ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2024

“நஞ்சினை வென்றிடும் அணுக்களை” அகஸ்தியரிடமிருந்து நாம் பெற வேண்டும்

“நஞ்சினை வென்றிடும் அணுக்களை” அகஸ்தியரிடமிருந்து நாம் பெற வேண்டும்


மனிதனான பின் அகஸ்தியன் நஞ்சினை வென்று இருளினை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியைப் பெற்றான். அவன் வளர்ச்சியில் அவன் பருவ நிலை வரும்பொழுது திருமணம் ஆனது.
 
அவன் கண்ட உண்மையைத் தன் மனைவிக்கு எடுத்துப் போதித்தான். மனைவியும் அதன் கணவனின் சொல் படி உணர்வை நுகர்ந்தறிந்து அதுவும் நஞ்சினை வென்றிடும் இருளை அகற்றிடும் மெய்ப்பொருள் காணும் சக்தியினைப் பெற்றது.
 
அவர்கள் இரு மனமும் ஒன்றி வாழ்ந்தது
1.இருவருமே நஞ்சினை வென்றிடும் உணர்வினை அவர்கள் நுகர்ந்து
2.நஞ்சினை வென்றிடும் அரும்பெரும் சக்தி பேரருள் என்ற ஒளியின் உணர்வினை அவர்களுக்குள் இருவருமே வளர்த்தனர்
3.இரு உடலிலும் ஒன்றென இணைத்தனர்.
 
எந்தத் துருவப் பகுதியின் வழியாக நுகர்ந்து அந்த உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இருக்கின்றனரோ
1.அதனின்று வரும் உணர்வினை யாம் இப்போது சொல்லும் போது உங்கள் காதிலே அந்த உணர்வுகளைக் கேட்கின்றீர்கள்.
2.கண்ணிற்கே அந்த நினைவு வருகின்றது
3.இந்த நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள் நுகர நேர்ந்தால்
4.அந்த உணர்வு உங்கள் உடலுக்குள் சென்று நஞ்சினை வென்றிடும் அந்த அணுவின் கருவாக உயிர் உருவாக்குகின்றது
5.அது நாளடைவில் நஞ்சினை வென்றிடும் அணுவாக உருப்பெறுகின்றது.
6.அடிக்கடி இந்த நிலையை நாம் அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
7.நமது உடலில் அறியாது சேர்ந்த நஞ்சினை அடக்கிடும் அணுக்களின் பெருக்கமாகின்றது.
 
இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா சென்றால் நஞ்சினை வென்றிடும் அரும்பெரும் சக்தியாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.
 
நமது உயிர் எதனை உற்று நோக்கி உணர்வினை நமக்குள் வலுப்பெறச் செய்கின்றதோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் அங்கே அடைய முடிகின்றது.
 
ஆகவே நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலே சிவலோகமாக இருப்பினும் சொர்க்கலோகமாக மாற்றுகின்றது.
 
உயிரின் வழி இந்த உடலிலே மகிழ்ச்சி என்ற உணர்வுகளை உருவாக்கப்படும் பொழுது
1.நாம் இந்த உயிரின் வழியே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தறிந்ததனால்
2.உயிர் வழி நாம் சொர்க்கத்தை அடைய முடியும்பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
 
அதுதான் சொர்க்கவாசல் என்பது நமது உயிரின் இயக்கத்தை இப்படித் தெளிவாக உணர்த்துகின்றனர் ஞானிகள்.
 
நஞ்சினை வென்று உணர்வினைப் பேரருளாக மாற்றிய இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து இதை அலைகளாக மாற்றுகின்றது.
 
நமது குரு காட்டிய அருள் வழிப்படி அதனைத்தான் நாம் பெற இப்போது ஏங்கித் தியானிக்கின்றோம். நாம் எண்ணி ஏங்கும் உணர்வுகள் அனைத்தையும் நமது உயிர் அது ஈசனாக நின்று "ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய" என்று நமது உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.
 
இப்படி இந்த உடலில் சொர்க்க லோகமாக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் மாற்றுதல் வேண்டும். இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற வேண்டும்.
1.உயிரான ஈசன் வழி நாம் கேட்கும் போது அந்த உயிரான ஈசனின் வழி தான் சொர்க்கவாசல் அமைகின்றது.
2.ஆகவே நாம் இதனை இப்போது ஏங்கிப் பெறுவோம்.