ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2024

விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?

விண் சென்றவர்களின் “நினைவு நாளை” எப்படிக் கொண்டாட வேண்டும்…?


நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்தவர்களை குருநாதர் காட்டிய அருள் வழியில் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.
 
இணையச் செய்தாலும் அடுத்து நினைவு நாள் கொண்டாடுகின்றோம். அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
 
ஒளி நிலை பெற்ற அந்த நினைவு நாள் தான் இன்று என்றால்…!
1.நாம் கூட்டுத் தியானத்திலிருந்து அவருடைய உயிரான்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.
2.அந்த உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து விட்டது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
4.என்றும் அவர்கள் பேரருளாக இருத்தல் வேண்டும்.
5.எங்கள் குடும்பத்தில் இருளை அகற்றும் அருள் சக்தியாகப் படர்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
 
ஏனென்றால் அவர் ஒளியின் சரீரமான நாள். இன்றைய தினம் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பங்களில் படர்தல் வேண்டும்.
 
அந்தந்த குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கொண்ட பின் அந்த உணர்வை எடுத்து
1.நம் குடும்பத்தில் எங்களை அறியாத தீய வினைகள் நீங்கிட வேண்டும்.
2.குடும்பத்தில் பற்றும் பாசமும் வளர்த்திட வேண்டும்.
3.எங்கள் குலதெய்வங்களாக என்றும் நிலைத்திருந்து இருளினை அகற்றி நஞ்சினை வென்று
4.உணர்வினை பேரருளாக மாற்றிடும் அருள் சக்தியாக அது வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
அதே சமயத்தில் அவர்கள் நம்முடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் பற்று கொண்ட நாம்… அவரின் உணர்வுகள் நமக்குள் பங்கு உண்டு.
 
விண் செலுத்தத் தவறினால் வரின் நோய் இங்கே வளர்கின்றது. அப்படி நமக்குள் வளராது தடுக்க இம்முறைப்படி தான் ந்த நினைவு நாளைக் கொண்டாட வேண்டும். இதை
1.அவர்கள் பேரொளி பெற்ற நாள்
2.என்றும் இருளை அகற்றிய நாள்.
3.சப்தரிஷிகளாக ஆன நந்நாள்.
4.சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்று சேர்த்த அந்த உணர்வின் தன்மை எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
5.குடும்பத்தில் தெளிவான நிலைகளை எங்களுக்கு ஊட்ட வேண்டும்.
 
உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அவர்கள் வீட்டில் வாழ்ந்த உணர்வலைகள் நம் உடலில் அது பதிவாகி இருப்பினும் ஆக நாம் குடியிருக்கும் வீட்டில் பதிவாகி இருப்பினும் மேலே சொன்னபடி நாம் செய்தோம் என்றால் ந்த்த் தீமைகள் மறைகின்றது.
1.அருள் ஒளி என்ற நிலைகள் நமக்குள் பெருக்கப்படுகின்றது.
2.நாம் நினைவு நாள் இப்படித் தான் கொண்டாட வேண்டும்.
 
மாறாக… அமாவாசையன்று அவர்களுக்கு உணவுகள் கொடுத்து அவர்களை அழைத்தோம் என்றால் ஆவியின் நிலை அடைந்து விடும். பின் இது சில தீமையின் நிலைகளுக்குத் தான் செல்லும். மீண்டும் பிறவிக்கே நாம் அழைக்கின்றோம் என்று பொருள்.
 
ஆகவே… உடலை விட்டுப் பிரிந்டு சென்றவர்களை நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பேரொளி என்ற உணர்வினை ஆக்கிய பின்
1.அவர் விண் சென்ற அந்த அருள் ஒளி என்ற நிலைகள் நம் வீட்டிலே படர்ந்து
2.அறியாத இருளை அகற்றிடல் வேண்டும் என்ற உணர்வினில் தான் நாம் வாழ்ந்திட வேண்டும்.
 
என்றுமே ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை அடைந்த அந்த அருள் உணர்வுகள்
1.குடும்பத்தில் இருளை அகற்றி அனைவருக்கும் தெளிந்த மனம் கொண்டு வாழும் அருள் சக்தியை எங்களில் என்றும் பரப்புதல் வேண்டும்.
2.நம் குடும்பத்தை நீங்கள் காத்திடல் வேண்டும்
3.இருளை அகற்றிடும் அருள் சக்தியாக எங்களில் வளர்த்திட வேண்டும்.
4.உங்கள் அருள் என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று
5.அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் இத்தகைய நிலைகள் எண்ணுதல் வேண்டும்.
 
இதனை எண்ணினால் அவர் உடலில் வாழ்ந்த காலத்தில் நாம் கேட்டறிந்த நோயின் தன்மை வராதபடி மாற்ற முடிகின்றது. ஆகவே நமக்குள் அருள் ஒளியாக மாற்றியமைத்தல் வேண்டும்.
 
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நமது மூதாதையர்களை இந்த  முறைப்படி பிறவியில்லா நிலை அடையச் செய்வோம் பேரின்பம் பெறச் செய்வோம்.