நம் உடல் உறுப்புகளுக்குச் சக்தி கொடுக்கும் சரியான முறை
அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்
அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும்
பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின்
பால் செலுத்தி
2.அதனின்றி வரும் பேரருளும் பேரொளியும்
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அதை ஈர்க்கும் சக்தி பெறும் பொழுது “கருமணிகளில் கனமான உணர்வுகள்” வரும்.
இப்பொழுது உங்களுக்குள் புருவ மத்தியில் ஈசனாக இருந்து
இயக்கிக் கொண்டிருக்கும்
1.“உயிரை எண்ணி” அங்கே
கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்… கண்களை மூடுங்கள்.
2.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும்
பொழுது
1.உயிரின் இயக்கம் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் வலுவைப் பெறும் போது உங்களில் ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் புருவ
மத்தியில் மோதும் பொழுது உணர்ச்சிகள் அழுத்தமும் ஒளிக் கற்றைகளும் தெரிய வரும் “வெளிச்சமாக…”
இவ்வாறு ஏங்கித் தியானித்தால் நம் உடலில் தீமை விளைவிக்கும்
அணுக்களுக்குத் தீய உணர்வுகள் உள் புகாது
தடைப்படுத்துகின்றோம். உடலுக்குள் தீய உணர்வுகள் சென்று தீய அணுக்களாக
வளராது தடுக்கின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த
நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை
இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது கண்களால் இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.இரத்தங்களில் உள்ள கருமுட்டைகளோ தீய அணுக்களோ
எது இருப்பினும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும்
பொழுது “நல்ல அணுக்களாக” மாறும் சக்தி
பெறுகின்றது நம் இரத்தத்தில்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல்
முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புகளை
உருவாக்கிய அணுக்களில் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவரும்படி
ஏங்கித் தியானியுங்கள்.
இப்பொழுது உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் துருவ
நட்சத்திரத்தின் பேரொளி பெறும் பொழுது உங்கள் உடல் முழுவதற்கும் “ஒரு புது நல்ல உணர்ச்சிகள் ஏற்படும்… இதை
நீங்கள் உணரலாம்…”
1.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களில்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும்
சந்தர்ப்பத்தை நீங்கள் இப்பொழுது உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்
இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரத்தத்தின் வழி உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில்…
படிப்படியாக எல்லா உறுப்புகளிலும் தசை மண்டலம் தோல் மண்டலம் வரை பெறச் செய்யும்போது… அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான சக்தி காற்று மண்டலத்தில் படர்ந்துள்ளதைக்
கவர்ந்து… “நம் ஆன்மா வலுப்பெறுவதற்கும்
சிந்தித்துச் செயல்படும் சக்தி பெறுவதற்கும்” இது ஏதுவாக
இருக்கும்.
காலையில் ஒரு ஆறு மணிக்குள் “ஒரு
அரை மணி நேரமாவது” துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலில் உள்ள
அணுக்களுக்கு இந்தச் சக்தியைக்
காலையில் எடுத்துப் பழகுங்கள்.
1.“அந்த வலுவின் துணை கொண்டு” அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் போக்கிக் கொள்ள முடியும்
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக
மாற்றிக் கொள்ள முடியும்.
பிறவி இல்லா நிலையும் அடைய
முடியும்