ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2018

உயிருக்குள் உலகமும் உலகுக்குள் உயிரும் – “பிரம்ம ரிஷி...!”


1.ஓர் உயிர் அணு தோன்றும் போது இயக்கத்தை ஈசனாகவும்
2.அதனின் இயக்கத்தின் தொடருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணுவாகவும் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் விஷ்ணு என்ற வெப்பத்தின் தணல் ஆகும் போது அதிலே ஈர்க்கப்படும் சக்தியாகக் காந்தம் உருவாகுவதை லட்சுமி என்றும் வெப்பத்துடன் இணைந்த நிலைகள் கொண்டு இயங்குவதால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும் பெயரை வைக்கின்றார்கள்.

இதிலே நாம் எதை எதை எல்லாம் எண்ணுகின்றோமோ நமது உயிர் அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து “ஓ…! பிரணவமாக்கி என்று உணர்வின் சத்தை ஜீவனாக்குகின்றது (அதாவது உருவாக்குகின்றது)
அது எதனின் குணமோ
1.அதனின் மணமாக
2.அதனின் உணர்வாக
3.அதனின் ஞானமாக உடலிலே இயக்கும்.
4.ஆக விஷ்ணுவின் மகன் “பிரம்மா...! என்று பெயரை வைக்கின்றார்கள்.

உயிரின் இயக்கத்தால் ஏற்படும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தான் கவர்ந்த சத்தின் தன்மையைத் தன்னுடன் இரண்டறக் கலக்கச் செய்யும் போது அதிலே உருப்பெறுவது தான் “விஷ்ணுவின் மகன் பிரம்மா…! என்பது.

இயக்கத்தை ஈசன் என்றும் இயக்கத்தால் ஏற்படும் அந்த வெப்பம் விஷ்ணு என்றும் வெப்பத்தால் கவரும் காந்தமாகும் பொழுது அது லட்சுமி ஆகின்றது.

நாம் ஒரு உயர்ந்த பொருளைப் பார்க்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்போது அந்தக் காந்தம் இயக்குகின்றது.
1.அந்த இயக்கத்தின் தொடர் நம் உயிரிலே இயக்ககப்படும் போது ஓ…! என்று பிரணவமாகின்றது.
2.உயர்ந்த ஒரு பொருளையோ மற்றதையோ பார்த்து அதைப் பெறவேண்டும் என்ற நினைவலைகள் கொண்டு
3.நமக்குள் நாம் சுவாசிக்கும் போது அது உயிரிலே பட்டு இயக்கப்பட்டு
4.அந்த உணர்வுகள் ஓ...! என்று பிரணவமாகின்றது.
5.பின் ம்…! என்று அது உடலாகச் சிருஷ்டிக்கின்றது.
6.ஆகவே தான் விஷ்ணுவின் மகன் பிரம்மா…!
7.ஏனென்றால் இது இயக்கத்தால் ஏற்படும் நிலை.

அதாவது நாம் நுகர்ந்த நிலைகள் விஷ்ணுவால் இயக்கப்படும் பொழுது “ஓ… ம்…! அது பிரம்மம் “சிருஷ்டி.. உடலாகச் சிருஷ்டிக்கப்படும் நிலை பிரம்மா.

ஆனாலும் தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை ஜீவனாக்கப்படும் போது பிரம்மாவின் மனைவியாக (சக்தியாக) “சரஸ்வதி...! என்று காட்டுகிறார்கள் ஞானிகள்,

1.விஷ்ணுவின் மகனாகத் தனக்குள் இந்த உயிர் எப்படி இயக்குகின்றதோ
2.அதைப்போல நம் உடலிற்குள் எண்ணிய உணர்வின் சக்தியையும் அது இயக்குகின்றது.

அதனால் தான் விஷ்ணுவின் மகன் பிரம்மன் என்று சொல்வது. பிரம்ம ரிஷி. யார்…?
1.இந்த விஷ்ணுவைப் பிரம்ம ரிஷி என்றும்
2.அதே சமயத்தில் அவனிலே விளைந்த நிலைகள் அதுவும் சிருஷ்டிக்கும் தனமை பெற்றது.
3.பிரம்ம ரிஷியின் மகன் பிரம்ம ரிஷி. அதுவும் சிருஷ்டிக்கும் நிலைகள் பெறுகின்றது என்று தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நம் உயிரைப் பற்றியும் உடலைப் பற்றியும் உயிரின் இயக்க நிலைக்ளையும் உடலாக அது எப்படி உருவாக்குகிறது என்ற பேருண்மைகளைச் சாதாரண மனிதனும் அறிந்து கொள்வதற்காக உணர்ந்து கொள்வதற்காக இதை எல்லாம் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

நாம் உணர்ந்து கொண்டால் எது நம்மை இயக்குகிறது...? எது நம்மை மாற்றுகிறது...? நாம் எதுவாக ஆக வேண்டும்...? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்...? என்ற மெய் ஞானம் பெற்று ஞானிகள் சென்ற மெய் வழியில் செல்ல முடியும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது...!