இந்தக் காற்றில் கலந்துள்ள பல வகை மூலிகைத் தன்மைதான்
நம் சுவாசத்தில் வந்து தான் நம் சுவாசத்திலும் வந்து கலக்கின்றது. நாம் ஆண்டவனை நினைத்துச்
சில நிலைகளில் நம் உடல் நலக் குறைவுக்காக நம்பி எண்ணும் பொழுது
1.அந்தச் சித்தர்கள் உருவில் உள்ளவர்கள்
2.நலிவுற்ற உடலுக்கு அந்த உடலுக்கேற்ற மூலிகையின்
மணத்தை
3.அந்த நலிவுற்றோருக்குச் சுவாச நிலையிலேயே அளிக்கின்றார்கள்.
மறைந்துள்ள சித்தர்களின் நிலையெல்லாம் பல கோடி இரகசியங்களைத்
தனக்குள்ளே மறைத்து வைத்திருந்தாலும்
1.ஏங்கிடும் இதயத்திற்கு அவர்கள் பெற்ற சக்தியை
2.எந்த வழியிலாவது புகட்டி ஆசீர்வதிக்கின்றார்கள்.
தானறிந்த பல சக்தியின் இரகசியங்களை மக்களின் நிலைக்கு
உகந்தபடி அந்த இரகசியங்களை வெளியிடாமல் “பல வகைகளில்…!” இன்றும் புகட்டிக் கொண்டு தான்
இருக்கின்றார்கள்.
பல கோடிச் சித்தர்கள் இன்றும் உடலுடன் இந்த உலகிலே
உலாவிக் கொண்டு தான் உள்ளார்கள். பல சித்தர்கள் பல வகைக் குகைகளை அமைத்தும் சமாதிநிலை
எய்தியும் இன்றும் உள்ளார்கள்.
எப்படி இந்த உலகிலே வாழும் மனிதர்கள் குடும்பம்
குடும்பமாக ஒன்றாகக் கலந்து வாழ்கிறார்களோ இந்த உலகிலே அதே போல் தான்
1.பல ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் ஒன்று கலந்து
ஒரு நிலைப்பட்டு
2.இந்த மக்களுக்காக அவர்கள் ஒரு உலகில் “சப்தரிஷி
மண்டலங்களாக…” வாழ்கிறார்கள்.
3.அந்த உலகில் இருந்து தானப்பா மனித உடலுடன் வாழும்
மக்களின் உலகிற்கு பல நிலைகளைச் செய்திட முடிகிறதப்பா..!
அன்று இருந்த சித்தர்கள் கோவில் அமைத்து
1.மனிதர்களின் எண்ணங்களை எல்லாம் ஒன்றுபடுத்திடத்தான்
2.அந்த ஆண்டவன் அந்தக் கோவிலிலே அமர்ந்துள்ளான்…!
என்ற எண்ணத்தை
3.மக்களின் மனதினிலே ஆழமாகப் பதிய வைத்தார்களப்பா…!
மனித எண்ணத்தில் தான் பல தவறுகள் செய்தாலும் அந்த
ஆண்டவனிடம் “மன்னிப்புக் கேட்கும் எண்ணமாவது… … இன்றும் உள்ளதப்பா…!”