ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2024

பூமி வலு இழந்ததற்குக் காரணம்

பூமி வலு இழந்ததற்குக் காரணம்


நம் பூமி வளர்ந்த தொடர் நிலையின் பாடத்தில் நம் பூமியில் தோன்றிய உயிரணுவின் தாவர வர்க்க நிலையையும் அதிலிருந்து ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தோன்றிய தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன்.
 
அந்நிலையில் ஓடுகள் கனத்து நத்தை போன்றும் ஆமை போன்றும் தோன்றிய ஜீவ அணுக்களின் வளர்ச்சி நிலை பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனது.
 
அதன் பிறகு இப்பூமியின் முதல் பிரளய நிலையில் இருந்து ஜீவ உயிரணுக்கள் விட்ட நிலையில் இருந்து தொடர் நிலையாய் அவற்றின் அமில சக்தியிலிருந்து தோன்றிய உயிரணுக்களின் தன்மையையும் முதல் பிரளய நிலைக்குப் பிறகு தான் நம் பூமிக்கு இன்று பொக்கிஷமாய் உள்ள வட துருவ தென் துருவ நீர்நிலைகள் பெறும் சக்தி கொண்ட நிலையையும் இதன் தொடர் நிலையிலேயே விளக்கிடுவேன்.
 
இப்பூமி ஒரு மண்டலம். இப்பூமியில் தோன்றி வளர்ந்திடும் உயிரணுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மண்டலம்.
 
நம் உடலுக்கு நம் பழக்க வழக்கப்படி ஒரே மாதிரியான உணவு நிலைகளை உண்டு வாழ்ந்திடும் பக்குவத்தில் நாம் உண்ணும் உணவில் மாற்றம் கொண்டால் நம் உடல் என்னும் இம்மண்டலம் ஏற்காமல் எப்படி வாந்தியாகவோ அல்லது வாயுவாகவோ மற்ற நிலையில் பல இன்னல்களை இம் இண்டலத்தின் மையமான நம் வயிற்றில் வலியும் மற்றத் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.
 
அதிலிருந்து நம் உடல் மண்டலம் சரிப்பட்டுப் பழைய நிலையில் வருவதற்குச் சில நாட்கள் ஆகின்றனஅல்லது அதன் தொடர் நிலையில் ஒவ்வொரு தொந்தரவுகளும் ஏற்பட்டு நம் ஆரோக்கிய நிலையே மாறு கொள்கின்றது.
 
இந்நிலை போன்றுதான் மண்டலங்களின் ஒவ்வொரு நிலைக்கும் அதன் மாற்ற நிலை வருகின்றது.
 
பிரளயம் ஏற்படுவதுவும் இச்சுழற்சியின் நம் மண்டலத்துடன் எம் மண்டலத்தின் தாக்குதல் ஏற்படுகின்றதோ அதன் நிலை ஏற்காமல் அதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்படும்.
 
1.நம் உடல் மண்டல நிலையில் ஆரோக்கிய நிலை கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் நிலை போலவும்
2.எதைச் சாப்பிட்டாலும் ஜீரணித்து விடும் நிலையும் கொண்ட ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட மண்டல மனிதனாய் உள்ள நிலையில்
3.உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியினால் மற்றத் தீய அணுக்கள் வந்து நம் ஆரோக்கியத்தை தாக்கிடாது.
4.அந்நிலை போல் நம் பூமி மண்டலத்தின் ஆரோக்கிய நிலை இருந்திட்டால் இப்பிரளய நிலையிலும் சக்தி கூடும்.
 
சூரியனைத் தாண்டிக் கேது செல்லும் நிலையிலும் நம் பூமியின் நிலை ஆரோக்கியமாய் இருந்திட்டால் அவற்றின் தாக்குதலை நம் பூமி ஏற்காது.
 
நம் பூமியில்தான் இன்று நம் செயற்கைக்காக பூமியின் பொக்கிஷத்தையே பிரித்தெடுத்து ஆரோக்கியம் குன்றிய பூமியாக நாம் செய்து வைத்துள்ளோமே…!
 
இந்நிலையில் ஏற்படும் இயற்கைக்கு நாம் தான் பொறுப்பு ஆகின்றோம்.