நம் வாழ்க்கையில் நமக்குப் பிடித்தமான நிலைகள் கொண்டு அதனுடன் இணைந்த நிலைகளாக
வந்தால் நாம் அதை எல்லாம் ஏற்றுக் கொள்கின்றோம். மகிழ்ச்சியாகவும் இருக்கின்றோம்.
ஆனால் சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் ஒரு வெறுப்போ அல்லது நண்பனிடம் கொடுக்கல்
வாங்கலில் பணத்தைக் கொடுக்காமல் தடைப்படுத்தும் போது வெறுப்பான நிலைகளில் இருக்கப்படும்
போது ஒரு மகிழ்ச்சியான பாடலைப் போட்டார்கள் என்றால் நமக்கு என்ன ஆகின்றது…?
இன்னும் கொஞ்சம் நமக்குள் எதிர் நிலையை உருவாக்கி விடுகின்றது. உடனே நமக்குக்
கோபம் வரும்.
1.முதலில் இதை நிறுத்துங்கள்…! நிறுத்துகிறீர்களா இல்லையா…? என்று
2.யார் அந்த நாடாக்களைப் போட்டார்களோ… அவர்களிடம் பகைமை உணர்வுடன் பேசச் சொல்லும்.
3.அதே உணர்வு அதிகமாகி விட்டால் அந்த நேரத்தில் யாராவது சிரித்துப் பேசினால்
4.அவர்களோடேயும் சண்டை போடச் சொல்லும். வெறுப்புடன் பேசச் சொல்லும்.
இதையெல்லாம் நமது உயிர் இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து எலக்ட்ரானிக்காக
(உணர்ச்சிகளாக) மாற்றும்போது இயக்கச்சக்தி அணுவாக மாற்றுகின்றது.
அப்போது அந்த இயக்கச் சக்தி அணுவாக மாற்றும் போது அது மாற்றிய பின்
1.எதன் அடிப்படையில் முதலில் உருவாகி இருக்கிறதோ அதற்கு மாறாக வரப்படும் போது
எதிர் மறையாகி
2.உணர்ச்சிவசப்பட்டு (TENSION) உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையும்
3,பகைமையை உருவாக்கும் உணர்வின் அணுக்களாக உடலுக்குள் பெருகத் தொடங்கி
4,உடல் நோயாகவும் மன நோயாகவும் உருவாகிவிடுகின்றது.
மனித வாழ்க்கையில் நாம் வாழும் நிலையில் சீராக வாழ்ந்தாலும் தனக்குள் சந்தர்ப்பத்தால்
இதைப் போன்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுது
‘1.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்குள் எதிர் நிலையான அணுக்கள் உருவாகி
2.நமக்குள் போர் முறைகளை உருவாக்கி நம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது.
இதைப் போன்ற நிலைகளை அந்த நேரத்தில் உடனுக்குடன் நாம் தடுக்கவில்லை என்றால்
அதன் விளைவுகள் இப்படித்தான் ஆகின்றது. நாம் தவறு செய்யவில்லை என்றாலும்.. தண்டனையை
நாம் அனுபவிக்கும் நிலையாக வந்துவிடுகின்றது.
அத்தகைய நிலைகளை மாற்றி மனதைச் சமப்படுத்துவதற்காகத்தான் அந்த மெய் ஞானிகளின்
ஆற்றலைப் பெறும் தகுதி ஏற்படுத்துகின்றோம்.
“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரை எண்ணி மெய் ஞானிகளின்
உணர்வுகளை உயிர் வழியாகச் சுவாசித்தால் உயிரில் தீமைகள் படாதபடி தடுக்க முடியும்.
உயிரில் தீமையான உணர்வுகள் படவில்லை என்றால் அந்த உணர்வுகள் நம்மை இயக்காது.
மெய் ஞானிகள் உணர்வுகள் நம் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்குள் பெருகும் பொழுது
1.நம் உள்ளமும் உடலும் செழிப்பாக இருக்கும்.
2.நம் உணர்வுகளும் அணுக்களும் ஒளித் தன்மை பெறுகின்றது,
3.நம் உயிரான்மாவும் ஒளியாகின்றது.