உத்தராயணம்
உயிரணுவாகத் தோன்றிய பின்… ஒரு உணர்வின்
சத்து உயிருடன் ஒன்றிச் சிவம் ஆகின்றது. இவ்வாறு பல கோடித் தாவர இனங்களை உணவாக
உட்கொள்கின்றது.
பல கோடித் தாவர இனங்களை உணவாக
உட்கொண்டது… இருந்தாலும் அதனுடைய தசைகளை மற்றொன்று கொன்று புசிக்கிறது. அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் உணர்வின் தன்மை வருகின்றது.
1.தன்னைத் தெளிந்து கொள்ளும்… தன்னைக்
காத்திடும் உணர்வின் அறிவின் தன்மை
அதற்குள் வந்து
2.இவ்வாறு தான் ஒவ்வொரு உடலிலும் இணைத்து
இணைத்து
3.நமது உயிர் மனிதனாக நம்மை உருவாக்கியது
என்ற நிலைகளில் மகா சிவன் ராத்திரி…!
உடலில் இருந்து வரக்கூடியதை ஆறாவது
அறிவின் தன்மை ஒன்றிலிருந்து ஒன்றை மீட்டிடும் நிலைகள் கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெற்றது
கார்த்திகேயா.
ஒரு வெளிச்சத்தைப் போட்ட
பின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் தெரிகின்றது ஆறாவது
அறிவின் தன்மை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காணும்
நிலைகள் வரும் பொழுது “கார்த்திகேயா”
என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
1.முதலிலே வரக்கூடியது அனைத்தும் தட்சிணாயணம்
2.இந்த உடலின்
நிலைகளிலிருந்து அறியும் ஆற்றல் வரப்படும் பொழுது மகா சிவன்
ராத்திரி என்றும்
3.பங்குனி மாதம் வரப்படும் பொழுது உத்தராயணம்.
4.இதற்கு முன் மாசி மாதம் வரையிலும்
தட்சிணாயணம் நடக்கின்றது… உடலுக்குள் இருள்
5.ஆறாவது அறிவு கொண்டு தட்சிணாயணம் திசை மாறி
வெளிச்சம் அதிகமாகின்றது – அது உத்தராயணம்
அறிவின் ஆற்றல் அறிந்திடும் உணர்வு கொண்டு ஆறாவது அறிவால் உத்தராயணம் தேரை வைத்து இழுப்பார்கள்… பல ஆயிரம் பேர் சேர்ந்து முருகனை வலம்
வரும்படி செய்வார்கள்.
நாம் அனைவரும் எண்ணி
1.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல்
வேண்டும்
2.உத்தராயணம் இன்னொரு பிறவிக்கு வந்து
விடக்கூடாது என்ற நிலைகளும்
3.எதை எடுத்தாலும் உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாக அவனுடன் இணைய வேண்டும் மாற வேண்டும்
என்பதற்குத்தான்
4.நமது சாஸ்திர விதிகள் இப்படிக் காட்டுகின்றது.
பங்குனி உத்திரம் அன்று உத்தராயணம் என்ற நிலைகளை வைத்து ஆறாவது அறிவை வளர்த்துப் “பிறவா நிலை
பெறும்” வழியைக் காட்டுகின்றார்கள்
ஞானிகள்.