ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 1, 2018

மெய் ஞானிகளின் உணர்வை நாம் பெற்றால் மனிதனின் நல்ல உணர்வுகளை அழித்திடும் சக்திகளை நாம் உறுதியாகச் செயலிழக்கச் செய்ய முடியும்...!


தன்னை அறியாது தவறுகள் நிகழ்ந்து விடக் கூடாது என்ற நிலைகளில் மனோ பலமும் மனோ திடமும் கொண்டு
1.குறைகள் எங்கே இருப்பினும்
2.அந்தக் குறைகள் நீக்க வேண்டும்...! என்று எண்ணிச் செயல்படுத்தியவர் தான் மகாத்மா காந்தி.

நாடு பிடிக்கும் ஆசை கொண்டு தனக்குச் சுகபோகம் வேண்டும் என்ற நிலையில் போர் முறைகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாட்டையும் வீழ்த்திடும் எண்ணம் கொண்டு தான் அன்று செயல்பட்டது. அதன் அடிப்படையில் நம் இந்திய நாடும் பிரிட்டனின் கீழ் சிக்குண்டிருந்தது.

ஆனால் நம் நாட்டின் பண்புகளோ
1.உயர்ந்த உணர்வுகள் கொண்டும் சகோதர உணர்வுகள் கொண்டும்
2.அன்னை தந்தையரை மதித்து நடத்தல் என்றும்
3.மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெற்று அவர்கள் வழி நடந்திடும் நிலையாகச் செயல்பட்டது தான்.

இருப்பினும் நாடு பிடிக்கும் ஆசை கொண்டு நம் நாட்டின் அத்தகைய சீரிய பண்பினை அழித்துத் தன் சுகபோகத்திற்காக நமக்குள் இருக்கும் ஒற்றுமையை அழித்து பல இன்னல்களைக் கொடுத்து நம் நாட்டின் மீது அவர்கள் படையெடுத்தார்கள்.

உணர்ச்சிவசப்பட்டுப் பதிலுக்கு நாமும் அவர்களுக்குத் தீமைகள் செய்யக் கூடாது என்ற நிலையில் அறியாத நிலைகளில் செயல்படும் அவர்களை நம் சகோதரர்கள் தான்...! என்ற நிலையில் மன உறுதியுடன் செயல்பட்டார் காந்திஜி.

ஆனால் அதே சமயத்தில் அவர்கள் உடலிலே சேர்த்த தீமைகளை அகற்றிடல் வேண்டும் என்ற நிலையில் மனோ பலம் கொண்டு அதைச் செயல்படுத்திக் காட்டியவர் காந்திஜி.

ஏனென்றால்
1.வலு கொண்டு ஒருவனைத் தாக்குவது மிகவும் எளிது.
2.அதை “வலு...!” என்று சொல்லலாம்.
3.ஆக பல ஆயிரம் பேரையும் ஒரு மனிதன் குண்டை வீசி (BOMB) விஞ்ஞான அறிவு கொண்டு அழித்து விடலாம்.

அத்தகைய அழிக்கும் நிலை அன்றைய விஞ்ஞான உலகில் இருந்தாலும்
1.நம் நாட்டு மகரிஷிகளின் தத்துவத்தைத் தன் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டு
2.மக்களுக்குத் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன்னை அறியாது எழுந்திருந்து
3.”அந்த அழித்திடும் உணர்வின் தன்மையை... அழிக்கச் செய்தார் மகாத்மா காந்திஜி...!”

நம் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் மதம் இனம் மொழி என்ற நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நீங்க வேண்டும் என்றும் செயல்பட்டார்.

உலகில் உள்ள ஏனைய மக்கள் அனைவரும் “நாம் அனைவரும் ஒன்றே...!” என்ற சகோதரத்துவத்தை உணர்த்திடல் வேண்டும் என்ற இந்தத் பக்குவத்தை காந்திஜி மன உறுதி கொண்டு நமக்குத் தெளிவாக்கினார்.

காந்திஜியின் அத்தகைய உணர்வுகளை நாம் சுவாசித்தால் நமக்கு மன உறுதி கிடைக்கும். பகைமைகளை அகற்றும் வல்லமை கிடைக்கும்.
1.நல்லதைக் காக்கும் உயர்ந்த பண்புகள் வளரும்.
2.மெய் ஞானிகள் பெற்ற தவ வலிமையையும் பெற முடியும்.