ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 21, 2024

சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் 48 மண்டலங்களுக்கும் “தனித்தனித் தன்மையுண்டு”

சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் 48 மண்டலங்களுக்கும் “தனித்தனித் தன்மையுண்டு”


ஓடிக்கொண்டே உள்ள இம் மண்டலங்களின், ஒன்றின் ஈர்ப்பும் அதன் அமில சக்தியும் மற்றொன்றின் நிலைக்கு மோதுவதால் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவ் ஈர்ப்பின் சக்தி நிலை கூடுகின்றது.
1.அனைத்து மண்டலங்களுமே சுழன்றே ஓடிக்கொண்டுள்ளன
2.ஒன்றுக்கு உகந்த சக்தி மற்றொன்றுக்கில்லை
3.சூரியனை மையப்படுத்திச் சுழன்றோடும் இந்த 48 மண்டலங்களுக்கும் தனித்தனித் தன்மையுண்டு.
 
நம் பூமியில் இன்றுள்ள சப்த அலைகளும், சுவையும் மற்ற இயற்கையில் தோன்றிடும் தாவரம், கனிவளம் இப்படிப் பல நிலைகள் வேறு மண்டலங்களில் மாற்றம் கொண்டுள்ளன.
 
நம் பூமியின் சக்தி நிலை போன்ற அதிக சக்தி கொண்ட மண்டலம் சூரியனை மையப்படுத்திச் சுழன்றிடும் இந்த 48 மண்டலங்களுக்குமே இல்லை.
 
நம் பூமிக்கு வியாழனிலிருந்து இன்று எப்படி நீர் நிலைகள் வந்திடும் சக்தி கிடைத்தது…?
1.வியாழனிலிருந்து அதன் சுழலும் வேகமும், சூரியனின் சுழலும் வேகத்திற்கும்
2.இரண்டின் ஈர்ப்பில் ஏற்படும் நிலை அதன் நேர் நிலை கொண்ட நம் பூமிக்குக் கிடைக்கின்றது.
3.வியாழனின் நிலை இல்லாவிட்டால் நம் பூமிக்கு நீரில்லை.
 
இதே நிலைபோல் செவ்வாயின் சக்தி நம் பூமிக்கு எந்நிலையில் பாய்கின்றது…?
 
நம் பூமியிலிருந்து செவ்வாய் மண்டலமும், வியாழன் மண்டலமும் காணுவதற்கு நட்சத்திர மண்டலம் போல் இன்றும் தெரிந்து கொண்டுள்ளன.
 
பல கோடி நட்சத்திரங்களில் ஒன்றாய்க் காண்கிறோம். செவ்வாயில் நிறைந்துள்ள சக்தி நம் பூமிக்கு சப்த அலைகளைப் பாய்ச்சும் சக்தி…
 
உம் சப்தமே வெளிவராத நிலைக்கான காற்றில்லா அடைப்பில் இருந்தால் கேட்டிடுமா…? அதைப் போல் பூமிக்கும் மையமான சூரியனுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள செவ்வாயின் நிலையினால் செவ்வாயின் சக்தியையும் நேர்படுத்தி நம் பூமி பெறுகிறது.
 
அதே சமயம் சூரியனின் சக்தியினால் செவ்வாயின் சக்தியும் மோதுண்டு அதன் ஒளி அலையையும் நாம் பெறுகின்றோம்.
 
செவ்வாயின் சுழலும் தன்மை கொண்டு அதன் அமிலத் தன்மையும் சூரியன் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத் தன்மையும் கலவை பெறும் இடத்திலிருந்துதான் சப்த ஒலி பிறக்கின்றது.
 
இதே நிலை கொண்டு நம் பூமிக்குத் தொடர்பு கொண்ட சந்திரனின் ஈர்ப்பு நிலை அமில நிலை வேறு. சந்திரனின் நிலையில்லா விட்டால் நாம் காணும் இவ்வண்ணங்களே இல்லை…
 
பல சக்தியை நம் பூமி ஈர்த்து, நம் பூமியின் சக்தியைச் சந்திரன் பெறுவதினால் சந்திரனுக்கும் நம் பூமிக்கும் அதிகத் தொடர்பு உள்ளதினால் நம் பூமியின் நிலையைக் காட்டிலும் சந்திர மண்டலம் உருவில் சிறிதாகவும் அதே நிலையில் பல சக்திகளைத் தன்னுள் அடக்கிய வளரும் தருவாயில் உள்ள மண்டலம்.
 
