ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 3, 2018

நம்மை வாழச் செய்யும் பூமிக்கு நாம் செய்யும் சேவை எதுவாக இருக்க வேண்டும்...?


ஓர் விஷக் குண்டைத் தூவினால் தூவிய அந்த நச்சுத் தன்மைகள் பூமிக்குள் பரவப்படும் போது அதைச் சுவாசிப்போர் அனைவரும் மடிகின்றனர்.

அவர்கள் மடிவது மட்டுமல்லாதபடி அந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் வீசப்படும் போது பூமியில் எல்லாப் பகுதிலும் பரவுகின்றது. மற்றவர்கள் அதை நுகரப்படும் போது அவர்கள் நல்ல சிந்தனைகளை இழக்கச் செய்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிடும் உணர்வுகளே வளர்ச்சியாகின்றது.

ஆகவே நாம் வாழும் இந்தத் தாய் பூமிக்குச் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்...? என்ற நிலைகளில் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி நமக்குள் நின்று தீமையை விளைவிக்கும் தீமையான உணர்வுகளை அடக்கி அந்த உலக மக்கள் அனைவரும் நாம் ஒன்றென்ற நிலையில் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

நாம் பிறந்த தாய் நாட்டைக் காக்க எண்ணுகின்றோம். தாய் நாடாக இருப்பினும் இந்த நாட்டில்தான் நாம் வளர்ந்தோம் என்று இருப்பினும்
1.இந்தப் பூமி தான் நமக்குத் தாய்...!
2.எந்தெந்த நாட்டிலே... ஊரிலே... நாம் பிறந்திருந்தாலும் நமக்குத் தாய் இந்தப் பூமியே...!

நாம் மகிழ்ச்சியூட்டும் நல்ல செயல்களைச் செயல்படுத்தினால் நம்மைப் பெற்றெடுத்த தாய் அதை நுகர்ந்தறியப்படும் போது அந்தத் தாயின் உடலிலும் மகிழ்ச்சி தோன்றுகினறது. அதைப் போன்று தான்
1.நாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான மூச்சலைகள் அனைத்தும்
2.நம் தாய் பூமியில் படரப்படும் போது நம் தாய் நாடும் மகிழ்ந்திருக்கும்.
3.நம் பூமித் தாயும் மகிழ்ந்து இருக்கும்.

ஒரு குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் அனைத்தும்  ஒருக்கிணைந்து ஒற்றுமையான உணர்வுடன் தாயுடன் நாம் அரவணைத்துச் செல்லும் போது அதைக் காணும் நம் தாய் நம்மை வாழ்த்துகின்றது... வளர்க்கின்து...!

அதைப் போன்று நாம் வாழும் இந்தப் பூமித் தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு இதிலே வாழும் மக்கள் நாம் அனைவரும் சகோதரர்கள் என்று எத்தகைய பேதமில்லாது வாழ்ந்திடலே எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

1.எண்ணில் அடங்காத மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தப் பூமியில்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடித்து
3.நாம் வெளிப்படுத்தும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் நறுமணங்களாகப் படர்ந்து  
4.நம் எல்லோரையும் மகிழச் செய்யும்.