“துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபணுவை” நாம் பெற வேண்டும்
விவேகானந்தர் இராமகிருஷ்ண
பரமஹம்சரிடம் செல்லும் பொழுது கடவுளை
இப்பொழுது நீ காட்ட வேண்டும் என்று கேட்கின்றார்,
கடவுளைக் காட்ட முடியாது… நீ உணரலாம் என்று தான் அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார்…!
1.நீ நுகர்வது உன் உடலுக்குள் நின்று… அது உள் நின்று இயக்கும் கடவுள்தான்
2.அந்த உணர்ச்சியை ஊட்டுவது கடவுள்.
3.கடவுளை நீ உணர்ச்சி மூலமாகத் தான் பார்க்க முடியும்… நீ கண்ணில் பார்க்க
முடியாது என்றார்.
அப்பொழுதுதான் விவேகானந்தர் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.
அவருடைய பாடத்தையே திருப்பி எடுத்து இவர்களுடைய சுகபோகங்களுக்கு
இப்பொழுது மாற்றிக் கொண்டு உள்ளார்கள்.
ஒவ்வொரு ஞானிகளும் தத்துவத்தை உரைக்கின்றனர்.
1.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு
2.பண்பு கொண்ட நிலைகள் உயர வேண்டும் என்று
எண்ணு அந்த உணர்வே உனக்கு வழிகாட்டும்
3.அதன் வழியில் உனக்கு நல்வழி காட்டி அன்பை வளர்க்கச் செய்யும்…
கடவுளை நீ அங்கே பார்க்கலாம்.
அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அதே உணர்வு உனக்குள் உள் நின்று இயக்குகின்றது.
அது கடவுளாக உன் எண்ணத்தைச் சீர்படுத்துகின்றது… நல்வழி
காட்டுகின்றது பகைமை உணர்வுகளை மாற்றுகின்றது… பகைமையற்ற
வாழ்க்கையை வாழுகின்றது.
தன் குடும்பத்தில் எப்படிப்
பற்று வைக்க வேண்டும் என்றும் அரசியல் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் பக்தி
மார்க்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஆலயத்தில் நீ எப்படி பண்புகளை
சேர்க்க வேண்டும் என்றும் விவேகான்ந்தர் சொன்னார்.
அதையெல்லாம் படிக்கின்றார்கள் ஆனால் மூலையில் போட்டு வைத்து விடுகின்றார்கள்.
1.கோயிலுக்குச்
சென்றால் கடவுளை நீ எப்படி வணங்க வேண்டும்…?
2.தெய்வத்தை நீ எப்படிப் பார்க்கின்றாய்…?
3.கடவுளை ஏப்படி நேசிக்கின்றாய்…?
4.எதன் வழி கடவுள் உன்னை இயக்குகின்றார்…? என்று தெளிவுறக் கூறியுள்ளார் விவேகானந்தர்.
அதையாவது நாம் இன்று எடுத்துள்ளோமா என்றால் இல்லை…!
அவரைப் பற்றிய புத்தகங்கள் பல வரும்… அதன் வழி பிழைப்புக்கு. விவேகானந்தரைப் பற்றிப் பெருமையான
பேச்சுகளைப் பேசுவோம் ஆனால் உண்மை நிலைகளில்
நாம் கடைபிடிக்கும் தன்மையை இழந்துள்ளோம்.
ஆகவே விஞ்ஞான உலகில் இன்று எங்கோ சென்று விட்டது. மரபு
அணுக்களை வைத்து எப்படி எப்படிப் புதிது புதிதாக உருவாக்கலாம் என்று.
ஆனால் தீமையை அகற்றிய உணர்வின் தன்மை
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் நுகர்ந்தால்
2.அந்த உணர்வினை நமக்குள்
உருவாக்கிப் பகைமையை மாற்றி
3.பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று விநாயகர் தத்துவத்தைக் கூட்டினான் அன்று அகஸ்தியன்.
அந்த மரபணுவை நாம் பெற முடியும்… ஏன் உங்களுக்கு இந்த
நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது…?
இந்த நிலை பெறச்
செய்வதற்குத் தான் இந்த பௌர்ணமி நாளன்று ஆன்மாக்களை
மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்படி சொல்கிறோம்.
1.மூதாதையர்கள் அங்கே
செல்லப்படும் பொழுது “நம்மைக் காத்திட வேண்டும் என்ற மரபணு” நம்
தீமையை அகற்றி நம்மைக் காக்கும்.
2.ஒளி நிலை அடைந்த நிலைகள்… பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க முடியும்
என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
ஆனால்… சுட்ட சாம்பலைக்
கரைத்து விட்டு மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று விநாயகர் கோயிலுக்குச் சென்று மோட்ச தீபம் காட்டிவிட்டு வருவது அல்ல.
மனித உடலுக்குள் வந்த பகைமை
உணர்வை மாற்றிவிட்டு ஒளி என்ற உணர்வினை உருவாக்கி அந்த
ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் துருவ நட்சத்திரமாக…!
1.அனைவரும் இதை எளிதில் பெற முடியும்
2.அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும்
3.மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும்
4.மெய்ப்பொருள் காண முடியும்… இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
ஏதோ சாதாரணமாகச்
சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்.
உணர்வின் அழுத்தத்தால் நுகரச்செய்து உணர்வின் அணுக்களை உங்களுக்குள் உருவாக்கிய நிலை கொண்டு அதை வளர்த்துக்
கொண்டால் உங்களில் வரும் பகைமையை மாற்றிப் பேரருள் என்ற
உணர்வை ஊட்டி, இனி பிறவியில்லா நிலை அடையலாம்,
குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம். பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம். பரிவான நிலைகளில் வாழவும் முடியும். பரிவால் வரும் தீமை அகற்றும்
வல்லமையும் பெறுகின்றீர்கள்.
ஆகவே…
1.அந்த அகஸ்தியனின் மரபு அணுக்களைப் பெறுவதற்குத் தான்
2.அன்று விநாயக தத்துவத்தைக் காட்டினார்கள்
ஞானிகள்.