கருவுற்ற தாய் “அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது”
ஒரு சமயம் ஒரு குடும்பத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்
அங்கே மாமனாருக்கும் மகனுக்கும்
சண்டை.
வீட்டிற்கு வந்த மருமகளோ அது கர்ப்பமாக
இருக்கக்கூடிய காலத்தில் இதையெல்லாம் கேட்டு “மாமனாரே பாவம்” என்று சொல்லிவிட்டு எல்லா உதவிகளையும் பணிவிடைகளையும் செய்து வந்தது…
முறைப்படி அந்த மாமனாரைக் கவனித்து
வந்துள்ளது.
கணவனோ… யார் என் அப்பாவிற்குச் சோறு போடச் சொன்னது…? என்று கேட்கின்றான்.
கணவன் தன் மனைவியைச் சத்தம் போட்டுக் கடுமையாகப் பேசி உள்ளார். இது நடந்த நிகழ்ச்சி.
1.அப்பொழுது நான் (ஞானகுரு) அந்தப் பெண்ணிடம் சொன்னேன் இதை எல்லாம்
சுவாசிக்காதே நல்லதையே எண்ணு என்று…!
2.எங்கேங்கே நல்லதை
நினைக்க விடுகின்றார்கள்…?
3.மாமனாரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
இங்கே கணவர் விரட்டிக் கொண்டு உள்ளார்…! என்று சொல்லி
4.வேதனைப்பட்டு வேதனைப்பட்டு அந்த
அழுகையிலிருந்து மாறவே இல்லை.
நான்கு ஐந்து மாதம் ஆகிவிட்டது. கருவிலிருக்கும் குழந்தையை ஸ்கேன் எடுத்துப்
பார்த்துக் கொண்டு வருகின்றார்கள். இப்பொழுதுதான் நவீன கருவிகள்
உள்ளனவே…! கை கால் எல்லாம் சரியான வளர்ச்சி இல்லை… குறுகி
விட்டது. பிறகு அபார்ஷன் செய்து அந்தக்
குழந்தையை எடுத்துள்ளார்கள்.
ஆனால் மருமகள் தவறு செய்யவில்லை சந்தர்ப்பம் இரக்கப்பட்டு நல்லது தான் செய்தது. ஆனால் கணவரும்
மற்றவர்களும் உனக்கு என்ன அக்கறை..? என்று திட்டுகிறார்கள்.
1.இந்த உணர்வைக் கேட்டு
நல்லது செய்ய முடியாமல் அந்த வேதனையான உணர்வுகளைச்
சுவாசிக்கின்றது
2.அந்தக் கருவிலே
இருக்கக்கூடிய குழந்தையை அது பாதிக்கின்றது.
3.கருவில் இருக்கக்கூடிய குழந்தை தவறு
செய்ததா…? அல்லது இந்தத் தாய் தான்
தவறு செய்ததா…?
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த
உணர்வுகள் அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகிறது.
காரணம்… இன்று டிவி பெட்டி வீட்டிற்குள்
வந்துவிட்டது. எங்கோ நடக்கும் சமாச்சாரம்… தலையை வெட்டுவது
போன்று டிவியிலே காட்டுகின்றார்கள். அந்த கர்ப்பிணி அதனைப்
பார்த்தால்… குழந்தை பிறந்தவுடன் அந்த வேலையைச் செய்வான்.
அசுர உணர்வை நீக்குவதற்கு அந்தக் காலத்தில் வளர்ச்சி பெற்று வளர்ந்து வந்தார்கள். ஆனால்
இன்றோ… மனிதருக்குள் அசுர உணர்வு தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
மனிதனுடைய ஆசை இந்த உடல்
இச்சை வரப்படும் பொழுது… கொடூர
மிருகங்கள் மற்ற ஆடு மாடுகளை எப்படிக்
கொன்று சாப்பிட்டதோ இதே மாதிரி மற்றதைத் துன்புறுத்தியே
வாழும் உணர்வுகள் நாடு முழுவதும் நாளடைவில் வளர்ந்து விட்டது.
