மனிதனுக்குள்
கோப குணம் குரோத குணம் சலிப்பு குணம் சஞ்சல குணங்கள் இப்படி எத்தனையோ குணங்கள் இருப்பினும்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவன் எடுத்துக் கொண்ட நிலைகளுக்குத் தக்கவாறு அது
அது முன்னணியில் இருக்கும்.
1.ஒவ்வொரு
மனிதனுக்கும் அப்படிப்பட்ட குணங்கள் முன்னணியில் இருந்தாலும்
2.அதை
எல்லாம் தணிக்க சாந்தம் என்ற நிலைகள் கொண்டு அனைத்தையும் சாந்தமாக்கி
3.”சகோதர உணர்வுகள் வளர வேண்டும்...!” என்று அந்த உணர்வின் வேட்கையைக் கூட்டிவர்
தான் மகாத்மா காந்திஜி.
இந்த
உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அடிமைப்படாது ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
அந்த உடலில் உள்ள அந்த நல்ல உணர்வின் தன்மையைச் சகோதர உணர்வுடன் வாழ்ந்திடச் செய்ய
வேண்டும் என்பதற்குத் தான் “இராம ராஜ்யம்…!”
என்றார் காந்திஜி.
நம்
உடலுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் கோபமோ குரோதமோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வேதனையோ
கோபமோ ஆத்திரமோ இதைப் போன்ற உணர்வுகள் அனைத்தும் நாம் எடுக்கும் உயர்ந்த குணங்கள் எதுவோ
அவை அனைத்தும் மகிழ்ந்திடும் செயலாகச் செயல்படுத்தும் போது அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை
எண்ணும் போது நமக்குள் ஒருக்கிணைந்நு நம்மை மகிழ்விக்கச் செய்கின்றது. இதான் இராம ராஜ்யம்
என்பது.
(இராமன்
என்றால் எண்ணங்கள். நம் எண்ணங்கள் மாறுபட்ட நிலையில் இல்லாது ஒன்றுக்கொன்று இணைந்த
நிலையில் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது மன அமைதியும் மன மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது)
1.ஆகவே
அப்பொழுது நம்முடைய எண்ணமே (இராமன்)
2.நமக்குள்
இருக்கும் தீமைகளை அடக்கி
3.மகிழ்ந்திடும்
செயல்களைச் செயல்படுத்துகின்றது என்ற நிலையை
4.அன்று
மகாத்மாஜி தெளிவாக எடுத்துரைத்தார்.
ஏனென்றால்
நமக்குள் எத்தனையோ கோடிக்கணக்கான எண்ணங்கள் உண்டு. பகைமை உணர்வுகள் உண்டு. தீமைகள்
செய்விக்கும் உணர்வுகள் உண்டு.
ஆனால்
அதைப் போன்ற தீமை செய்யும் உணர்வுகளை வளர விடாது உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அனைவரையும்
மகிழ்ச்சி என்ற நிலைகள் பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் செயல்பட்டால் அந்த
எண்ணம் தான் ராம ராஜ்யம் என்பது.
ஒவ்வொரு
மனிதனும் மகிழ்ச்சிப்படுத்தும் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து வளர்க்கப்படும்
போது பகைமை உணர்வு இல்லாது “மகிழ்ந்திடும் சாம்ராஜ்யமாக...!” அத்தகைய உணர்வுகள் வருகின்றது.
1.மத
பேதம் இன பேதம் மொழி பேதம் அரசியல் பேதம் இல்லாத நிலைகள் கொண்டு
2.நாம்
அனைவருமே சகோதரர்கள் என்ற ஒருக்கிணைந்த வலு கொண்டு
3.மகிழ்ந்திடும்
உணர்வின் சொல்லாக நாம் சொல்லும் பொழுதும் அதை நினைவாக எண்ணும்போதும்
4.உலக
மக்கள் அனைவரும் நாம் அந்த சாம்ராஜ்யமாக “இராம ராஜ்யமாக...!” வாழ்ந்திட முடியும்.