ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 7, 2018

மொழிகளை உருவாக்கியது யார்..?


நம்மை அடிமையாக்கிய ஆங்கில மொழியும் நம்மை அடிமையாக்கிய உருது மொழியும் நம்மை அடிமையாக்கிய பிரெஞ்சு மொழியும் இப்படி எத்தனையோ மொழிகள் அன்று இருந்தது.

ரோமானியர்களின் ரோமன் மொழி வெளிவரப்படும் அந்த மொழியை வைத்துத்தான் இஸ்ரேல் சிரியா ஏமன் போன்ற நாடுகளும் எகிப்து இதைப் போன்ற அரேபிய நாடுகள் அனைத்துமே அந்த ரோமன் மொழிக்குள் அடிமைப்பட்டு இருந்தது.

ஆனால் அதே சமயத்தில் ரோமன் மொழியை அவர்கள் வைத்திருந்தாலும் ரோமன் லிகிதா என்று இன்றைக்கு இருக்கக்கூடிய ஆங்கிலேய மொழிகளுக்குள் அதைப் பிரித்தெடுக்கப்பட்டு அதைத் தனி மொழியாகத் தனக்கு அமைத்துக் கொண்டது பிரிட்டன்.

ஏனென்றால் அன்று ஆண்ட ஒவ்வொரு அரசனும் தான் வாழ்வதற்காக மொழிகளை ஏற்படுத்தும் போது
1.”மாற்று மொழி பேசுவதை இன்னார்…!” என்று அடையாளம் காண்பதற்காக
2.ஒரு மொழிக்குக் கீழ் கடவுளின் நிலைகளைக் கொண்டு வந்தனர்.

ஆங்கில மொழியை இயேசுக்குக் கீழ் கொண்டு வந்தாலும் அதே இயேசுவுடைய தத்துவத்தைப் பிரான்ஸ் மொழியில் கொண்டு வரப்படும் போது இதற்கும் அதற்கும் வித்தியாசம் உண்டு.

இவர்கள் வணங்கும் முறையை மாற்றியும் இயேசு சொன்னார் என்று மொழிகளை மாற்றி அமைப்பதும் போன்று செயல்படுத்தினார்கள். அதே போல் ஜெர்மன் நாட்டைக் காட்டும் போது அதே இயேசுவை வணங்கினாலும் அவர்களுக்கென்று ஒரு மொழியாக்கப்பட்டு எல்லாமே ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகத் தான் இயங்கி வந்தது.

ஆக ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அரசனும் தன்னைப் பாதுகாத்து கொள்வதற்காக மொழியின் அடிப்படையில் மதம் இருந்தாலும்
1.அந்த மதத்தையே மொழியின் அடிப்படையில் மாற்றி
2,தனக்குள்ளும் மக்களுக்குள்ளும் வேற்றுமை உணர்வுகளை உருவாக்கி
3,பகைமை உணர்வுகளைத் தான் வளர்க்க முடிந்தது. (அன்றைய அரசர்களால்)

காரணம் ஒவ்வொரு அரசனும் தன் சுயநலங்களுக்காகத் தனி மொழியை வகுத்து அதனின் வழிகள் கொண்டு தான்
1.மற்றதை அடக்கி ஆட்சி புரியும் தன்மைக்கு
2.மொழியின் பால் தான் கொண்டு வந்தார்கள்.
3.அதாவது அரசர்கள் தனக்குக் கீழ் மக்களை அடக்கி ஆள்வதற்காகத்தான் அன்று பல மொழிகளை உருவாக்கினார்கள்…!

இப்படி அரசர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பாகுபாடுகளால் அவரவர் எண்ணிய உணர்வுகளை அந்தந்த உயிர்கள் அதன் உணர்வின் தன்மை கொண்டு கவர்ந்து… “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்…!” என்று தன் உடலாக மாற்றி விடுகின்றது.

அவ்வாறு மாற்றிய நிலைகளால் தான் இன்று உலகெங்கிலும் பல்வேறு மொழிகளாகப் பெருகி மக்களைப் பிரித்தாளும் தன்மையாக வேரூன்றி விட்டது.

ஒன்றுமே இல்லை என்றாலும் மனிதர்களுக்குள் இன்று ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுகள் எப்படி வருகிறது…? ஏன் ஒற்றுமையாகச் செயல்பட முடியவில்லை…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இதைச் சொல்கிறோம்.