நாட்டிலே நிலவும் சண்டையும் சச்சரவும்
வெளியில் நடப்பதைக் கேட்ட உடனே அந்தக்
கருவில் இருக்கக்கூடிய குழந்தை பிறந்தவுடன் என்ன செய்கின்றது…?
அம்மா அப்பாவை உதைக்கின்றது… இருப்பதையெல்லாம்
ரகளை செய்கின்றது… திருடப் போகின்றது, எந்தெந்த
குணங்களோ அதற்கு தகுந்தாற்போல் குழந்தைகள் மாறிக்கொண்டே
இருக்கின்றது.
ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனுக்குப் பூர்வ
புண்ணியமாக எது கிடைத்தது…?
கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு (அகஸ்தியனுக்கு)
1.மின்னல்கள் தாக்கினாலும் அந்த மின்னலுடைய
வேகத்தைத் தணித்து
2.அதைச் சுவாசித்துத் தனக்குள் ஒரு ஒளிமயமான உணர்ச்சிகளை தூண்டும் சந்தர்ப்பமாக
3.கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.
அவன் பிறந்த பிற்பாடு அவன் பக்கத்தில் எந்த விதமான
விஷத்தன்மைகள் வந்தாலும் அவனைத் தாக்குவதில்லை… யானைகளோ புலிகளோ போன்ற
எந்த மிருகங்களும் வரவில்லை.
அப்பொழுது இவன் உடலில் நடந்தது யாருக்கும் தெரியாது. “கடவுளின் அவதாரம்” போல் இருக்கிறது என்று மற்றவர்கள் எண்ணுகிறார்கள்.
இந்தக் குழந்தையைக் கண்டால் மற்றதெல்லாம் விலகிச் செல்கின்றது. ஈ, எறும்பு
கொசு போன்ற எதுவும் வரவில்லை. அவனை சுற்றியே பக்கத்தில் வரவில்லை என்கிற போது அவன்
கடவுளின் பிள்ளை என்றே நேசிக்க ஆரம்பிக்கின்றார்கள்.
அவன் வளர்ச்சியில் இதைப் போன்று செடி கொடியின் மணங்களை
எளிதில் நுகர்ந்தற்கின்றான்.
1.ஒன்று அல்லது ஒன்றரை வயது ஆனவுடன் எதிர்
நிலையான செடி கொடிகளின் மணங்களை நுகர்ந்து என்ன செய்கிறான்…?
2.யாருக்காவது தலைவலி வருகிறது என்றால்
ஒரு செடியின் இலையைக் கொடுத்து நுகரச் செய்தால் தலைவலி போகின்றது.
3.அகஸ்தியன் இளமையிலே இப்படி எதையாவது பறித்து கொண்டு வந்து கொடுத்து
4.அந்த வாசனையை நுகரச் செய்தால் நோய்கள் அனைத்தும் அகன்று விடுகின்றது.
இப்பொழுதும் கூட தியானத்தில்
இருப்பவர்கள் அந்த முறைப்படி செய்யும் பொழுது வீட்டில் உள்ள
குழந்தை ஓரளவுக்கு விவரம் தெரிந்து சிரித்து நம்மிடம்
பேசினாலே உங்கள் நோய் போகும்…!
தலைவலியே இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்
1.அந்தக் குழந்தையின்
கையில் சிறிதளவு விபூதியைக் கொடுத்து
2.”நன்றாகிவிடும் என்று
சொல்லப்பா…” என்று சொல்லி அந்த குழந்தையிடம்
கொடுத்து வாங்கி நீங்கள் சாப்பிட்டுப்
பாருங்கள்...
3.தலைவலி குறைகின்றதா இல்லையா என்று
தெரியும்.
உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.