ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2024

அகஸ்தியன் நுகர்ந்த மின்னலின் ஆற்றல்கள்

அகஸ்தியன் நுகர்ந்த மின்னலின் ஆற்றல்கள்


நஞ்சினை முறித்திடும் பல பல தாவர இனச் சத்துக்களைத் தாய் தன் உடலில் பூசிக் கொண்டதால் அந்தத் தாய் கருவில் இருக்கக்கூடிய குழந்தை (அகஸ்தியன்) நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றது.
1.அது பிறந்த பின் சூரியனைப் பார்த்து அந்த உணர்வினை நுகர்கின்றது.
2.சூரியனிலிருந்து வரக்கூடிய விஷத்தன்மை இந்தக் குழந்தையைப் பாதிப்பதில்லை.
 
அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது. ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது மின்னலாக மாறுகின்றது.
 
அந்த மின்னலின் தன்மை வேகமாக வந்தாலும்
1.அந்தக் குழந்தை கண்களுக்கு அது அடங்கி மகிழ்ச்சியூட்டும் நிலைகளாக அமைகிறது
2,மேலும் அந்த மின்னலின் செயலாக்கங்களைப் பற்றியும்
3.எந்த நட்சத்திரம் எது எதிலிருந்து வருகின்றது…? எது எதனுடன் மோதுகின்றது என்ற நிலையையும்
3.அறியும் தன்மை பெறுகின்றான் குழந்தைப் பருவத்திலேயே அகஸ்தியன்.
 
உதாரணமாக… குளவி ஒரு புழுவை எடுத்துத் தீண்டி தன் இனம் என்ற நிலையில் அதைப் பெருக்கச் செய்கின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூட்டி மண்ணை எடுத்து வந்து ஒரு கூட்டை அமைக்கின்றது.
 
ஒரு புழுவை எடுக்கின்றது தன் விஷத்தைப் பாய்ச்சுகின்றது, கூட்டுக்குள் அடைத்து விடுகின்றது.
1.இந்த உணர்வின் தன்மை தாக்கிய பின்
2.புழுவின் உயிரின் துடிப்பு அதிகரிக்கின்றது.
 
புழுவின் உணர்வுகள் அது துடிப்பின் தன்மை கம்மி ஆனது. ஆனால்
1.குளவி கொட்டிப் புழுவின் உயிர் துடிப்பு அதிகமாகப்படும் போது
2.அந்த விஷத்தன்மை புழுவின் அணுக்களை அதிகமாகத் துடிக்கச் செய்யும் பொழுது சுருங்கி விடுகின்றது.
3.சுருங்கிய உணர்வு கொண்டு (விஷத்தைக் கொடிய குளவி எப்படி  முதலில் உருவானதோ) அந்தக் குளவியின் ரூபமாக மாற்றி விடுகின்றது
4.குளவியின் விஷத்தின் தன்மை இதனுடைய கலவையை இப்படி மாற்றி விடுகின்றது.
 
இதைப் போல தான் விஷத்தின் தன்மை கொண்டு தனக்குள் அடக்கிடும் நிலை பெற்ற இந்த அகஸ்தியன்
1.மின்னலின் ஒளிக் கற்றைகளை அவன் நுகர்கின்றான்
2.ந்த உணர்வின் தன்மை தனக்குள் வரப்படும் பொழுது இந்த உடல் பெறும் உணர்வுகளைச் சுருக்குகின்றதுஉணர்வின் தன்மை வளர்க்கின்றது.
 
ஆகையினால் தான் அந்த அகஸ்தியனை மிகவும் குள்ளமாகப் போட்டு‌ காட்டி இருப்பார்கள்…!
1.தசைகள் வளர்ச்சி கம்மி
2.”உணர்வின் அணுக்களின் சக்தி வீரியமடைந்தது…!” என்ற நிலையை இங்கே தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.
 
ஆகவே நட்சத்திரங்களிலிருந்து மின்னல்கள் வருவதைத் தனக்குள் நுகரப்படும் பொழுது அந்தச் சக்தியால் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் வீரியத் தன்மை பெறுகின்றது.
 
எதனை நுகர்ந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தி கிடைக்கின்றது என்பதை அறிந்து கொள்கின்றான். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.
 
(தாய் கருவிலிருக்கும் போது) அவன் எத்தகைய விஷத்தன்மையை ந்தத் தாவர இனங்களிலிருந்து நுகர்ந்தானோ அதனின் இயக்கச் சக்திகளை எல்லாம் அறிந்துணர்ந்தவன் ஆகின்றான்.
 
அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை எல்லாம் நாமும் பெற வேண்டும்.