இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் உதாரணமாக வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கக்கூடிய
சந்தர்ப்பங்களில் உங்களுடன் நண்பராகப் பழகுபவர்கள் அவர்கள் கஷ்டங்களை எல்லாம் வந்து
சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
என் பையன் அப்படிச் செய்கிறான்.. இப்படிச் செய்கிறான்…! என்று அவர் சொல்வதை
எல்லாம் நீங்கள் உம்...! கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். உங்கள் மனதில் என்னவெல்லாம்
ஓடுகிறது…! என்று பாருங்கள். முந்தி தெரியாது. இப்போது நம்மை எது இயக்குகின்றது...?
என்று உணரலாம்.
ரோட்டில் போகிறோம். தூசி படுகிறது. துணிகளைத் துவைத்துக் கொள்கிறோம். மேலே குளித்துக்
கொள்கின்றோம். கையைக் கழுவி கொள்கின்றோம்.
இதை மாதிரி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்திப் பழக வேண்டும். அது இல்லை
என்று சொன்னால் “நம் உடலும் கெடும்… நம் மனமும் கெடும்…!”
நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகின்றது. நஞ்சு
என்று தெரிந்து கொண்ட பின் ஆறாவது அறிவால் அதை மாற்றி அமைக்கின்றது. இது தான் “முருகு…!”
குழம்பு வைக்கும் போது காய்களில் உள்ள காரலை எல்லாம் அகற்றிவிட்டு பல சரக்குகளை
இணைத்து அதைச் சுவையாக மாற்றுவது போல
1.எத்தனை கடுமையான உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் இணைத்து
3.நம் உடல் நன்றாக இருக்க வேண்டும்
4.நல்ல பண்புகளும் நல்ல அறிவான நிலைகளும் வர வேண்டும் என்று
5.இதைச் சேர்த்து இணைத்து விட்டோம் என்றால் மற்றவரின் தீமைகளோ துயரங்களோ நமக்குள்
விளையாது.
அப்படி உடனுக்குடன் நல்லதாக்க வேண்டும் என்றால் நம் உடல் உறுப்புகளுக்கெல்லாம்
அந்தச் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலுவாக ஏற்றிக் கொடுக்க வேண்டும்.
1.கணையங்கள்:-
நம் உடலில் உள்ள கணையங்கள் கொழுப்புச் சத்து சர்க்கரைச் சத்து உப்புச் சத்து
அவைகளைச் சீராகப் பிரிக்கும் சக்தி பெற்றது. கொழுப்புச் சத்தைச் சீராகப் பிரிக்கவில்லை
என்றால் இரத்தத்துடன் சேர்ந்து குழாய்களில் அடைத்துக் கொள்ளும். மற்ற விஷத்தின் தன்மைகளை
பிரிக்கவில்லை என்றாலும் அதனால் பாதகம் ஏற்படும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கணையங்களில் படர்ந்து எங்கள் கணையங்களை
உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று தியானிக்க வேண்டும்.
இவ்வாறு கணையங்களில் சேர்க்கப்படும் பொழுது நாம் சாப்பிடுகிற ஆகாரத்திலிருந்து
ரசத்தை எடுத்துப் பிரித்து அதை எல்லாம் வடிகட்டி நல்ல இரத்தமாக மாற்றும். கொழுப்பு
சர்க்கரை உப்பு போன்ற நிலைகளைச் சரியான நிலைகள் அது பிரிக்கும்.
2.நுரையீரல்:-
கல்லீரலில் எது படுகிறதோ அந்த மூச்சு அதற்குத் தகுந்த மாதிரித் தான் வெளியில்
வந்து இழுக்கிறது. வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் வந்து கல்லீரல் மண்ணீரலைத் தாண்டி
நுரையீரலுக்கு வந்து விட்டது என்றால் என்ன செய்கிறது...?
1.அந்த வேதனை என்ற உணர்வானவுடனே
2.இங்கே படக்... படக்... படக்... என்று அடிக்கிறது. மூச்சுத் திணறல் ஆகிறது.
