ஒரு கம்ப்யூட்டரில் எந்தெந்த மொழிகளில் அதிலே பதிவு செய்கின்றனரோ அந்தக் கணக்கீடுகள்
(CALCULATION) எதுவோ அதற்குத் தக்கவாறு மொழி பெயர்ப்புகளைப் பதிவாக்கி (OPERATING
LANGUAGE) ஆணையிடப்படும் பொழுது அது இயக்கிக் காட்டுகின்றது.
பதிவாக்கிய நிலைகளைத் திருப்பி அவர்கள் இயக்கப்படும் போது அந்தந்த மொழி வரிசையில்
கம்ப்யூட்டரை இயக்குகின்றது.
அதே சமயத்தில் மொழி மாற்றத்தைத் தனக்குள் உணர்வதற்காக (TRANSLATION)
1.ஒரு மொழியின் அதிர்வை இன்னொரு மொழியின் நிலைகள் மீது ஏற்றி
2.அதிர்வொலியைச் சிறிது... பெரிது...! என்ற அழுத்தத்திற்குத் தக்கவாறு மாற்றி
அமைத்து...!
3.நூறு மொழிகள் இருப்பினும் ஒரு மொழியை வைத்து அந்த நூறையும் மொழி பெயர்த்து
விடுகின்றார்கள் இன்றைய விஞ்ஞான அறிவு கொண்டு.
இதைப் போல விஞ்ஞான அறிவில் எழுத்துச் “சுருக்கம்…” என்ற நிலையில் ஒருவர் ஒரு
சொல்லைச் சொன்னாலும் சொல்லி முடிப்பதற்குள் முதலும் கடைசியும் சேர்த்து இரண்டு எழுத்திற்குள்
சுருக்கெழுத்தாக (SHORT HAND) செயல்படுத்துகின்றார்கள்.
பத்து எழுத்தாக இருப்பினும் இடைமறித்து ப்ளஸ்(+) அதாவது குறுக்கு எழுத்துகளில்
அதனுடைய உணர்வினை நீக்குப் போக்கு என்ற நிலைகள் நான்கெழுத்து ஐந்தெழுத்து என்று வரிசையில்
வரப்படும் போது பிளஸ்… ஒரு இண்டு(X)… ஒரு புள்ளி… அதற்கப்புறம் இந்த முதல் எழுத்தும்
கடைசி எழுத்தும் கொண்டு வந்து ஒருவர் பேசப் பேச அந்த மொழிகளை (TRANSACTION) எடுத்து
எழுதிக் கொள்கின்றார்கள்.
ஒரு மனிதன் அவன் பேசும் சொல்கள் எதுவோ அதை அர்த்தம் புரிந்து கொள்ளும்படியாக
அந்த உணர்வுகளைச் சுருக்கெழுத்தாக எழுதுகின்றார்கள் தன் அறிவு கொண்டு.
அப்படிச் சுருக்கெழுத்தாகப் பதிவு செய்ததை மீண்டும் படிக்கப்படும் போது அங்கே
ஒரு மணி நேரம் பேசினாலும் ஒரு பத்து நிமிடத்திற்குள் அந்த மொழிகளைச் சுருக்கெழுத்துக்களில்
கண்டு கொள்கின்றார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.
அதைப் போன்று தான் கம்ப்யூட்டரின் மூலமாகவும்
1.அதாவது அழுத்தத்தின் உணர்வுகள் ஒன்றோடு இணைக்கப்படும் போது
2.மற்ற மற்ற எத்தனையோ மொழிகளின் தன்மையையும்
3.அவர்கள் ஆணையிடும் அழுத்தத்திற்குத் தக்கவாறு அந்த மொழி பெயர்ப்புகளாக மாற்றுகின்றார்கள்.
ஒருவர் பேசியதை எப்படிச் சுருக்கெழுத்தாக எழுதினோமோ இதைப்போல அழுத்தங்களை மாற்றி
அமைத்த பின் அந்தக் கம்ப்யூட்டர் விடை கொடுத்து
அந்த மொழியின் சாரங்களை உடனுக்குடன் எடுத்துக் கொடுக்கின்றது,
வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றுமே சூரியனில் இருந்து வரக்கூடியது. அதைத்
தான் நாம் வெயில் (ஒளிக் கதிர்கள்) என்று சொல்கிறோம். வெப்பம் உருவாகும் சக்தி. காந்தம்
அரவணைக்கும் சக்தி. விஷம் இயக்கும் சக்தி.
ஒரு மனிதனால் பேசப்பட்டதை ஒரு இயந்திரத்தின் மூலமாகப் பதிவாக்கினாலும் அதே மற்றொரு
இயந்திரத்தின் துணை கொண்டு அலை வரிசைகளாகப் பரப்பப்படும் போது அதைச் சூரியனுடைய காந்தப்புலன்
அறிவு கவர்ந்து (அதே வெப்பம் காந்தம் விஷம்) தாங்கி அலைகளாகப் பரவி வருகின்றது.
அந்த அலைகளை மீண்டும் அறிவதற்கு ஒரு இயந்திரத்தின் மூலம் பல அலை வரிசைகளில்
வைத்து (FREQUENCY) அந்த ஒலி ஒளி அலைகளை கவரச் செய்து நாம் வீட்டிலிருக்கும் கம்ப்யூட்டரிலோ
டி.வி.யிலோ காண்பதற்கு விஞ்ஞான அறிவைப் பயன்படுத்துகின்றார்கள்.
இதைப் போன்று தான் நம் உடலில் எலும்புக்குள் ஊன் என்று உண்டு. நாம் கண்களால்
உற்றுப் பார்த்துக் கவர்ந்து கொண்ட உணர்வின் நினைவலைகள் அதற்குள் பதிவாகின்றது.
அப்படிப் பதிவாக்கியதன் துணை கொண்டு அதே நினைவலைகளைக் கொண்டு வரும் பொழுது நாம்
மீண்டும் அந்த அலைகளைக் காற்றிலிருந்து இழுத்துச் சுவாசித்து நாம் செயல்பட முடிகின்றது,
1.இது இத்தனையும் பிரித்து
2.நம்மை உணரச் செய்வது
3.அந்த உணர்ச்சிகளை ஊட்டுவது
4.அந்த உணர்ச்சிகளால் இயக்கச் செய்வது (TRANSACTION) நம் உயிர் தான்,
நாம் சுவாசிக்கும் உணர்வலைகள் உயிரில் பட்டு இயங்கும் நிலையும் அதே போல் உணர்வின்
அலைகள் ஒரு இயந்திரத்தின் மூலம் எப்படி மாற்றப்பட்டு அது இயக்கும் நிலையும் நீங்கள்
அறிந்து கொள்வதற்காக விஞ்ஞான அறிவினை இணைத்து மெய் ஞானிகள் கண்ட மெய் உணர்வை உணர்த்துகின்றோம்,