ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2024

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது

இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் போய்க் கொண்டிருக்கின்றது


விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம்… ஆனால் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
 
ஒரு நாட்டில் மாட்டு வண்டியிலே சாமான்களை ஏற்றிச் செல்கின்றார்கள் சந்தர்ப்பத்தில் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டால் மாடுகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அங்கே அருகில் இருக்கக்கூடிய மக்கள் ஓடிச்சென்று
2.உணவுக்காக அந்த மாட்டினுடைய தசைகளை இரக்கமற்று அறுத்து எடுத்துச் செல்கின்றார்கள்
3.அதிலே அடிபட்ட மனிதனின் தசைகளையும் கூட அறுத்து எடுத்துச் சாப்பிடச் செல்கின்றார்கள்.
 
இன்றைய உலகம் மிகக் கொடுமையான நிலைகளில் இப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது,.
 
இத்தகைய நேரத்தில் ராமாயணத்தில் கூறியது போல நாம் சிறிது காலமே வாழ்க்கை வாழ்கின்றோம்.
 
1.இதற்குள் நாம் மனதை ஒன்றாக்கி உடலுக்குள் ஒன்றென இயக்கி
2.இந்த உடலில் துரு நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி
3.உயிருடன் ஒன்றும் உணர்வை ஒன்றாக சேர்த்து
4.அந்த உண்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
 
கூட்டுத் தியானங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தும் போது நமக்குள்ளும் வளர்கின்றது தீமைகளை அகற்றும் சக்தி இந்தப் பூமியிலும் பரவுகின்றது… நம் உடலுக்குள்ளும் அது பெருகுகின்றது.
 
கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படித் தீமைகளைப் பிளந்ததோ அதே போன்று மனிதர்களா இருக்கக்கூடிய நாம்
1.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இந்தப் பூமியில் கலந்திருப்பதை அந்த உணர்வைப் பெருக்கி
2.தீமையை நீக்கும் அந்தச் சக்தியை நாம் சுவாசித்து
3.நமக்குள் தீமை புகாது தடுத்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
4.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.
 
விஷ உலகமாக மாறிவரும் வேளையில் இன்று இருக்கக்கூடிய மனிதர்கள் இனிமேல் எப்படி எல்லாம் செயல்படுத்துவார்கள்…? என்று சொல்ல முடியாது.
 
இந்த உலகையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார்கள் எதிர்பாராதபடி ஒருவருக்கொருவர் ஏவினால்
1.அந்தக் குண்டுகள் வெடித்தால் இந்தப் பூமியில் பரவத்தான் போகின்றது
2.விஷக் கதிரியக்கங்கள் அதிகமாகப்படும் பொழுது சூரியனின் ஒளிக்கதிர்களைத் தடுக்கத்தான் போகின்றது.
 
அப்படித் தடுத்து நிறுத்தி விட்டால் சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவவில்லை என்றால் துருவத்தில் எப்படிப்னிப்பாறைகள் உறைகின்றதோ அதைப் போன்று
1.நாம் இருக்கும் இடங்களில் பனிப் பாறைகள் உறைந்து
2.உயிரினங்களே அனைத்தும் மறைந்து போகும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.
 
அப்போது பூமி சூரியனைக் கடந்து விலகிச் சென்றுவிடும். இயக்கச் சக்தி கடந்தால் இந்தப் பிரபஞ்சமே சுக்குநூறாகிவிடும்… பின் பிரபஞ்சம் இல்லை
 
ஆனால் இங்கே உயிரணுவாகத் தோன்றி
1.வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழும் நிலை பெற்றவர்கள்
2.எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் அழிவில்லாதபடி அவர்கள் வாழுகின்றார்கள்.
 
அதை நீங்கள் பெற விரும்பினால் அது எளிதில் பெறக்கூடிய சக்தி தான் கடினமில்லை கடும் தவம் இருக்க வேண்டிய அவசியமில்லை
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டே வந்தால் போதுமானது.
2.அதன்படி வாழ்க்கையே நீங்கள் தியானம் ஆக்கிக் கொள்ளுங்கள்.