ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 15, 2024

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்


அகஸ்தியன் தான் கண்ட உண்மைகள் அனைத்தையும் தன் மனைவி பெற வேண்டும் என்று தன் மனைவிக்குச் சொல்கிறான். அதன் வழி கொண்டு
1.இருவருமே துருவத்தை உற்று நோக்கி அந்த ஆற்றலை நுகரும் பொழுது துருவ மகரிஷியாகின்றார்கள்.
2.துருவத்திலிருந்து வரக்கூடிய உணர்வை தங்களுக்குள் உருவாக்கும் சக்தி பெறுகின்றார்கள்.
 
துருவத்தின் வழியாக நுகரும் தன்மை வரும் போது 27 நட்சத்திரங்களின் மின்னணுக்களை அது பரப்புகின்றது. அதை உற்று நோக்குகின்றனர். அந்த மின் கதிர்களைத் தங்களுக்குள் அடங்கச் செய்கின்றனர் அவர் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைப் பெறுகின்றது.
 
ஒரு நட்சத்திரமும் இன்னொரு எதிர்நிலையான நட்சத்திர உணர்வும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் அதனுடன் சேர்ந்து வியாழன் கோளின் கதிரியக்கப் பொறி தாக்கப்பட்ட பின் அனைத்தும் ஒன்றாகக் கலந்து துடிக்கும் நிலை வருகின்றது. அப்போது தான் உயிரணு என்ற நிலை வருகின்றது.
 
ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின் கதிரியக்கங்களை உருவாக்குகின்றது உயிர் எதனை நுகர்கின்றதோ உணர்வுக்கொப்ப கதிரியக்கங்களாக மாற்றுகின்றது அந்த உணர்வை உடலாக மாற்றுகின்றது.
 
அந்த உணர்வின் தன்மை உறையும் தன்மை பெற்று ஜீவ அணுவாகி அந்த அணுவின் மலம் அந்தந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகளாக உருவாகின்றது.
 
இதை எல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி தனக்குள் உருவாக்கும் தன்மை பெறுகின்றான். உண்மையின் இயக்கத்தை அறிந்தான். இந்த உணர்வின் ஆற்றலைக் கணவன் மனைவி இருவருமே தங்களுக்குள் பெருக்கிக் கொண்டார்கள்.
 
எந்தத் துருவத்தில் இருந்து வருகின்றதோ
1.அதன் வழி வரும் நட்சத்திரங்களின் உணர்வனைத்தும் நுகர்ந்து
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை இந்த உயிரைப் போன்றே
3.எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் உணர்வின் அணுக்களாக ஒன்றாக இணைத்தான்.
 
(மின்னல்) மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அளவில்லாத தூரங்களுக்குப் பரவிச் செல்கின்றது. பல லட்சம் மைல்களுக்கு அப்பால் கூடச் செல்கிறது. அந்த ஒளிக்கற்றைகளை நாம் காண நேருகின்றது உலகம் முழுவதும் பரவுகின்றது.
 
அதை எல்லாம் வானளாவிய நிலைகள் கொண்டு இருளை நீக்கி பொருள் காணும் நிலையாகக் காணுகின்றனர் அகஸ்தியனும் அவன் மனைவியும். அகண்ட அண்டம் அது எப்படி உருவானது…? என்பதையும் கண்டறிகின்றனர்.
 
1.நஞ்சினை நீக்கி ஒளியாக மாற்றிடும் அந்த சக்தி இருவரும் பெற்றபின்
2.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்று
3,ஒத்த நிலைகள் கொண்டு ஒன்றாக ஒளியாக இணைக்கின்றனர்.
 
சூரியன் பல மண்டலங்களில் இருந்து எடுக்கும் விஷத்தன்மைகளை உணவாக எடுத்துக் கொண்டாலும் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் மோதப்பட்டு விஷத்தின் தன்மையைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்கச் செய்கின்றது.
 
இதைப் போன்று தான் மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு விஷம் என்ற உணர்வு தனக்குள் சாடாது தீமைகளை நீக்கி விட்டால் உயிர் என்ற நிலையில் ஒளி என்ற நிலையை அடையும் பொழுது இருள் என்ற நிலை வராது தடுத்து ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது.
 
அப்படிப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.
 
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றிப் படரச் செய்கின்றது. “அதை மனிதர்கள் நுகர்ந்தால் இருளை நீக்கி விட்டுப் பொருள் காணும் அருள் சக்தி பெறுகின்றார்கள்.
 
அந்த அகஸ்தியனைப் போன்ற இவர்களும் வளர்ச்சி பெற்றுப் பிறவி இல்லாத நிலை அடைகின்றார்கள்.
 
துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட்டது. அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தான் உபதேசத்தின் வாயிலாக
1.உங்கள் நினைவாற்றலைத் துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்வதும்
2.உணர்வின் ஒலிகள் உங்கள் செவிக்குள் உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது
3.கண் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களை நுகரச் செய்வதும்
4.நுகர்ந்த உணர்வை உங்கள் உயிர் அத்தகைய உணர்வைப் பெற்று அதைக் கவரும் அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான்
5.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை நுகரச் செய்து கொண்டுள்ளேன் (ஞானகுரு).
 
அவ்வாறு நீங்க: நுகரும் உணர்வை உங்கள் உயிர் ஓம் நமச்சிவாய என்று இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தகுதி பெறுகின்றது.
 
துருவ நட்சத்திரம். எத்தகைய மின்னல்கள் வந்தாலும் ஒளியின் கதிராக அது மாற்றிக் கொள்கின்றது இருளை அகற்றுகின்றது.
 
சூரியன் ஒரு காலம் மங்கினாலும் துருவ நட்சத்திரம் என்றுமே மங்காது சூரியன் அழிந்தாலும் அதே சமயத்தில் துருவ நட்சத்திரம் அழியாது அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழியாது.
 
அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டு வேகாநிலை கொண்டு எதிலும் அழியாத நிலை கொண்டு ஒளியின் சரீரமாக இருக்கின்றது.
 
இவை எல்லாம் பல கோடி உணர்வுகளைக் கலந்து கலந்து மனிதன் ஆன பின் இருளை அகற்றி ஒளி என்ற நிலைகள் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி உள்ளான்.
 
அதை நாம் நுகர்ந்து வளர்த்துக் கொண்டால்
1.அகஸ்தியன் கண்ட உணர்வு நமக்குள் இனணந்து
2.இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை நாம் காத்து
3.இந்த உடலுக்குப் பின் அதைப் பற்றுடன் பற்றி நாம் அங்கே செல்கின்றோம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.