போகாப்புனல்
நாம் எடுக்கும் தியானத்தின் வலுகொண்டு உடலை
விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் அனைத்தையும் சப்தரிஷி மண்டலத்துடன்
இணையச் செய்து உடலில் பெற்ற நஞ்சினை கரைக்கச்
செய்து பிறவில்லா நிலையை அடையச் செய்வோம்.
உடலை விட்டுச் சென்ற அந்த
ஆன்மாக்கள் துயர்படும் உணர்வினைக் கரைத்து விட்டு துயரற்ற உணர்வாக என்றும் ஏகாந்த நிலை வாழ முடியும். இது மனிதனின் கடைசி நிலை பிறவி இல்லா நிலை.
1.எத்தனையோ கோடித்
துன்பங்களை அனுபவித்தோம்… மனிதனான பின் துன்பத்தை அகற்றிடும் அருள் சக்தி பெற்றோம்
2.துன்பத்தை அகற்றி நஞ்சினை வென்று உணர்வினைப் பேரருளாக மாற்றிய
3.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருளை
நாம் பெற்று நமக்குள் உருவாக்கிக் கொண்டால் ஏகாந்த நிலை அடையலாம்…
4.இருளை மாற்றி ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்குதலே
மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை.
அது தான் பிரம்மாவைச் சிறை
பிடித்தான்.
தீமை அகற்றிய அருள் ஞானிகள்
உணர்வை நுகந்து பகைமை என்ற உணர்வோ
நஞ்சு என்ற உணர்வோ இருள் என்ற உணர்வோ
அறியாமை போன்ற நிலைகளையோ மாற்றிப்
பேரருள் உணர்வுகளை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.
வாழ்க்கையில் நமது ஆசைகள் எவ்வாறு பக்தி கொண்டோ மற்றவர்
அன்பு கொண்டோ நமக்குள் வளர்த்தாலும் பக்தியின் நிலைகள் கொண்டு வேதனை என்ற உணர்வுகள் கலந்தால் அன்பு கொண்டு அந்த உணர்வின்
தன்மை அரவணைத்தாலும் அதனுடன் இணைந்து அந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக வரப்படும் பொழுது சாகாக் கலை.
இந்த உடலில் எதனை வளர்த்தோமோ இந்த உணர்வின் தன்மை மற்ற
மனிதனின் உடலுக்குள் சென்று சாகாக்கலையாக இதையே உருவாக்கும்.
ஒரு மனிதன் நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகின்றது உயிர்
வேகுவதில்லை. ஆகவே
1.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் வலுவாகத்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் நாம் ஒன்றிவிட்டால் வேகாநிலை
அடைகின்றது.
3.பிரபஞ்சத்திலும் அகண்ட அண்டத்திலும் வரும் நஞ்சு இதை அழித்து
விட முடியாது.
இதைத் தான் சாகாக்கலை வேகாநிலை போகாப்புனல் என்று அன்று வள்ளலார் பாடியது.
இந்த வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சாகாக் கலையாக மாறுகின்றது அருள்
ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றினால் வேகாநிலை என்ற நிலை பெறுகின்றது.
போகாப்புனல்…! பேரருள் என்ற உணர்வின் தன்மை
நமக்குள் பெருக்கிக் கொண்டால் இன்னொரு உடலுக்குள் புகுவதில்லை நாம் பிறவியிலா நிலை அடைய முடியும்.
இந்த வாழ்க்கையில் சாகாக்கலை என்ற நிலையிலிருந்து
1.உணர்வுகளை உயிருடன் ஒன்றி வேகாநிலை அடைந்தால்
2.இன்னொரு உடலுக்குள் போக முடியாது என்று
அன்று வள்ளலார் தெளிவாகப் பாடியுள்ளார்.
அவர் சொன்ன மூலக்கூறை
நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அருள் பெறும் ஜோதி நீ தனிப்
பெரும் கருணை… நாம் எதையெல்லாம்
எண்ணுகின்றோமோ அந்த அருளைப் பெறுகின்றது உயிர். அது தனிப் பெரும் கருணையாக வளர்கின்றது
நாம் எண்ணியது எதுவோ அதன் உணர்வின் அறிவாக நம்மை இயக்குகின்றது என்ற நிலையினை தெளிவாக அவர் கூறியுள்ளார் இராமலிங்க அடிகள்.
1.அவர் பெற்ற உண்மையின் உணர்வுகளும் அவர்
வெளிப்படுத்திய நிலைகளும் இங்கே உண்டு
2.அவர்கள் பெற்ற அருள் ஞானத்தைப் உணர்வினை
நாமும் நுகர்ந்தறிய முடியும்.
3.வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும்
என்றும் பேரானந்த நிலை கொண்டு வாழ முடியும்.
அந்த நிலையை நாம் அனைவரும் பெறுவோம்.