இம் மாற்ற நிலையினால் சந்திரனுக்குச் சப்த அலையும் இன்று ஒரே நிலையில் இரவு பகல் என்ற மாறுபட்ட குண நிலை பெறாமல் சுழன்றிடும் சந்திர மண்டலத்தில் இந்நீர்நிலை சப்த ஒளியின் நிலையும் ஏற்பட்ட பிறகுதான் பல வளர்ச்சி நிலை ஏற்பட்டு பல நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியையும் சந்திரன் பெற்ற பிறகுஅதன் வளர்ச்சியில் ஊரும் உயிரினங்கள் உள்ள சந்திரனின் தன்மையே… “ஜீவ உடல் கொண்ட உயிராத்மாக்கள் தோன்றிடும் காலம் வரும்…
 
வரப்போகும் இக் கிரகண கால நிலைக்குப் பிறகு
1.நம் சூரிய கிரகமுடன் பல நிலைகள் மாற்றம் கொண்டு நடக்கப் போகின்றது
2.சூரிய கிரகணம், சூரிய கிரகணம் என்று பல முறை கிரகணம் பிடிக்கின்றது சூரியனை.
3.ஒவ்வொரு நிலையிலும் இதனால் சூரியனுக்கும் சூரியனை நேர் கொண்டு
4.எம்மண்டலத்தை எக்கிரகணம் தாண்டிச் செல்கின்றதோ அம்மண்டலத்திற்கும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
 
வட்டமிட்டுக் கொண்டே உள்ள இம்மண்டலங்களும் நட்சத்திர மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் வளர்ச்சி கொண்டுள்ள சில நிலைகளும் ஒன்றைத் தாண்டி ஒன்று ஓடும் நிலைக்கும் ஜீவன் வேண்டும்…
 
அதே போல்
1.உஷ்ண அலைகளைக் கொண்ட நிலையில்தான் அது அதற்கு உயிர்த் துடிப்பே வருகின்றது
2.அதி உஷ்ணத்தை எதுவும் ஏற்பதில்லை அதி குளிர்ச்சிபனிக்கட்டி போன்ற நிலையிலும் தாவர வளர்ச்சி வளர்வதில்லை.
 
இன்று நம் பூமியின் நிலை எந்நிலையில் அது சூழலும் தன்மை கொண்டு, காற்று மண்டல வட்டத்திற்கு மேல் உஷ்ண அலைகளை நம் பூமி வெளிப்படுத்துகிறதோ அந்நிலையில் தான் ஒவ்வொரு கோளங்களுக்கும், அதன் சுழற்சியில் காற்று மண்டலமும், அம்மண்டலம் கக்கும் உஷ்ண அலையும் செயல் கொள்கின்றது.
 
1.இம்மனித உடலுக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் அதனைச் சுற்றி சப்த அலை உண்டு
2.சப்த அலைக்குச் சிறிது தள்ளி உஷ்ண அலையும் உண்டு
3.எல்லா ஜீவன்களுக்குமே மனிதனின் உடல் வெப்பநிலையும் அம்மனிதனைச் சப்த அலையின் வெப்பக் காற்றும் ஒன்றாய்த் தான் இருந்திடும்.
 
தாவரங்களுக்கும் இந்நிலை உண்டு. இதைப்போல் இவ்வுலகம் மற்ற எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலை கொண்ட உஷ்ண அலைகள் உண்டு.
 
சந்திரனின் நிலை குளிர்ந்த நிலை என்று உணர்த்தினேன். ஒவ்வொன்றிற்கும் அதனதன் சுழலும் வேகம் கொண்டு இவ்வுஷ்ண அலைகள் மாறுபடுகின்றன.
1.இவ்வுஷ்ண அலை கக்கும் நிலையே எம் மண்டலத்திற்கும் ஓர் இடத்தில் இருக்கும் நிலை மற்றோரு இடத்தில் இருந்திடாது
2.எல்லா ஜீவராசிகள் தாவரங்களின் நிலைக்கும் இந்நிலை உண்டு.