தியானம் எடுக்க வேண்டிய முறை
நமது கண் ஒரு ஆண்டனா…! ஏரியல்…! அதைப் பயன்படுத்தித் தியானத்தில் வெளியிலிருந்து
எடுக்கின்றோம்…
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது அந்த அலைகள்.
2.உங்களிடம் இந்நேரம்
வரையிலும் அதைப் பதிவு செய்துள்ளேன் (ஞானகுரு)
3.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் பொழுது கண்ணான ஆண்டனா மூலமாக உங்கள் உடலுக்குள் அதைச் சேர்த்துப் பதிவாக்குகின்றது.
மீண்டும் இதே மாதிரி இந்த எண்ணத்தை எண்ணி வரப்படும் பொழுது
அந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின்
சக்தியை இழுத்து நமது கண் ஆன்மாவாக மாற்றிச்
சுவாசித்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.
இந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உமிழ் நீராக மாறி நம்
உடலில் இந்தச் சத்தைச் சேர்க்க
வேண்டும்.
1.இப்படி ஒவ்வொரு உடலிலும் உள்ள அணுக்கள் துருவ
நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்குத்
2.தனித்து இயக்கச் செய்வது தான் இப்பொழுது
நம்முடைய வழி.
ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் விஷத்தன்மையான
உலகில் சீக்கிரம் இதைக் பெற்றுக்
கொண்டீர்கள் என்றால்… உங்கள் உடலும் நன்றாக இருக்கும் உங்கள்
குடும்பமும் நன்றாக இருக்கும்… உங்கள்
ஊரும் நன்றாக இருக்கும்… உலகமும் நலம்
பெறும்.
உலகமே என்றால்… அந்த உணர்வுகள் எல்லாமே நம் உடலுக்குள் அடங்கி
இருக்கின்றது… யாரும் பிரிந்து இல்லை…!
1.அந்த உலக இயல்பு நமக்குள் கேட்டறிந்த உணர்வு பதிவாகி மீண்டும் நமக்குள் இயக்கிக் கொண்டிருப்பதனால்
2.அதை மாற்றுவதற்காக என்
குருநாதர் எப்படி எனக்குச் செய்தாரோ
அதே மாதிரி உங்களுக்குச் செய்கின்றேன்.
உங்களைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரவில்லை. நீங்கள் எல்லாம் தெளிவாக வேண்டும்
என்று தான் கொண்டு வருகின்றோம். அதை நீங்கள் நல்ல வழிக்குப்
பயன்படுத்த வேண்டும்.
நல்ல வழியில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும்
தீமைகளை நீக்கி இனி பிறவியில்லா நிலையை அடையலாம்.
ஆனால் ஆசையை எங்கேயோ வைத்து என் தொழில் இப்படி இருக்க வேண்டும் நான் இப்படி இருக்க வேண்டும்
நான் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற
எண்ணத்தில் இருந்தால் அந்த ஆசை எங்கேயோ
போய்விடும்…!
1.அது ஒன்றிலேயே போகும்… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்.
2.கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆவாய்
சொன்னது போன்று
3.எதன் மேல் ஆசைப்படுகின்றோமோ அதன் வழியில் “படுபாதாளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்…”
ஆகவே… நமது ஆசையினுடைய உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு சென்றால் அங்கே இணைந்து
இருளை நீக்கி ஒளியின் உணர்வாக மாற்றிவிடும்.
அந்த நிலை பெறச்
செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லி வருகின்றேன்.
முதலில் உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள். அம்மா அப்பாவின் அருளால் “மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவரின் அருள் பெற வேண்டும்” என்று அடுத்து ஏங்குங்கள். (என் குரு தான் எனக்கு இந்த வழியைக் காட்டினார்).
அன்னை தந்தை என் உடலை உருவாக்கியது… எனக்கு ஒரு நல்ல வழியையும் உணர்த்தியது… அது குருவாகவும் இருக்கின்றது. அதனால் அவர்களை முதலில் எண்ண வேண்டும்.
அதே சமயத்தில்
1.இந்த மனித உடலுக்குப் பின் எங்கே என்ற
நிலையில் இருளை நீக்கி ஒளி பெறும் உணர்வுகளை உபதேசித்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
2.அந்த உணர்வை அவர் சொன்ன வழியில் நாம் பின்பற்றினோம்.
3.அவர் நுகரச் சொன்னதை
நுகர்ந்தேன்… அந்த உணர்வு என் உடலில் என்ன செய்தது…? என்று அறிந்தேன்.
4.அதைப் போல் நுகர்ந்த
உணர்வுகள் என்ன செய்யும்…? என்று உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.
5.இதை உணர்ந்தால் உங்கள் தீமையை நீங்களே
போக்கிக் கொள்ள முடியும்.
