ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2018

வேகமாக அடிக்கும் ஆடிக் காற்றினால் நன்மைகள் பெருகுவதை உணர்ந்து தான் அதைப் “ஆடிப் பெருக்கு...” என்றார்கள் ஞானிகள்


ஆடி மாதத்தில் கேரளா கர்நாடகா மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் எல்லாம் நன்றாக மழை பெய்கின்றது. நீர் வளம் பெருகுகின்றது.

அங்கே பெய்யும் அழுத்தங்கள் அதிகரிக்கும் போது அதிலிருந்து மோதும் காற்றலைகள் மழை இல்லாத இடங்களுக்கு அதைக் காற்றாகத் தள்ளி வருகின்றது. எப்படி...?

வெப்பத்தால் ஒன்றை நாம் கொதிக்க வைக்கப்படும் பொழுது அது ஆவியாக வெளி வந்து நகர்ந்து செல்கின்றது. இதைப்போல
1.சூரியனின் வெப்பத் தணல் மழை பெய்யும் இடங்களில் இருக்கும் குளிர்ச்சியின் வேகத்துடன் மோது பொழுது
2.அதனால் அழுத்தத்தின் தன்மை அதிகரிக்கப்பட்டு
3.அந்த வெப்பத்தின் சக்தியால் காற்றாகப் பெருகுகின்றது.

உதாரணமாக ஒரு பாய்லரில் (BOILER) வெப்பத்தை அதிகமாகக் கூட்டும் பொழுது உள்ளிருக்கும் ஆவிகள் (GAS) அழுத்தம் அதிகரிக்கும் போது மூடியைப் பிளந்து வெளியிலே செல்லும்.

அதைப்போல ஒரு பகுதியில் பெய்யும் மழை தனக்குள் வரும் வெப்பத்தின் தணல்களைக் கவர்ந்து அது அலைகளாக வரப்படும் போது அந்த வெப்பத்தின் தணலால் “காற்றின் வேகம் அதிகரிக்கின்றது...!

அந்தக் காற்று தாவர இனங்களின் மீது பட்டு அதனுடைய வித்துக்களை எல்லாம் அடித்துச் சென்று மற்ற இடங்களில் அதைப் பெருக்கச் செய்கின்றது. இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அங்கே மழை பெய்கின்றது. அதிலிருந்து வரும் அழுத்தத்தின் தன்மை அங்கே நிலைப்பதில்லை. இங்கே வருகின்றது. நீரைக் கவர்ந்து வரும் நேரத்தில் வெப்பத்தின் தணல் தாக்கப்படும் போது காற்றின் அழுத்தம் அதிகரிக்கின்றது.

காற்றின்  வேகத் தொடரினால் தாவர இனங்களில் உள்ள வித்தினை மற்ற இடங்களுக்குப் பரவச் செய்தாலும் மற்றோர் பக்கம் விளைந்திடும் தாவர இனத்தில் இணை சேரும் போது அதற்குள் உறைந்த நஞ்சின் தன்மை கொண்ட அணுக்கள் உருவாவதை இது அப்புறத்துகின்றது.

இந்த ஆடிக் காற்று இவ்வளவு சிறந்தது. எப்படி எல்லாம் நல்லதைப் பெருக்குகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள். தீமை அகற்றும் சக்தியாகப் பெருகுகின்றது.

1.குடகிலே (கர்நாடகா) நீர் பெருக்காகின்றது. அதனின் பெருக்கு இங்கே பதினெட்டாம் பெருக்காகின்றது.
2.அங்கே பதினெட்டாம் பெருக்காகின்றது. நீரின் தன்மையால் இங்கே காற்றின் பெருக்கம் அதிகமாகின்றது.

காற்றின் பெருக்கம் அதிகமாகும் போது அதிலிருந்து தீமையை அகற்றும் சத்தின் வல்லமை மற்ற தாவர இனங்களுடன் மோதி அதிலுள்ள நஞ்சினை நீக்கும் சக்தி பெருகுகின்றது.

1.இது வழித் தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக
2.அது இணைந்திடும் சக்தியாக
3.அது இயங்கும் தன்மையாக
4.இயற்கையின் நிலையாக ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றது.

உதாரணமாக
1.ஒரு கோபத்தை உண்டாக்கும் செயலை நாம் கான நேர்ந்தால் அந்தக் கோபமான உணர்வுகள் நமக்குள் பெருகி நம் உடலுக்குள் கோபமான அணுக்கள் பெருக ஆரம்பிக்கின்றது.
2.அதைப் போல ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று அதைக் கண்டுணரப்படும் போது நமக்குள் வேதனையின் சக்தி பெருகுகின்றது.
3.நோயினால் வாடுகிறான் என்று ஒருவனை உற்று பார்த்தால் அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் போது நமக்குள்ளும் வேதனையாகின்றது.

இதைப் போன்றே தான் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி நமக்குள் இருக்கும் தீமையை நீக்கும் சக்தியாகப் பெருக்கிடல் வேண்டும்.

அதே சமயத்தில் நமக்குள் விளைந்த அந்தத் தீமையை அகற்றும் சக்திகள் நாட்டு மக்கள் அனைவருக்குள்ளும் பெருக வேண்டும் என்ற “பெருக்காக... நாம் அதைப் பெருக்கிடல் வேண்டும்.

ஒவ்வொருவரும் இந்த உணர்வின் சொல்லாகப் படரச் செய்யப்படும் பொழுது... அது மழையாகப் பொழியும் நீருக்குள் விளைந்து... அதனின் உணர்வின் தன்மை ஆவியாக மாறி... தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகி... அடுத்து நல்ல தாவர இன வித்துக்களைப் பெருக்கும் தன்மையாக வருகின்றது.

இத்தனை நல்லதையும் நினைவுபடுத்தும் நந்நாள் தான் “ஆடிப் பெருக்கு...!