நுரையீரலில் இத்தகைய தொல்லைகள் இருந்தது என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை எடுத்துச் சுவாசித்து வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாகக் கூட அந்த மூச்சுத்
திணறல் குறையும். அதே போல மண்ணீரலில் குறைபாடுகள் எது இருந்தாலும் இதைப் போல மாற்றிக்
கொண்டு வர வேண்டும்.
3.சிறுநீரகங்கள்:-
சிறுநீரகத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தது என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் சிறுநீரகங்களில் படர்ந்து எங்கள் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் வீரியம்
பெற வேண்டும் என்று இப்படிச் சேர்த்து அதை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.
4.கண்கள்:-
உதாரணமாக ஒரு கெட்டதைப் பார்க்கின்றோம். அல்லது சங்கடமானதை ஒருவர் சொல்லும்
பொழுது அதைக் காது கொடுத்துக் கேட்கின்றோம்.
கண்களில் உள்ள கருமணியில் பட்டுத்தான் உடலுக்குள் போகிறது.
1.கருமணியில் பட்டு இழுத்து
2.அதனுடன் இணைந்த நரம்பு (WIRE) மூலமாக
3.உடல் எல்லாவற்றிற்கும் அந்தச் செய்தியை அனுப்புகிறது.
ஆனாலும் அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் கருமணியில் படர்ந்து விடுகிறது. அடுத்தாற்போல்
எதைச் சொன்னாலும் அந்த வேதனையான எண்ணமே நமக்கு வரத் தொடங்குகிறது.
ஆகவே வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இந்த மாதிரி உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால்
கூடக் கொஞ்சம் நேரம் “ஈஸ்வரா…!” என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் கருமணிகளில் படர வேண்டும் என்று எண்ணியவுடனே அங்கேயே பதிவாகிக் கொள்கின்றது.
கருமணிகள் சுத்தமாகின்றது.
1.உங்கள் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
எண்ணினால்
2.ஒளிப் படலங்கள் படர்ந்து தூய்மைப்படுத்துவதைப் பார்க்கலாம்.
5.இருதயம்:-
அதே மாதிரி வாழ்க்கையில் நாம் நல்ல வளர்ச்சி அடைந்து வரும் பொழுது ஒரு நான்கு
பேர் வந்து அது இது என்று ஆசை காட்டி அந்த வழியில் சென்ற பின் அது சரி வர நாம் எண்ணியபடி
நடக்கவில்லை என்றால் அந்தச் சந்தர்ப்பம்…
1.நம் எண்ணம் பூராம் அவன் மேல் செல்கின்றது.
2.அவன் மேல் கோபமும் வெறுப்பும் உண்டாக்குகிறது.
3.நம் காரியங்களைப் பார்க்க முடியாமல் தடைப்படுத்துகின்றது.
4.நம் தொழிலைப் பார்க்க முடியாமல் போகிறது.
5.நம் நல்ல குணங்களைப் பாதுகாக்க முடியாமல் போகின்றது.
அதனால் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் அதிகமாக அதிகமாக நல்ல அணுக்கள் மயக்கம்
ஆகிறது. சிந்திக்கும் வலிமை இழந்து விடுகிறது. அதே உணர்வாக இருந்தால் இருதயமும் பலவீனம்
அடைந்து விடுகிறது.
இந்த மாதிரி ஆகாதபடி தடுப்பதற்குத்தான் தினமும் அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடல் உறுப்புகளுக்குள்
அந்த வலிமையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை
இரத்தங்களில செலுத்தி இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படித் தனித்தனியாக
1.எந்தெந்த நேரத்தில் எந்தெந்த உறுப்புக்களுக்குச் சக்தியை ஏற்றிக் கொடுக்க
வேண்டுமோ கொடுத்து
2.நம் உடலையும் நம் ஆன்மாவையும் தூய்மையாக்கும் அந்தப் பழக்கத்திற்கு வந்து
விட வேண்டும்.
3.அதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி…! ஒரு நிமிடத்தில் அல்லது இரண்டு நிமிடத்தில்
இதை எடுத்துக் கொள்ள முடியும்…!