ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 4, 2024

நம்முடைய மோப்பம் எதிலே இருக்கிறது…?

நம்முடைய மோப்பம் எதிலே இருக்கிறது…?


அதை யாராவது நாம் சிந்திக்கின்றோமா என்றால் இல்லை. நன்றாக யோசனை செய்து பாருங்கள். கோவில் என்பது எவ்வளவு பெரிய புனிதமான இடம் அதே சமயத்தில்
 
கருப்பணசாமியைக் காட்டி அதன் பக்கத்தில் மோப்ப நாயை வைத்துள்ளார்கள். மோப்ப நாயை வைத்ததன் பொருள் என்ன…?
 
எனக்கு இப்படி தவறு செய்தார்…” என்று மோப்பத்தைப் பிடிக்கின்றோம். அப்பொழுது தவறு செய்தான் என்று சொன்னவுடனே
1.உதாரணமாக நாய் என்ன செய்கின்றது…? யார் வளர்க்கின்றார்களோ அவர்களைத் தான் பாதுகாக்கின்றது,
2.நாம் மோப்பம் பிடிப்பதே எனக்குத் தீங்கு செய்வார்கள் என்று நினைத்து நுகர்ந்தவுடன் என்ன செய்கின்றது…?
3.நம் நல்ல குணங்கள் இருண்டு போகின்றது.
 
அந்த நேரத்தில் அவனுக்கு எப்படியும் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். தீங்கு செய்யக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது..
1.அவன் நன்றாக இருந்தால் நமக்கு எப்படியும் கெடுதல் செய்வான் என்ற வகையில் நாம் நினைக்கின்றோம்… ஆயுதத்தை கையிலே கொடுக்கின்றார்கள்.
2.எதை…? அரிவாளைக் காட்டுகின்றார்கள்.
3.எங்கே…? எப்படியும் அவனிடம் இருந்து தப்புவதற்குத் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று அரிவாளை எடுக்கின்றான்.
 
ஆனால் அவன் செய்த தீங்கான உணர்வை நுகர்ந்து கொண்ட பின் என்ன செய்கின்றது…? எதை மோப்பம் பிடித்தோமோ அது நம் உடலுக்குள் வந்து அவன் செய்த தீங்கான எண்ணங்கள் நமக்குள் விளைகிறது. அது நம் நல்ல குணங்களைக் கொல்கின்றது.
 
நாம் நுகர்ந்தது நம் உடலுக்குள் சென்று நமக்குள் என்ன செய்கின்றது? அதற்கு நீ எப்படி நுகர வேண்டும்...? என்பதற்காக வேண்டி இப்படிப்பட்ட உருவங்களை வைத்துக் காட்டுகின்றார்கள்… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றது என்று…!
 
ஏனென்றால் நாம் சுவாசித்த அந்த விஷமான உணர்வுகள் நம் நல்ல குணங்களைக் கொல்கிறது. அந்த இடத்தில் நாம் எதை எண்ண வேண்டும்…?
 
துருவ நட்சத்திரம் இந்த விஷத்தை நீக்கியது. இப்பொழுது உங்களிடம் அதைத்தான் பதிவு செய்கின்றேன்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நாம் நுகர வேண்டும்
2.அதை ஆசைப்பட்டு நுகர்ந்தவுடன் உயிரிலே படுகின்றதுல்... அருள் உணர்வுகள் தோன்றுகின்றது.
3.இரத்தத்தில் கலந்த பின் தீங்கு செய்வதை அது குறைக்கின்றது.
(தங்கத்தில் திரவகத்தை ஊற்றியவுடன் இரண்டற இணைந்திருக்கும் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுவது போல்).
 
நாம் இதற்கு முன்னாடி வேதனை என்ற உணர்வுகள் இரத்தத்தில்  கலந்திருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் அது வீரியத் தன்மையைக் குறைத்து நல்லதாக மாற்றக்கூடிய சக்தி பெறுகின்றது. இதை உருவம் அமைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.
 
கருப்பணசாமி கோவிலுக்குப் போய் விவசாயத்தில் நல்ல வெள்ளாமை வந்தால் நான் உனக்கு ஆட்டைக் கொடுக்கின்றேன் கோழியைக் கொடுக்கின்றேன் என்று நேர்த்திக்கடன் வைத்து அதை வைத்துக் கும்பிட்டவுடன் ஜெயித்து விட்டால் கொடுக்கின்றார்கள்
 
ஜெயிக்கவில்லை என்றால் நேர்த்திக் கடனை மனதில் ஏற்றுக் கொண்டாய். ஆனால் நீ செய்யவில்லை அதனால் சாமி உனக்குத் தண்டனை கொடுக்கின்றது. என்று சொல்வார்கள்.
 
வியாபாரம் ஆரம்பித்தேன் அவன் எனக்குத் தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறான். நான் கடன் கொடுத்தேன் அவன் கொடுக்காமல் என்னை ஏமாற்றிக் கொண்டுள்ளான்…! என்று இந்த உணர்வுகளை எல்லாம் சாமியை நினைத்து என்ன செய்கின்றோம்…? நான் உனக்கு காணிக்கை கொடுக்கின்றேன், எனக்குப் பணம் வர வேண்டும் என்று.
1.பணம் வரவில்லை என்றால் கடைசியில் வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.
2.அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்…? நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொல்கின்றோம்.
 
ஆனால் நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும், அவர்கள் சொல் வைரத்தைப் போன்று சொல் ஜொலிக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும். நல்ல தெய்வப் பண்பும் தெய்வீக குணமும் அவர்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் இந்த நல்ல சக்திகள் உங்கள் உடலில் விளைகிறது.
 
பிறரின் செயலைப் பார்க்கும் போது தீயது என்று காட்டுகின்றது இங்கே கோவிலுக்கு வந்தால் இந்த தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டுகின்றார்கள்.
1.எனவே அந்த நல்லதை எண்ணி நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.தெய்வ குணமும் நல்ல செயலும் நாம் பெற வேண்டும் என்று கோவிலில் எண்ணி எடுக்கச் சொல்கின்றார்கள்.
 
அதாவது கெட்டது வருவதையும் அதை நல்லதாக்க வேண்டிய வழியையும் காட்டி நமக்கு உண்மையை உணர்த்துகின்றார்கள்.