மெய்ஞானச் சுடர்
“மனதின் சக்தியே” பல கோடி ரிஷிகளின் மெய்ஞானச் சுடராக இன்று இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காச் செயல் திறன் செய்விக்கும் ஆற்றல் கொண்ட “மாமகரிஷிகளின் மெய்ஞானச் சுடரொளியாகும்…”
மலர் மலர்ந்து மணம் பரப்புகின்றது… காய் கனிந்து மணம் வீசுகின்றது. மலர்ந்த நாள் மலருக்கு மணம்... அடுத்த நாள் வாடிய மலரின் துர்வாடை வீசுகின்றது… கனியின் நிலையும் அதுவே.
செயல்பாட்டின் தன்மையில் ஒவ்வொரு செயலிலும் பருவம் பக்குவமாகி மணமாகவும் அடுத்து அதன் கதி துர்நாற்றமாகவும் ஆகிவிடுகின்றது.
1.நமது மனம் மலரின் நறுமணத்தை ஏற்கின்றது… துர்நாற்றத்தை வெறுக்கின்றது
2.நிகழும் செயல் யாவும் இரு நிலை கொண்ட செயல்பாடு தான்.
என்றாலும்… ஏற்கும் நிலைக்காக மனிதன் பக்குவமாக மலரின் வாசனைகளைத் திரவமாகச் (ESSENCE) செயல்பாட்டிற்கு எடுத்துப் பக்குவ கதிக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.
மனித ஆற்றலின் செயல்பாட்டில்… தனக்கொத்ததைச் செய்விக்கும் திறன் ஆய்வின் மூலக்கருவே தன் “ஆத்மாவின் விழிப்பின் சுடர்தான்…”
1.மனித சக்தியின் உண்மையை உணர்ந்து
2.மகரிஷிகளின் விழிப்பின் சுடர் ஒளிச் சுடர்களாக மண்டல இயக்கத்தில் செயலாகும் ஒளி சக்தி
3.எப்படி பூமியின் இயக்கத்திற்குச் செயலுக்கு வருகின்றது என்பதை
4.மெய்ஞானச் சுடரிலிருந்து ஒவ்வொரு ஆத்மாவும் விழிப்பெய்தல் வேண்டும்.
சில வகை மீன்கள் அதனுடைய உயிர் சக்தியின் அமைப்பில் மூலத் தொடரிலேயே ஒவ்வொரு செதிலிலும் “மின் காந்த ஒளியை வெளிப்படுத்தும் ஒளி மீன்களாக” பல வகையில் சில இடங்களில் உண்டு.
நீரிலிருந்து மின்சாரம் எப்படிப் பெறப்படுகின்றதோ அதைப் போன்றே
1.இம்மீன்களின் உயிரணுக்கள் பெற்ற ஒளி காந்த மிகுதியால்
2.மின் ஒளியைப் போன்று மின்னக்கூடிய தன்மை அதற்கு ஏற்படுகின்றது.
அதைப் போன்று மனித உணர்வின் எண்ணத்தில் நறுமணத்தை மனம் ஏற்பது போன்று
1.நற்குணமான நற்சக்தியை மட்டும் எண்ணத்தின் செயல் ஏற்று
2.தீய உணர்வு எண்ணத்தை இச்சரீர உணர்வு எண்ணத்தில் இருந்து அகற்றி
3.கோள்களின் தொடர்புடன் தெய்வ குணமுடன் ஞானத்தின் ஒளியை மனதின் எண்ணம் செலுத்தும் பொழுது தான்
4.எண்ணத்திற்கொப்ப ஈர்ப்பின் அமிலம் சரீரத்தில் பாயும்.
உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் “மெய் ஞான குணமுடன்” தன் ஞானத்தை வெளிப்படுத்தும் ஆற்றலாக “விழிப்பெய்திட” இங்கே கொடுக்கும் பாடநிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
பல ரிஷிகளின் செயல் தன்மை தான் “மெய்ஞானச் சுடராக” இங்கே சுடர்ந்து கொண்டிருக்கின்றது.
1.இத்தத்துவத்தின் உண்மை அறிந்து அந்த மகரிஷிகளுக்கு ஏற்பட்ட அனுபவ வளர்ச்சியை
2.மகரிஷிகளின் ஒளிச்சுடர் கொண்டு அவர்கள் ஒளிபெற்ற உண்மைதனை
3.மனித அறிவின் விவேகத்தால் ஒவ்வொருவரும் ஜெபம் கொண்ட தியானத்தால் ஒளிச்சுடர் பெறலாம்.