ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 6, 2018

வீட்டிலும் ஊரிலும் நாட்டிலும் உலகிலும் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும் என்றால் “நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய வலிமையான எண்ணம் எது…?”


இன்று வாழும் அனைவருமே சற்று சிந்திக்க வேண்டும். பகைமை கொண்டு ஒருவரை அழித்து விடலாம் என்று எண்ணினால் அழிக்கவே முடியாது. அது வளருமே தவிர குறையாது. இதைத் தான் காந்திஜி சொன்னார்.
1.அவன் (கோட்ஸே) என்னுடைய உடலைத்தான் வீழ்த்தினான்.
2.என் உணர்வை வீழ்த்த முடியாது. அவனுக்கு அந்தத் திறன் இல்லை.

ஆகவே இந்த (என்னுடைய) உடலை வீழ்த்திவிட்டேன் என்ற நிலை கொண்டாலும் மக்களைக் காக்கும் உயர்ந்த நிலைகளைப் பெறும் தகுதி அவன் பெற வேண்டும் என்று எல்லோரும் எண்ணுவோமென்றால்
1.அடுத்து நாம் செய்யும் தவறுகளில் இருந்து மீள்வோம்.
2.அதற்காகத் தான் காந்திஜி அதைச் சொன்னார்.

நமக்குள் அந்தத் தெளிவான நிலைகள் வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்தல் வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் அந்தக் கடவுள் என்ற நிலைகள் வரப்படும் போது ஒவ்வொன்றும் அறிந்து செயல்படும் எண்ணங்களாக அங்கு உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் அன்று காந்திஜி நமக்கெல்லாம் வழிகாட்டியாக அதைச் சொன்னார்.

நம் வாழ்க்கையில் திடீரென்று ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால் நாம் அம்மா……! என்று அலறுகிறோம். ஆனால் காந்திஜி என்ன செய்தார்..?

தான் சுடப்பட்டு நெஞ்சிலே குண்டு பாய்ந்தாலும் அந்த உணர்வின் வேகம் அவரைக் கொல்லவில்லை. அஞ்சிடும் செயலே வரவில்லை. ஹரே…ராம்…! ஹரே..ராம்…! என்று தான் சொன்னார்.

கடைசி மொழியாக அவர் என்ன சொன்னார்…?

அவனைப் (சுட்டவன்) போன்று மற்றவர்கள் யாரும் அவன் செய்த உணர்வை எடுத்து விட வேண்டாம். அந்த நிலை கொண்டு அவனை நீங்கள் எதுவும் செய்திட வேண்டாம்.

அவனை அந்தக் குணத்திலிருந்து மீட்டும் பக்குவத்தைக் கொண்டு வாருங்கள் தான் சொன்னார். ஆகவே
1.நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தம் நல்ல குணங்களைச் சுதந்திரமாக அவரவர் உடல்களில் இயக்கப்பட வேண்டும்.
2.நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை நாம் அனைவருமே வளர்த்துக் கொள்தல் வேண்டும்.