ஞானிகளின் ஆற்றல்கள் காலத்தால் எப்படி மாற்றி அமைக்கப்பட்டது…?
காட்டுக்குச் சென்று
தவம் இருக்கச் செல்வோரை எல்லாம்
வாதாபி என்ற அரக்கனும் அவருடைய சகோதரனும் சேர்ந்து
விருந்து கொடுப்பதாகச் சொல்லிக் கொன்று புசித்தவர்கள்.
“விருந்து கொடுப்பது” எங்களுடைய வழக்கம்
என்று சொல்வார்கள். அதிலே ஒருவன் ஆடாக மாறி விடுவான். அடுத்தவன்
அதை அறுத்துச் சமைத்து இந்த மாமிசத்தைச் சாப்பிட வேண்டும் என்று வந்தவருக்குக் கொடுப்பார்கள்.
சாப்பிட்டு முடிந்த பின் “வாடா வாதாபி” என்றால் வயிற்றைப் பிளந்து
வெளி வருவான். இப்படிக் கொன்று… வருவோரை எல்லாம் அவர்கள் சாப்பிட்டுப் பழகியவர்கள்..
அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது இதே முறைப்படி
அவர்கள் வரவேற்கிறார்கள். அகஸ்தியனோ, "நான்
மாமிசத்தை சாப்பிடுவதில்லை" என்கிறான்.
இல்லை…! எங்கள் முறைப்படி
விருந்தில் நீங்கள் அதைஸ் சாப்பிட்டுதான் ஆக வேண்டும் என்று
கட்டாயப்படுத்துகின்றான்.
நாங்கள் வருபவருக்கு
மரியாதை செலுத்துகின்றோம், நீங்கள்
சாப்பிடுங்கள்…! என்று கூறி வாதாபி ஆடாகப் போய்விட்டான். அறுத்துச்
சமைத்து இவனுக்கு கொடுத்தான்.
அகஸ்தியனும் நன்றாக ருசித்து சாப்பிட்டான்…! அகஸ்தியனுக்குத் தெரியும்… தெரிந்ததனால்
சாப்பிட்டான்…!
"வாடா வாதாபி" என்கின்றான் அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிப் போய்விட்டான் என்கின்றான்
அகஸ்தியன்.
ஆகா… அப்படி ஆகிவிட்டதா…? பாருடா… உன்னைக் கொன்று நான்
விழுங்கப் போகின்றேன் என்றான்.
அப்பொழுது அகஸ்தியன்
கண்ணிலே பார்த்தான்… அவனை எரித்து விட்டான்.
ஆனால் அதற்கு முன்னாடி தவ யோகிகள் தவம் செய்தவர்களை எல்லாம் இரையாக்கி ரொம்ப பேரைத் தின்றுவிட்டார்கள்.
அப்பொழுது இதற்காக வேண்டி இராமாயணம்
மகாபாரதம் எழுதுபவர்கள் சொல்கின்றார்கள், "அகஸ்தியன் கணபதியைத் தொழுது
கொண்டு இருந்தான்…" அதனால் அவனை ஒன்றுமே செய்ய
முடியவில்லை என்று...!
கணபதி என்றால் எது…?
1.இந்த பிரபஞ்சத்தின் உணர்வுகள் அனைத்தையும் கணங்களுக்கு
அதிபதி ஆக்கி
2,அவன் எண்ணத்தைக் கொண்டு ஆட்சி செய்து தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்று
3.அதற்குக் “கணபதி”
என்று காரணப் பெயரை வைக்கின்றான்.
ராஜாஜி எழுதிய நூலிலும்…
கணபதியை வணங்கிக் கொண்டிருப்பதனால், அகஸ்தியனை ஒன்றும் செய்ய
முடியவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார்.
கண ஹோமம் செய்தோம் என்றால் உங்களுக்கு எல்லாச் சக்தியும் கிடைக்கும். கண ஹோமம் செய்தால் உங்களுக்கு வல்லமை கிடைக்கும்
உங்கள் பாவம் அனைத்தும் நீங்கும். யாரும் ஒன்றும் தீங்கு செய்ய முடியாது என்று “இதற்குக் காரணம் காட்டுவதற்காக”
இப்படி எழுதுகிறார்கள். ராஜாஜி படித்தவர் அரசியல்வாதி தான் உலக
ஞானத்தைப் பெற்றவர் தான்.
ஆனால் அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தின்
இயக்கத்தைப் பல நூல்களில் வடிவமைத்து உலக ஞானத்தைக் கற்றவர் நேரு.
பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் தான் நேரு. அந்த நிலைகளில் வளர்ந்தாலும் இந்த உலக உண்மையின் உணர்வின்
தன்மையை அறிந்தவன்.
1.இது எல்லாம் பொய்… இப்படிச் செயல்படுத்த கூடியது அனைத்தும் பொய்யானது
2.இவையெல்லாம் தவறான செயல் என்று
சுட்டிக்காட்டினார் நேரு.
ஆனால் ராஜாஜி ரொம்ப சாணக்கியமாகச் சொல்கின்றார். ராமாயணத்திற்கும்
மகாபாரத்திற்கும் ஜீவன் ஊட்டி மக்கள் இதைப் பின்பற்றினால் இப்படி இருக்கும் என்று ஜீவன் கொடுத்தவர் ராஜாஜி… ஆனால்
வக்கீல்… வல்லமை பெற்றவர்.
இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் இயற்கையின்
உண்மையின் நிலைகளைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
அறியாமை என்ற நிலையில் தன் இனம்
என்ற நிலைகள் கொண்டு…
1.இனத்தை பிரித்து வாழும் தன்மை தான் வந்ததே
தவிர தன் உயிரை மதித்து நடக்கும்…
2.அருள் ஞானிகள் கூட்டிய
நிலைகள் இங்கே வருவதில்லை.
3.அதைத்தான் அன்று சொன்னான் நேரு.
கடவுள் எப்படி இருக்கின்றான் என்ற நிலைகள் கொண்டு… என்னை யாரும் வணங்கிட வேண்டாம் இறந்த
பின் என் சாம்பலைத் தூவி… விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நிலைகளில் விமானத்தில் கொண்டு போய் இதையெல்லாம்
தெளிக்கச் சொன்னார்.
ஏன்…?
1.கங்கையில் கொண்டு போய்க் கரைத்தால் அங்கு பாவம் சேர்ந்து விடும்…
2.அங்கே கரைக்க வேண்டாம்..
3.மாணவர் படிக்கக் கூடிய இடங்களில் நீங்கள் தூவினீர்கள் என்றால் இந்த அருள் ஞானமாவது
அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை
4.“கற்றுணர்ந்தவன்… தெரிந்து கொண்டவன்…” இதைச் சொன்னான்.
நேரு தன் சாம்பலைக் கங்கையில் கரைக்கச் சொல்லவில்லை. அங்கே கரைத்தால் பாவம் வந்துவிடும் என்று சொன்னார். சாம்பலை வயல் வெளியில் தூவப்படும் போது உரமாகி அந்த உணர்வு
கொண்டு மற்றவர்களுக்கு ஞானம் வரட்டும்… வயல் வெளியில் தூவுங்கள் என்று கூறுகின்றார்.
நேரு அரசியல் பண்புகளைக் கற்று
உணர்ந்தாலும் நாட்டினை மீட்டு தன் சொத்தை இழந்தவன் தான்.
1.கடவுள் என்ற நிலையில் உண்மையை உணர்ந்தான்
2.ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்பு
வரவேண்டும் என்றான்.
பஞ்சசீலக் கொள்கையில் கம்யூனிசத்தை மாற்றி
அமைத்தார். ஏனென்றால் அதிலே இராஜ தந்திரமாகச் செய்யப்படும் பொழுது “தப்பான நிலைகளில்
வருகின்றார்கள்” என்று உணர்ச்சியின் வேகப்பட்டு கை கால்
அங்கங்கள் இழக்கப்பட்டான்… மடிந்தான்.
அவனைப் பற்றி சிந்திப்போர் யாருமில்லை. அவன் பெயரையே எடுக்க வேண்டும் என்கின்றார்கள் இன்று.
பண்டிட் மோதிலால் நேரு அவ்வளவு பெரிய சொத்தை வைத்திருந்தார். அப்பா கூடச் சண்டை போட்டான். நீங்கள் செய்வதெல்லாம் அதர்மம் என்று. யார்..?
நேரு. நீ கோடி கோடி சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றாய்… இது எல்லாம் ஆகாது என்றார்.
நாட்டிற்கு செய்யக்கூடிய சேவைக்காகத் சகல சொத்தையும் இழந்தார்.
அன்று விவேகானந்தர் சொன்னது போல்
1.கடவுளை நீ எங்கேயும் பார்க்க வேண்டாம்
2.ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக மதி
3.அவன் அமர்ந்திருக்கும் அந்த ஆலயம் என்று நீ
எண்ணு… ஆகவே நீ அவனை மதி என்று நேரு சொன்னார்.
அவர் சொல்லை யாரும்
மதிக்கவில்லை.