பன்றி எப்படிச் சாக்கடையில்
உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்ததோ அதைப் போல்
சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்திலிருந்து
அந்த அருள் ஞானியின் உணர்வை நீங்கள் சுவாசித்து “உயிரை ஒளிமயமான நிலைகள் பெற முடியும்….”
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியும் நீங்கள் தெய்வீகப் பண்பும் தெய்வீக
அன்பும் தெய்வீக சக்தியும் பெற வேண்டும். உங்கள் சொல்லிலே வைரத்தைப் போன்று
ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும்.
தங்கம் எப்படி மங்குவதில்லையோ
அதை போன்று மனது மங்காத நிலைகளை நாம் கொண்டு வர வேண்டும்.
மலர் எப்படி நன்றாக நறுமணங்கள் கொடுக்கின்றதோ உங்கள் சொல் மற்றவரை நல்ல மணங்களாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்.
அந்தச் சக்தி பெறுவதற்குத் தான் இப்பொழுது நாம் இதைச் செய்கின்றோம். ஆகையினால் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருங்கள்.
இது பேராசையும் கூட…!
1.உங்கள் உடலில் உள்ள
எல்லாவற்றிற்கும் பெற வேண்டும்…
2.எல்லோருக்கும் இந்த மாதிரிச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பேராசையாக மாறுகின்றது.
3.நானும் பெறுகின்றேன்…
நீங்களும் பெறுவீர்கள்.
4.எல்லோரும் பெற வேண்டும் என்ற பொழுது இந்தப் அந்தப் பேராசை நமக்குள் வளரும்.
ஆனால் நான் சொல்லிவிட்டு உங்களை ஏமாற்றினேன் என்றால் அது பேயாசை. சாமி பெயரைச் சொல்லி அடுத்தவரை ஏமாற்றுவதற்கு
நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால் அது பேயாசை. அவர்களையும் கெடுத்து நீங்களும் கெட்டு மற்றவர்
பெறக்கூடிய நல்ல உணர்வைத் தடுக்கும் நிலை வந்துவிடும்.
ஏனென்றால் ஒவ்வொரு உடலில் ஒவ்வொரு விதமான தீமைகள் உண்டு.
1.அந்தத் தீமைக்கு நாம்
சிறிது இடம் கொடுத்தால் அதன் வேலையைச்
செய்ய ஆரம்பித்து விடும்.
2.நாம் செல்லும் நல்ல பாதையைத் திசை திருப்பி வேறொரு வழிக்கு
நம்மை அழைத்துச் செல்லும்.
3.முதலில் தெரியாது… பின் சிக்கலான பிற்பாடு… அந்த வேதனை வந்த பின் தான் நாம் உணர முடியும்.
இதைப் போன்ற தீமைகள் சந்தர்ப்பத்தால்
எத்தனையோ வகையில் உருவாகின்றது. அதிலிருந்து நாம் தப்புவதற்காக வேண்டி மீண்டும்
மீண்டும் இதை “எச்சரிக்கை செய்கின்றேன்…”
உங்கள் உணர்வனைத்தையும் உங்கள் அம்மா அப்பாவின் மேல்
செலுத்துங்கள். அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.
1.குருதேவர் அறிந்துணர்ந்த சக்தியான துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள்
பேரொளி நாங்கள் பெற வேண்டுமென்று
2.உங்கள் ஏக்கத்தைக் கண்ணான
கருமணியில் செலுத்துங்கள்.
ஏனென்றால் எதுவாக இருந்தாலும் கருமணியில் தான் படமாகின்றது.
அந்த உணர்வு தான் நரம்பு வழி எல்லாவற்றிற்கும் உணர்த்துகின்றது.
ஆகையினால் இதைக்
கருமணியில் எடுத்து கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றினால்
1.இந்த உணர்வுகள் உயிர் வழி இழுக்கச் செய்து அந்த
உணர்வை நம் உடலுக்குள் பரப்ப முடியும்.
2.கொஞ்ச நாட்கள் இப்படிப் பழகி விட்டால் எல்லா அணுக்களுக்கும் இந்த வீரிய
சக்தியை ஊட்டும் பொழுது நமக்குள் தீய சக்தி குறையும்.
மனித வாழ்க்கையில் தீயவர்களைப் பார்த்து அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில்
கலக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல சக்திகள்
தணிந்து தீய சக்தியே நமக்குள் விளைகின்றது.
1.அந்தத் தீய சக்தியை நீக்கி அதைக் குறைத்து நல்ல சக்தியை வளர்ப்பது தான் நம் தியானத்தின்
நோக்கம்.
2.ஆக உங்களுடைய மனதை இதைப் போல் தெளிவாக்கித் துருவ நட்சத்திரத்தின் பால்
நினைவைச் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்.