ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 10, 2024

“ஞானிகள் காட்டிய தத்துவப்படி” அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்

“ஞானிகள் காட்டிய தத்துவப்படி” அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்


துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்து அதைக் கணங்களுக்கு அதிபதியாக மாற்றிப் பழகுதல் வேண்டும். இது மனிதன் ஒருவனால் தான் முடியும்.
1.அதிகாலையில் நாம் படுக்கையிலிருந்து அதை எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.குளித்துவிட்டு நான் பூஜை அறையில் போய் உட்கார்ந்து என்னமோ எடுக்கப் போகிறேன் என்று எல்லாம் நினைக்க வேண்டியது இல்லை.
3.கண் விழித்தவுடனே தியானத்தைச் செய்யுங்கள்.
 
முடிந்த பிற்பாடு… அப்புறம் வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் பூஜை அறையில் உட்கார்ந்து பழகுங்கள். அங்கே நல்ல நல்ல படங்களை வைத்திருப்போம். அந்தக் குணத்தின் சிறப்புகளை எண்ணிப் பாருங்கள்.
 
1.இலட்சுமி என்றால் எல்லாவற்றையும் வளர்க்கக்கூடிய நிலைகள்
2.காளி என்றால் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றது
3.சரஸ்வதி என்றால் சர்வ ஞானத்தையும் பெருக்கக்கூடியது,
4.முருகன் என்றால் தீமையை அகற்றி மெய்ப்பொருளை காணும் வல்லமை பெற்றது.
 
இந்த மாதிரி நற்குணங்களை எண்ணிப் பழகுதல் வேண்டும்.
 
ஆனால் பூஜை செய்து சூட தீப ஆராதனை எல்லாம் காட்டிவிட்டுநான் உனக்குத் தினமும் சூட தீபாராதனை காட்டுகின்றேன்என்னை ஏன் நீ இப்படி சோதிக்கின்றாய்…? என்று உங்கள் கஷ்டத்தை எல்லாம் சொன்னால் எது உருவாகும்…?
 
சாமி படங்கள் எதற்காக வீட்டில் வைத்திருக்கின்றோம்…?
1.அந்த தெய்வ குணங்களின் உணர்வை நாம் நுகர்வதற்குத் தான்.
2.அங்கு போய் சூட தீப ஆராதனையைக் காட்டி விட்டு இப்படி எல்லாம் இருக்கின்றது என்று வேதனைப்படுவதற்கல்ல.
 
அதே சமயத்தில் சிறு குறைகள் வந்துவிட்டால் போதும் கர்ப்பிணிகளுக்கு. அந்த படத்தை பார்த்து இதே போல் அரும்பெரும் சக்தி என் கருவில் இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று நினைப்பதற்கு மாறாகநான் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து என் குழந்தை என்னை இப்படிப் பேசுகின்றான்எங்கள் மாமியார் இப்படி பேசுகின்றார்என் கணவர் இப்படி பேசுகின்றார்இப்படி எல்லாம் தொல்லையாக இருக்கின்றதே! என்று அழுது கொண்டு இருப்பார்கள் படத்தைப் பார்த்து.
 
அப்பொழுது அந்த கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு எப்படி இருக்கும்…? படம் எதற்காக வேண்டி வைக்கின்றீர்கள்…?
 
ஆக மறைமுகமாக இயக்கும் குணங்களின் சிறப்புகளைக் காவியமாகப் படைத்து சரஸ்வதியின் நிலை இப்படி… இலட்சுமியின் நிலை இப்படிமுருகனின் நிலை இப்படிகணபதியின் நிலை இப்படிசிவனின் நிலை இப்படி…! என்று கதைகளாக எழுதி வைத்துள்ளார்கள்.
 
அதையெல்லாம் படித்துவிட்டு நீங்கள் அங்கே போய் அழுது வரம் கேட்டால் என்ன செய்யும்…?
1.அழுகும் உணர்வே இங்கே வரும்...
2.எல்லோரையும் அழுக வைத்துக் கொண்டுதான் இருப்பீர்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
 
நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உயிர் உருவாக்கும். ஆகவே நாம் எதை செய்ய வேண்டும்…?
 
நமது ஞானிகள் கொடுத்த தத்துவத்தின் முறைப்படி நாம் நுகர்ந்தால் அத்தகைய உணர்வின் அணுக்களாகி நமக்குள் தெளிவான நிலையும் அடுத்து… பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.
 
இந்த நம்பிக்கைகள் வரவேண்டும்.
 
இன்றைய பழக்கத்தில் நாம் எதற்கெடுத்தாலும் சாமியாரைப் பார்க்க ஓடுகின்றோம், ஜோசியம் பார்க்க ஓடுகின்றோம்... ஜாதகத்தைப் பார்க்க ஓடுகின்றோம்.
 
ஜாதகமும் ஜோசியமும் மனிதருக்கு அல்ல.
 
ஆகவே
1.மதி கொண்டு விதியை மாற்றி அமைக்க வேண்டும்
2.நாம் வேதனை வேதனை என்று பார்த்துக் கொண்டு தை விதியாக மாற்றிடாதபடி,…
3.அருள் ஞானியின் உணர்வைக் கொண்டு அந்த மதி கொண்டு விதியை மாற்றி அமைக்கலாம்.
 
எல்லோரும் அருள் ஞானம் பெற்று “ற்றுமையுடன் வாழ்வார்கள்” என்ற உணர்வினை நாம் நமக்குள் வளர்த்துப் பழக வேண்டுமே தவிர தீமைகளை வளர்த்துவிடக் கூடாது.