த விளைந்த நிலைகள் கொண்டு உயிரான
நிலைகள் மனிதனின் நிலைகள் வரும் பொழுது கனியாகின்றது.
ஒரு மாங்கனி தன் இனத்தின் வித்தை அது உருவாக்கிக் கொள்கிறது. இதைப் போல் தான் உயிரான நிலைகள் கொண்டு பல கோடி உணவை உணவாக உட்கொண்டாலும்… அவை அனைத்திலும் ஒருக்கிணைந்து “ஒவ்வொன்றும் தன்னைக்
காத்துக் கொள்ளும் உணர்வாக வந்த… இந்த ஒளியின் சுடராக ஆறாவது
அறிவின் தன்மை கொண்டு விளைந்த நிலைகள் “கார்த்திகேயா…”
அதனின் உணர்வு கொண்டு மனித வாழ்க்கையில் வரும் சித்திரையை (குறைகளை) புது வருடம் நீக்க வேண்டும்
1.இருளை நீக்கி மறைந்த பொருளைக் காண வேண்டும்…
2.எவ்வாறு தீமையிலிருந்து மீள வேண்டும்…?
3.எவ்வாறு ஒளியாக மாற வேண்டும்…? என்ற தத்துவத்தைத் தான் மெய் ஞானிகள் நமக்குத் தெளிவாகக்
கொடுத்துள்ளார்கள்.