அகஸ்தியர் உணர்வை எப்பொழுதும் சுவாசிப்பதால் எனக்குள்
எப்பொழுதுமே உமிழ் நீர் சுரந்து கொண்டே இருக்கும். எப்பொழுதாவது சிறிது உணர்ச்சி வசப்பட்டுப்
பிற உணர்வுகளைச் சுவாசிக்கும்பொழுது அந்த உமிழ் நீர் காணாது போய்விடும்.
பின் சமப்படுத்திய பின் உமிழ் நீர் மறுபடியும் சுரக்க
ஆரம்பித்துவிடும். காற்றிலிருந்தே உணர்வைச் சுவாசித்து உடலுக்குத் தேவையானவற்றைப் பெறவும்
முயற்சித்துக் கொண்டுள்ளேன்.
சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் ஒளி அலைகளைக்
கவரும் பொழுது அதன் வழி நமக்குள் உமிழ் நீர் சுரந்தது என்றால் அதில் ஒரு துளி வடிகட்டி
வந்தால் ஒரு வருடத்திற்குத் தேவையான சத்து நமக்குக் கிடைக்கும் என்று சாமிகள் (ஞானகுரு)
கூறியுள்ளார்.
அதே சமயத்தில் நம் உடலில் எந்த உபாதைகள் வந்தாலும்
புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி அகஸ்தியரை எண்ணிச் சுவாசித்தோம் என்றால்
1.அப்பொழுது (அதற்குத்தக்க) நம் வாயில் கரையும்
உமிழ் நீர் கொண்டு அந்த நோயையும் நீக்க முடியும்.
2.வலியையும் வேதனையும் குறைக்க முடியும்.
3.மருந்து சாப்பிட்டு நான் நோய் நீக்குவதில்லை.
4.இந்த முறையைத்தான் நான் கையாள்கிறேன்.
அதே போல் நான் எடுக்கும் அகஸ்தியரின் அருள் உணர்வு
கொண்டு அதனால் கரையும் உமிழ் நீர் கொண்டு வாயிலே ஊதினால் என்னிடம் இருந்து வெளிப்படும்
அந்தக் காற்றலைகள் எதை எண்ணிப் பாய்ச்சுகின்றேனோ அங்கே இயங்கி இயக்கி அடுத்தவர்களுக்கும்
சில நிலைகளை மாற்ற முடிகின்றது.
இது என்னுடைய அனுபவம். உமிழ் நீர் சுத்த சைவம்…!
இருந்த இடத்தில் எடுக்கும் உணர்வுகள் மூலம் எவ்வளவோ ஆற்றல் மிக்க செயல்களை அகத்திற்குள்ளும்
புறத்திலும் செயல்படுத்த முடியும்.
அதே மாதிரி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சில வகை
உணவை உட்கொண்ட பின் அதனின் உணர்வையும் வேறு சில உணர்வுகளையும் இணைத்துத் தன் வாயிலே
ஊதி புதுப் புது தாவர இன வித்துக்களை உருவாக்கியுள்ளார் என்று சாமிகள் சொல்லியுள்ளார்.
நாம் எடுக்கும் உணர்வுகள் (சுவாசம்) உமிழ் நீராகக்
கரைவதில் எத்தனையோ இப்படிச் சூட்சம நிலைகள் உண்டு.