அகஸ்தியரின் அருளைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி தாங்கள்
பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித்
தியானியுங்கள்.
அகஸ்தியன் தன் வாழ்நாளில்…
1.நஞ்சினை வென்று இருளினை அகற்றி உண்மையின்
உணர்வை அறிந்து
2.அவனில் விளைந்து
வெளிப்படுத்திய அந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டி
4.அகஸ்திய மாமகரிஷிகளின்
அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
கண்களை மூடி கண்ணின் நினைவை புருவ மத்தியில் செலுத்தி
உயிரான ஈசனிடம் வேண்டி அகஸ்தியன் அவன் வாழ்நாளில் நஞ்சை வென்று இருளை அகற்றி உண்மையின் உணர்வை அறிந்த… “அந்த அரும்பெரும் சக்தியைப்
பெற வேண்டும்” என்று ஏங்கித்
தியானியுங்கள்.
1.அந்த அரும்பெரும் சக்தியைப் பெறவேண்டும்
என்று
2.“இப்பொழுது எத்தனை நேரம் இதை எண்ணுகின்றீர்களோ”
3.ஓ…ம் நமச்சிவாய என்று
அதை உங்களுக்குள் சிவமாக்குகின்றது உயிர்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய்
ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப உங்கள்
நினைவாற்றலை உயிரான ஈசனிடம் ஒன்றி… ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.நாங்கள் என்றால் நம் உடலுக்குள் இருக்கும்
அனைத்தும் சேர்த்து நாங்கள் என்று ஆகின்றது
2.நாம் என்ற நிலையில் ஒன்றிணைந்து அந்தச் சக்தியைப் பெற வேண்டும்.
நஞ்சினை வென்ற இருளை அகற்றிய அந்த அரும் பெரும் சக்தியை நுகரப்படும் பொழுது உங்கள் உடலில் நோய் இருந்தாலும் மன நோய்
இருந்தாலும் வேதனைப்படும் நிலையோ நுகர்ந்தது இப்படிப் பல விதமான
விஷத்தன்மையாக இருந்தால்
1.அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நீங்கள்
நுகரப்படும் பொழுது
2.உங்கள் உடலில் உள்ள அந்த நஞ்சின் தன்மை பலவீனமடையும்… இந்த உணர்வினை நீங்களும் அறியலாம்.
3.இப்பொழுது நல்ல சிந்தனையின்
உணர்வுகள் உங்களில் உருவாகும்.
4.உடலில் மகிழ்ச்சி என்ற உணர்வுகளை ஊட்டும்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும்
படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில்
உள்ள ஜீவான்மா ஜீவணுக்களில் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள்
செலுத்துங்கள்.
காவியத் தொகுப்பில் “கண்ணன்
கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று காட்டியிருப்பார்கள்.
அதாவது…
1.இப்பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
2.நம் உடலுக்குள் உருப்பெறுகின்றது
குழந்தைகளாக.
அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நம் உடலில்
இருக்கக்கூடிய அணுக்களுக்குப் பெற வேண்டும் என்று கண்ணின்
நினைவு கொண்டு பாய்ச்சப்படும் பொழுது அருள் உணர்வுகளை நம்
உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் இந்த உணர்வினை அது பெறுகின்றது… இந்த உணர்ச்சி உடலுக்குள் அது உருப்பெறுகின்றது.
அது தான் கண்ணன் கருவிலிருக்கும்
குழந்தைக்கு உபதேசித்தான் என்பது.
கண்ணின் நினைவை அகஸ்திய மாமகரிஷியின் பால் செலுத்தி அந்த அகஸ்திய
மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தநாளங்களில் கலந்து உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் திருமணம் ஆகி
கணவன் மனைவி இரு மனமும் ஒன்றெனெ இணைந்து… பேரருள் பெற்று இருளை
அகற்றி நஞ்சினை வென்றிடும் அந்தப்
பேரருள் பெற்ற… “இருவரில் விளைந்த
அருள் உணர்வுகளை” நாமும் நுகர்ந்தறிந்து நம் உடலில் உருவாக்குவோம்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய்
ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம்
வேண்டி “துருவ மகரிஷி பெற்ற அந்த அரும்பெரும் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித்
தியானியுங்கள்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில்
இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய்
ஈஸ்வரா என்று… கண்ணின் நினைவை
உடலுக்குள் செலுத்தி துருவ மகரிஷி பெற்ற அருள் சக்தி உங்கள் உடலில் இருக்கக்கூடிய
அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியனும் அவர் மனைவியும் துருவத்தையே எல்லையாக வைத்து இருவரும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றித் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கும் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைப் புருவ
மத்தியில் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி
உயிருடன் இணைந்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
அதனின்று வரும் உணர்வுகளை ஏங்கி நீங்கள்
தியானியுங்கள்.
1.நுகர்ந்த உணர்வுகளை
உங்கள் உயிர் ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலுக்குள்
2.தீமைகளை அகற்றிடும் பேரருள் பெறும் அருள் ஞானத்தை உங்களுக்குள் அணுவாக உருவாகச் செய்யுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி… “உயிரின்
துணை கொண்டு துருவ நட்சத்திரத்தில் இணைத்து” அதனின்று வரும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய்
ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துவிட்டு
2.அதன் உணர்வை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி
இதைத் தியானியுங்கள்
உங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களும் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.