ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2018

ஐயப்பன் உரைத்த பதினெட்டாம்படியின் தத்துவம்


பதினெட்டாம் படி என்றால் வழுக்கி விடும் நிலைகள் பெற்றது. 
1.உயர்ந்த குணத்தை எவ்வாறு சிரசில் ஏற்றி
2.பொறுமையாக அந்தப் பதினெட்டாம்படியில் எவ்வாறு  ஏற வேண்டும் என்ற தத்துவத்தைக் காட்டுவது தான் “ஐயப்பன் கோவிலின் தத்துவமே…!”

ஐயப்பன் ஒரு தவயோகி. தவயோகி என்று சொல்வதற்கு முன் அவர்  ஒரு அரசன். பல அரச போர்களைச் செய்து அதனின் நிலைகளிலிருந்து விடுபட்டவர். இருப்பினும் கூடுவிட்டுக் கூடு பாயும் நிலைகளைத் தனக்குள் கற்றுணர்ந்தவர்.

அன்று முகமதியர் படையெடுத்து வரும் போது உடலின் தன்மைகள் மடியப்படும் போது அவர்களுடைய பெருக்கம் இந்த நாட்டிலிருப்பதைத் தடைபடுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டு குழந்தையிந் உடலுக்குள் செல்கிறார்.

ஏனென்றால் அக்காலங்களில் இனத்திற்குள் இனம் பல போர் முறைகள் ஆகித் தன் தன் சுயநல்னுக்காகச் செயல்படும் பொழுதுதான் அரசுகள் சீர்குலைந்தது. ஆகவே
1.எது எது பெருகுகின்றதோ… அப்படிப் பெருகும் நிலைகள் கொண்டு
2.எது எது விளைகின்றது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் நல்லது (அதற்குத்தான் இதைச் சொல்வது)

குழந்தையின் கூட்டுக்குள் சென்று நீரிலே மிதந்து வந்து… குழந்தையில்லாத அரசன் கையிலே சிக்கி அங்கே பல சித்துக்களைச் செயல்படுத்துகின்றார் ஐயப்பன்,

தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டும் என்ற உணர்வின் தன்மை கொண்டு தன் இனம் எதுவோ அதைக் காத்துக் கொள்ளவும்… தன் அரசை நிலைத்துக் கொள்ளச் செய்வதற்காகவும்… கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்தினார்.

உதாரணமாக ஓர் சினிமா நடிகராக இருக்கிறேன் என்றால் ஐயப்பனுக்காக நான் சில பொருள்களைக் காணிக்கை செய்யப் போகிறேன்…! என்று அங்கே போகின்றார்கள். ஆனால்
1.அவர் செய்த பிழைகள் எதுவாக இருப்பினும்
2.மற்றவர் மத்தியிலே புகழ் தேடும் நிலைகளுக்காக
3.ஐயப்பனுக்குக் காணிக்கை செலுத்தப் போகின்றேன் என்று பறைசாற்றுகின்றார்கள்.

உடனே புகழ் பெற்ற ஒரு நடிகர் “ஐயப்பனைத் தரிசிக்கச் செல்கிறார்...!” என்று சொல்லிக் கொண்டு அவருக்குப் பின் பலரும் அங்கே செல்லத் தொடங்குகிறார்கள். அந்த நடிகர் செய்த அதே இச்சையைத் தான் மற்றவர்களும் கவர நேர்கின்றது.

நடிகர் செல்கிறார்…..! என்றால் அதன் வழிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகளும் அதன் தொடர் வரிசையில் இருக்கக்கூடிய தொழில் செய்வோரும் பின்னாடி சென்று அவருக்கு இணக்கமாக நடந்தால் அதன் வழிகளில் “நமக்கும் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்கும்...!” என்று இதைப் பெருக்க எண்ணுகின்றார்கள்.

ஆனால் அன்று அந்தத் தத்துவ ஞானி பல போர் முறைகளின் தன்மை கொண்டாலும்
1.அஷ்ட திக்கிலிருந்து வரக்கூடிய இருள் சூழும் நிலைகள் எதனை அழித்துக் கொண்டு உள்ளது...?
2.மனிதனின் உயர்ந்த குணத்தை அது எவ்வாறு இழக்கச் செய்கின்றது…?
3.அஷ்ட திக்கிலும் பல நிலைகளில் பல முறைகளில் பல கோணங்களில் மனிதனை அது எப்படி மாற்றுகின்றது...?
4.அத்தகைய உணர்விலிருந்து ஒவ்வொருவரும் எவ்வாறு விடுபட வேண்டும்...?
5.தன் மக்களை எவ்வாறு மீட்ட வேண்டும்...? என்ற நிலையில் ஆறாவது அறிவின் தன்மையை எவ்வாறு அது பெருக்க வேண்டும் என்று உணர்த்தினார்.

ஏனென்றால் அநாகரிக நிலைகள் கொண்டு மற்ற மதத்தின் தன்மை நம் நாட்டிலே படையெடுத்து வந்தது. “அதற்குள் நாம் அடிமையாகி விடக்கூடாது...!” என்பதற்காக மன வலுவைக் கொடுப்பதற்காகவும் ஒழுக்க நெறியைக் கூட்டுவதற்கும் அந்தக் குழந்தை வடிவில் அரசனின் குழந்தையாக நிலைத்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு தீமைகளை அடக்கும் சக்தியைக் கொண்டு வந்தார்.

1.மனித வாழ்க்கையில் எந்தத் தீமைகளும் நுழையாது தனக்குள் வலுபெற்ற அந்த நிலைகள் பெருக்க வேண்டும் என்றும்
2.அஷ்ட திக்கிலிருந்து தாக்கும் உணர்வுகளை அடக்கி
3.அந்த உணர்வின் தன்மையை ஒளியாகப் பெருக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையாக விண் செல்ல வேண்டும் என்பதே அவர் உரைத்த உண்மைகள்.