நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்
மனிதனால் விடப்பட்ட தீய அணுக்களின் தன்மை தாவர இனங்களில் பட்டிருந்தால் அதிலே விஷ கிருமிகள் உருவாகித் தாவர இனங்களைத் தின்றுவிடும்.
ஆனால்
1.மகரிஷிகளின் அருள்
சக்திகளை நாம் மேகங்களில் கலக்கச் செய்து அது மழையாகப் பொழிந்து
2.அந்த நீர் பூமியிலே பொழிந்து செடிகளில் பட்டால் செடியில் வரும் மணத்தை நுகர்ந்து
அணுவாகி
3.அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை
நுகர்ந்து அதனுடைய மலம் செடிகளில் படும்பொழுது
உரமாகும்.
ஆகவே அடிக்கடி நாம் மகரிஷியின் அருள்
சக்திகளை மேகங்களுடன் கலக்கச் செய்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நாம்
தியானித்து வருதல் வேண்டும்.
தியான வழிகளில் எடுத்து நாம்
இதைச் செய்தோம் என்றால் மற்ற விஷக்
கிருமிகள் தாவர இனங்களுடன் படரப் படும்பொழுது அதைச் செயலற்றதாக்க
முடியும்.
ஏனென்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவிரவாதம் சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை போன்ற
உணர்வுகள் தொடர்ந்து இந்தக் காற்றிலே படரப்படும் போது
தான் அத்தகைய கிருமிகள் உருவாகின்றது.
1.நீங்கள் வேதனையுடன் ஒரு செடிக்கு நீரை
ஊற்றிப் பாருங்கள்… இந்தச் செடி கருகிவிடும்
2.நீங்கள் வேதனையுடன் தொழில் செய்தால் அது
வீணாகிவிடும்.
ஆனால் வேதனை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களின்
உணர்வுகளையும் மேகங்களில் கலக்கச் செய்து மழை நீராகப் பொழியச் செய்தோம் என்றால் இந்தக் காற்றில் உள்ள நச்சுத் தன்மைகள் குறையும்.
தாவர இனங்களில் படும்
பொழுது நல்ல அணுக்களாக உருவாகும் தாவர இனங்கள் செழித்து வளரும் அதனுடைய மலங்கள் செடிகளுக்கு நல்ல
உரமாகும்.
இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். அப்படி வந்துவிட்டால் நம் நாடும் செழிக்கும்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி என்பது போன்று
1.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன்
பெற்ற அருள்
2.இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதை நாமும்
பெற்று நமக்குள் வரும் இருளை நீக்கி
3.நமது மூச்சும் பேச்சும் புவியில் உள்ள
இருளை நீக்கி கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கி
4.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வுகள்
பெறச் செய்ய முடியும்.
அந்த அருள் ஞான சக்தி நீங்கள்
பெற குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெற்று இருளை நீக்கி
உலக இருளை நீக்கி… அருள் வழி வாழச்
செய்யும் அருள் ஞான உலகைச்
சிருஷ்டிக்கும் சக்தியாக “உங்கள் மூச்சலைகள் படரட்டும்…”
உங்கள் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் அந்த அருள் வழி
வளரட்டும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் உலகமாக சிருஷ்டியுங்கள்.
1.இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான நிலையாக இருள் சூழச் செய்யும் நஞ்சிலிருந்து
விடுபட்டு
2.அருள் ஞான வாழ்க்கை
வாழ்ந்து மெய் ஞானத்தின் உணர்வின் தன்மை பெற்று மகரிஷிகளின்
அருள் வட்டத்தில் வாழ்ந்து
3.நம்மைக் காப்போம்… ஊரைக் காப்போம்… உலகைக் காப்போம்… என்ற உணர்வுடன்
நாம் வாழ்வோம்.
இந்த உடலுக்குப்பின் நாம் பிறவி
இல்லை என்ற நிலையை அடைவோம்.