துருவ நட்சத்திரத்தின் சக்திகளை “நாம் ஏங்கிப் பெற வேண்டும்”
உங்களுக்குள் அரும்பெரும் சக்தியான துருவ நட்சத்திரத்தின்
உணர்வினைப் பெறும்படி செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.அகஸ்தியன் எப்படித் தாய் கருவிலிருந்தே
தீமைகளை நீக்கினானோ அதை நுகர்ந்தறியப்படும் பொழுது
2.நீங்கள் நுகரும் உணர்வுகள் உங்கள்
இரத்தத்திலே கருத்தன்மையாக உருவாகி உடல் முழுவதற்கும் பரவச் செய்து
3.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இருளை
நீக்கும் அருள் ஒளியைப் பெருக்குவது தான் இது.
அடிக்கடி நாம் சேர்த்து இதைப்
பெருக்கிக் கொண்டு வந்தோம் என்றால் எல்லா உறுப்புகளிலும் தீமையை நீக்கும்
உணர்வுகள் “அந்த ஒளி என்ற உணர்வின் அறிவுகள்” பெருகுகின்றது.
இந்தத் தியானத்தை கற்றுக் கொண்டவர்கள் எந்தச்
சந்தர்ப்பத்திலும் கஷ்டப்படுவரையோ சங்கடப்படுபவரையோ வேதனைப்படுவரையோ அவர்கள்
உணர்வு நம்மை இயக்காதபடி தடைப்படுத்த வேண்டும். உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
காரம் புளிப்பு உப்பு அதையெல்லாம் சேர்த்துச் சமைத்துச்
சுவையாக எப்படி மாற்றிக் கொள்கின்றோமோ அதைப் போன்று சமப்படுத்திக் கொள்ள முடியும்.
நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும்… ஒருவர் கோபப்படுகிறார் என்று பார்த்தோம் என்றால் நமக்கும் அதே
உணர்வு தோன்றுகின்றது அவன் மேல் வெறுப்பு வருகின்றது…
ஆத்திரம் வருகின்றது.
அந்தக் கோபத்தால் வேதனைப்படுபவரைப் பார்க்கும் பொழுது அந்த
வேதனையும் கலந்து வருகின்றது. அந்தக் கோபமும்
வேதனையும் நம் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது அத்தகைய உணர்வின் அணுக்கள் உருவாகி
விடுகின்றது.
இது உடல் முழுவதும் பரவப்படும் பொழுது நம் உறுப்புகளையும்
வீணாக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம்
விடுபடுதல் வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்
பழகிக் கொண்டால்
2.உங்கள் இரத்தங்களிலே விளைந்து வரும் அந்தத் தீமையான நிலைகளை அடக்க முடியும்.
ஏனென்றால் வேதனைப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ நுகர்ந்தால் அவைகள்
எல்லாம் இரத்தத்தில் முதலில் கருவாகி முட்டையாகின்றது.
தொடர்ந்து அவர்களை நினைவுக்குக் கொண்டு வந்தால் பருவம்
அடைந்து வெடித்துக் குஞ்சாக மாறுகின்றது அதற்குண்டான கருத்தன்மை இல்லை என்றாலும் கூட அந்த விஷத்தின் தன்மை ரத்தத்துடன் கலந்து மற்ற
உறுப்புகளுக்குச் சென்று அதை வீணாக்குகின்றது.
1.அணுவாக ஆனாலும் சரி அணுவாக ஆகாதபடி அந்த
முட்டை அழுகிச் சென்றாலும்
2.அழுகிய உணர்வு ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும்
படர்ந்து எந்த உறுப்புகளில் அது சேர்கின்றதோ அதைப் பாழாக்குகின்றது.
3.இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்
உடலுக்குள் பல விதமான தொல்லைகளைக் கொடுக்கும் அணுக்களாக விளைந்து விடுகின்றது.
அதிலிருந்து விடுபடுவதற்கு உங்களுக்கு துருவ
நட்சத்திரத்தைப் பற்றி உபதேசித்து அதை உடல் முழுவதும் பரவச்
செய்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்து உணர்வினை நினைவூட்டி அதை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை
உங்களுக்கு இப்போது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும்
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ
நட்சத்திரத்தினுடைய சக்திகளை நேரடியாகச் செலுத்தும் பொழுது உடலுக்குள் அந்த சக்திகள் செல்கின்றது
2.கண் வழி அந்த நரம்பு
மண்டலங்கள் வழி சென்று உடல் உறுப்புகளை இயக்குகின்றது
3.அதன் வழி துருவ
நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் பெருக்கிக் கொள்வதற்குப் பழகிக் கொள்ளுதல் வேண்டும்.
தீமைகள் எப்படி உடலுக்குள்
ஊடுருவி இயக்குகின்றதோ இதைப் போன்று “கண்ணின்
நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நமக்குள் எல்லா அணுக்களுக்குள்ளும் ஊடுருவச்
செய்து” அதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.
1.எந்த அளவிற்குத் துருவ
நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ
2.நிச்சயம் உங்கள் உடலிலே தீமையை நீக்கும் உணர்வின் அணுக்களாக விளைந்து
3.இந்த வாழ்க்கையில் தீமையை நீக்கும் ஞானத்தின் வழி கொண்டு அருள் உணர்வைப் பெருக்கி
4.இந்த உடலுக்குப் பின்
பிறவில்லா நிலை நிச்சயம் அடைய முடியும்