ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2018

கண்ணனைப் பகவான்…! என்றும் பரமாத்மா…! என்றும் வியாசகர் சொன்னதன் உட்பொருள்


கீதையைச் சொன்னது யார்…?
1.கண்ணின் வழி கொண்டு நாம் சொல்கின்றோம் என்ற நிலையைத்தான்
2.உலக உணர்வின் இயக்கமும் நமது புலனறிவுகள் எப்படி இயங்குகின்றது..? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டியது வியாசகர்
3.பகவான்…! என்றும் பரமாத்மா…! என்றும் கண்ணுக்கு இத்தகைய பெயர் எல்லாம் வைத்தார்
4.தான் ஒன்றைக் காண்பிப்பதும்… நல்ல வகையில் நம்மை மீட்டித் தருவதும்… “நமது கண் பகவானாக இருக்கின்றது…!”

அதே சமயத்தில் காற்றில் உள்ள நிலைகள் பரமாத்மாவாக இருக்கின்றது. இந்தப் பூமியான பரமாத்மாவில் கலந்துள்ள சக்தியை நமது கண் கருவிழி நம் உடலுக்குள் பதிவாக்குகின்றது.

பதிவான உணர்வின் தன்மையைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்ந்து நம் உயிருடன் இணைத்து அந்த இணைப்பின் நிலைகள் கொண்டு
1,பரமாத்மாவாக இருப்பதை நம் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.
2.நம் உடலுக்குள் ஜீவான்மாவாக மாறி விட்டால் இந்தப் பரமாத்மாவில் இருந்து எதை நுகர்ந்ததோ
3.அதையே மீண்டும் நுகர்ந்து ஜீவான்மாவை வளர்க்கின்றது.
4.ஆகவே தான் இந்தக் கண்ணிற்கு இவ்வளவு பெரிய பொருத்தத்தைக் கொடுத்தான் வியாசகன்.

ஒருவன் நம் நண்பனை அடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான். அதை நாம் செவி வழிகொண்டு கேட்டு விடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

நண்பனை உதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் பேசுகின்றான் என்றால் நண்பனின் பதிவு நம் உடலுக்குள் இருப்பதால் உடனே நண்பனைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகள் தூண்டுகின்றது.
1.இதன் வேக நிலைகள் கொண்டு அந்த நண்பனின் நினைவலைகள் வருகிறது.
2.அப்போது அந்த நண்பனின் நினைவு வரப்போகும் போது
3.இந்தக் கண்கள் அவன் இருக்கும் இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.
4.அங்கே சென்று உன்னை இந்த நிலை செய்யப் போகின்றான். அதிலிருந்து நீ தப்பித்துக் கொள்…! என்று
5.நண்பனைக் காக்க இந்தக் கண் அவன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

தீமை என்ற நிலைகள் கொண்டாலும் தன் நண்பன் என்ற நிலை வரப்படும் போது அந்த நண்பனின் உணர்வு வலிமை நமக்குள் இருக்கும் போது இந்தக் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் என்று இவ்வளவு தெளிவாகக் காட்டினார் வியாசகர்.

இந்தக் கண் யாருடைய நன்மையின் உணர்வை நமக்குள் வைத்து இருக்கின்றதோ அதன் உணர்வின் நினைவு வரப்போகும் போது இந்தப் பகைமை என்ற நிலைகள் அவனுக்குத் தீங்கு விளைவிக்கிறான் என்றால் உடனே அந்த இடங்களுக்கு வேகமாக அழைத்துச் செல்கிறது.

அந்த நண்பனின் உணர்வு நமக்குள் இருக்கிறது என்றால் அது அர்ச்சுனன். ஆனால் அதே சமயத்தில் தீமையை விளைவிக்கும் இடத்தில் இருந்து தப்பிக்க இந்தக் கண் சாரதியாக அமைந்து அந்த உணர்வை இயக்குகிறது என்று நமது கண்களின் இயக்கத்தைத் தெளிவாகக் காட்டுகின்றார் வியாசகர்.

அதாவது… இந்தப் பூமியிலே பரவி இருப்பதை
1.நம் கண்ணின் கருவிழி தனக்குள் படமாக்கி
2.அதிலிருந்து வரக்கூடிய மணம் எதுவோ அதைக் கண்ணின் காந்தப்புலனறிவு கவர்ந்து உணர்வின் அறிவாக நமக்குள் அறியச் செய்வதும்
3.அறிந்ததை அணுவாக்கி அணுவின் தன்மையைத் தன் உடலாக்கி
4.அதனின் தன்மை நம் உயிர் பாதுகாப்பாக நிலைகள் வைக்கின்றது.
5.இதிலே எந்த உணர்வுகளை நாம் அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதுவே அர்ச்சுனன் ஆகின்றது.

எதை நமக்குள் சேர்த்து வளர்த்துக் கொண்டமோ அந்த வலிமையின் தன்மை கொண்டு அந்த நினைவின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டுச் செல்லப்படும் போது
1.இந்தக் கண்ணால் நாம் பார்த்த அந்த உணர்வுகள் சாரதியாக இருந்து
2.வலிமை பெற்ற உணர்வுகளுக்கு (உடலுக்கோ… இடத்திற்கோ..) உயிராத்மாவை அழைத்துச் சென்று
3.”உடல் மாற்றங்களைக் கொடுக்கிறது…!” என்ற நிலையை வியாசகர் மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளார்.

இதை எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்…!