“கேதுவின் கிரகணத்திற்குப் பின்” பூமியில் மாற்றம் ஆரம்பித்தது
16.1.1980 ஆம் தேதியில் ஏற்படும் சூரிய
கிரகணத்தில் நம் சூரியனைத் தாண்டி “கேதுவின் ஓட்டம்
செல்வதினால்” கேது மண்டலத்தில் உள்ள விஷ அணுக்கதிரின்
தாக்குதல் நம் பூமிக்குத் தாக்கப் போகின்றது. கேதுவின் தன்மையில் விஷத்தன்மை
அதிகம்.
நம் பூமியில் எப்படி சில தாவரங்கள் விஷத்தன்மை கொண்டதாகவும்
சில நல்ல தாவரங்களாகவும் வளர்கின்றனவோ அவை போல் இம்மண்டலங்களின் வளர்ச்சியிலும்
ஒவ்வொரு தன்மையில் வளர்கின்றது என்றேன் அல்லவா…?
கேது மண்டலம் இல்லாமல் இருந்திருந்தால் பால்வெளி
மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையில் இவ்விஷ அமிலமும் நிறைந்தே
சுற்றிக் கொண்டிருக்கும்.
நட்சத்திர மண்டலங்களிலும் இவ்விஷமான அமில சக்தி கொண்ட பல நட்சத்திர
மண்டலங்கள் உண்டு.
எண்ணத்தில் கூடக் கேதுவின் சக்தியை எண்ணிலடங்கா வண்ணம்
நச்சுத்தன்மை கொண்ட அமில சக்தி நிறைந்த மண்டலமாய் கேது மண்டலம் வளர்ந்துள்ளது.
சூரியனின் ஈர்ப்பிற்கு இந்த 48
மண்டலங்களின் சுழற்சியுடன் கூடிய மண்டலம் தான் கேது மண்டலமும்.
1.கேதுவின் கிரகணம் பிடிப்பதினால் நம்
பூமியின் மேல் இதன் அதன் ஈர்ப்பு சக்தி தாக்கி
2.நம் பூமியின் இயற்கையுடன் இவ்விஷ
அணுக்களின் தாக்குதல் பட்டு
3.அத்தாக்குதலினால் நம் பூமியின் நிலையே
சிறிது இறக்கம் (கீழ்) இறங்கப் போகின்றது.
4.அந்நிலையில் இருந்து சூரியனுக்கும் நம்
பூமிக்கும் இடைப்பட்ட தூர விகிதமும் அதிகப்படப் போகின்றது.
5.இதிலிருந்து இன்று இப்பூமிக்குக்
கிடைக்கும் சூரியனின் உஷ்ண அலையின் சக்தி குறைவு கொண்டு குளிர்ந்த நிலை அதிகப்பட
போகின்றது.
இந்நிலையின் தொடர் நிலையாலும் நம் பூமியின் “மாற்ற நிலை ஏற்படப்போகும் நிலைக்கு”
இக்கேதுவின் நிலை சாதகப்படுத்தி செல்கின்றது.
நல்வழியின் சாதகமல்ல கேதுவின் கிரகணத்தினால்.
நம் முன்னோர்கள் எக் கிரகணம் பிடித்ததோ இந்நிலையில் வாழ
என்று தெரிந்தோ தெரியாமலோ செபினர்.
1.நம் பூமி பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு
2.இக்கேதுவின் கிரகணத்தினால் சில தன்மைகளில்
மாற்றம் கொள்ளப் போகின்றது.
சுழன்று கொண்டே உள்ள இம்மண்டலங்களின் ஓட்டத்தில் ஒன்றைத்
தாண்டி ஒன்று செல்லும் நிலையிலும்…
ஒன்றுக்கொன்று ஒன்றின் சக்தியை ஒன்று அதன் ஓடும் நிலையில் பார்த்துக் கொண்டே
செல்லும் நிலையிலும்… இப்பாடத் தொடர்ச்சியின் ஒவ்வொரு
மண்டலத்தின் வளர்ச்சியின் நிலையில்… பல ஆண்டுகள் ஒன்று போல்
உள்ள இயற்கையின் நிலையில் மாற்றம் கொண்டு…
1.இயற்கையில் உள்ள அம்மண்டலத்தின் சக்தியே
2.மற்ற மண்டலத்திலிருந்து அதன் ஈர்ப்புப்
பட்டவுடன் மாறும் நிலை கொள்கின்றது.