கிரகணம்
மண்டலத்தில் ஜீவன் தோன்றி
வாழ்ந்திடும் கால நிலைக்கு இச்சக்திகள் உருப்பெறவே பல கோடி ஆண்டுகள் ஆகி
விடுகின்றன.
இஜ்ஜீவராசிகள் ஊரும் பக்குவம் எம் மண்டலத்தில் தோன்றியதோ
அம்மண்டலத்தின் வளர்ச்சியுடனே இதே நிலையில் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகளானாலும்
சுழன்று கொண்டே இருக்கும்.
இம்மண்டலத்துடன் இதன் ஈர்ப்பு சக்தியின் அமில சக்தி கூடும்
நிலையில் தான் இம்மண்டலத்தில் வளர்ந்திடும் மற்ற சக்திகளும் கூடுகின்றன.
இந்நிலையில் சுழலும் மண்டலத்திற்கு “மாறிக் கிடைக்கும் சக்தி” எப்பொழுது
எல்லாம் ஏற்படுகின்றது…?
இன்று நம் சூரியனைச் சுற்றிச் சுழன்றிடும் 48 மண்டலமுமே
சூரியனைச் சுற்றிவரச் சில காலங்கள் கொள்கின்றன. இந்நிலையில் சூரிய கிரகணம் சந்திர
கிரகணம் என்றெல்லாம் சூரியனைச் சுற்றி வரும் இக்கோளங்கள் சூரியனுக்கும் நம்
பூமிக்கும் மத்தியில் ஓடும் பொழுது குறுக்கே வருகின்றது.
அந்தச் சமயத்தில்
1.சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுகள் நம் பூமிக்கு
நேராய்த் தாக்கிடாமல்
2.சூரியனைத் தாண்டி எக்கோளம் செல்கின்றதோ அந்தக்
கால நிலைக்கொப்ப
3.நம் பூமிக்கு எப்பொழுதும் கிடைத்திடும் ஒளி
அலையின் மாற்றத்தினால்
4.சூரியனைத் தாண்டிச் செல்லும் அக்கோளத்தின்
மறைப்பினால்
5.நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைபட்டுள்ள
பால்வெளி மண்டலத்தில் கலந்துள்ள இவ்வொளி அலைகளை
6.இரவில் உள்ள நிலை போல் குளிர்ச்சி கொண்டு
மேகங்களாய் கனம் பெற்று
7.எம்மண்டலம் தாண்டிச் செல்கிறதோ அதிலிருந்து
வீசிடும் அணுக்களின் சக்தி நிலை கொண்டு
8.பூமியின் சக்தி நிலை இரண்டு நிமிடம் ஒரு
நிமிடம் அக்காலக் கெடு நிலையிலேயே “பூமியின் சக்தி
நிலையிலும் மாற்றம் கொள்கின்றது…”
நம் பூமிக்கு மட்டும் கிரகணம் பிடித்துத் தாக்கும் நிலை
வருவது என்பதல்ல, எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலையின்
தாக்குதலில் “வளர்ச்சியும் உண்டு… வீழ்ச்சியும்
உண்டு…!”
ஒவ்வொரு மண்டலத்திலும் அது அது சேமித்த தனித்தனி சக்தி நிலை
உண்டு.
1.ஒரு மண்டலத்தைத் தாண்டி ஒரு மண்டலம்
செல்லும் நிலையிலும்
2.அது அது சேமித்து வளர்த்த அமில சக்தியின்
ஈர்ப்பு மற்ற மண்டலத்தின் செயலுடன் தாக்கும் நிலையிலும்
3.ஒவ்வொரு மண்டலத்திற்குமே பல காலங்கள் ஒரு
நிலையில் சேமித்த சக்தியின் தன்மை
4.இம்மண்டலங்களின் சுழற்சியில் ஒன்றைத்
தாண்டி ஒன்று செல்லும் நிலையில் அது நிமிடக் கணக்காய் இருந்திட்டாலும்…
5.அதன் ஈர்ப்பில் இதன் ஈர்ப்பின் நிலையும்
மோதுண்ட நிலையில்
6.இவ்விரண்டிற்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி
மண்டலத்திலும் அதன் அமிலத்தன்மை மாறு கொள்கின்றது.
7.அதிலிருந்து ஒவ்வொரு மண்டலத்திற்குமே
அதனுடைய இயற்கைக் குணத்தில் சில மாற்றங்கள் வருகின்றன.
சூரியனைத் தாண்டி ஓடும் மற்ற மண்டலம் சூரியனுக்கும்
பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் தாண்டி ஓடும் சக்தியினால்… “எம்மண்டலம் சூரியனைத் தாண்டி
ஓடுகின்றதோ” அம்மண்டலத்தின் குண நிலை கொண்ட இயற்கை நிலையின்
தாக்குதல் “நம் பூமிக்கு ஏற்பட்ட அதிலிருந்து” இயற்கையிலேயே நற் சக்திகளும் வளர்கின்றன… பல தீய அணுக்களும் வளர்கின்றன.