ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2018

“டெலிபதி (TELEPATHY) போன்று…” பிறரின் எண்ணங்கள் நம்மை எப்படி இயக்குகிறது நம் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!


பாம்பு ஒரு தவளையை விழுங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். பாம்பின் வாயில் சிக்கிய அந்தத் தவளை பாம்பின் உணர்வைத் தனக்குள் முழுமையாக எடுத்து அந்த நஞ்சான உணர்வின் தன்மை கொண்டு அதனின் உணர்வாக அதற்குள் கருவாகி அதனின் (தவளை) ரூபங்களை மாற்றுகின்றது.

 இதைப் போன்று தான் மனிதர்களான நாமும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வின் தன்மையால் தனக்குள் ஏற்படும் மாற்றங்களை மெய் ஞானிகள் தெளிவாக்கிக் காட்டுகின்றார்கள். எப்படி…?

உதாரணமாக ஒரு நான்கு பேர் நண்பராக இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவர் இன்னொருவருடன் நெருங்கிப் பழகுகிறார். ஆனால் மற்ற மூன்று பேரை அதிகமாக நேசிக்கவில்லை.

இருப்பினும் இன்னொரு மனிதனை நேசிக்கும் இந்த நண்பர் சந்தர்ப்பவசத்தால் தன் குடும்பத்தில் மிகுந்த வெறுப்பின் தன்மை அடைந்து அதனால் மிகவும் வேதனப்பட்டு நோயாக ஆகின்றார்… பின் அதனால் அவர் மடிகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் நோயிலே வாடும் நேரத்தில் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் அவருக்குச் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை அவரைக் கவனிக்கவில்லை  என்றால் நண்பர் மீது பாசத்தை ஓங்கி வளர்த்திருந்த நிலைகள் கொண்டு
1.என் குடும்பத்தில் இப்படிப்பட்ட நிலை இருக்கின்றது நண்பா…! என்று அடிக்கடி எண்ணுவார்
2.எந்த நண்பர் மீது பாசம் அதிகமாகக் கொண்டானோ அவன் அமெரிக்காவில் இருந்தாலும் இவனுடைய உணர்வு அவன் உடலில் பதிவாகிறது,
(3.அதாவது டெலிபதி (TELEPATHY) போன்று பதிவாகிறது.)

இன்று விஞ்ஞான அறிவால் டெலிபதி (TELECOMMUNICATING SYSTEMS) என்று உருவாக்கி எவ்வாறு இந்தத் தட்டெழுத்தின் (TYPING) உணர்வின் தன்மயை எங்கிருந்தோ பதியச் செய்யும் பொழுது இங்கே நம்மால் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று தான் இந்த மனிதன் எவன் மேல் பாசம் வைத்தானோ அது அவன் உடலிலே கணங்களுக்கு அதிபதியாகி உடலை விட்டு அகன்ற பின் அந்தப் பாசமான நண்பன் உடலுக்குள் சென்று விடுகின்றது.

முதலில் குடும்பத்தின் மீது ஏற்பபட வெறுப்பால் சுவாசித்த அந்த விஷமான உணர்வுகளால் இவன் உடலிலே நோயாகின்றது.
1.தன் குடும்பத்தில் பாசமற்ற நிலைகள் கொண்டு இங்கே குடும்பத்தை வெறுக்கின்றது.
2.ஆனால் தன் நண்பன் மீதோ அதிகமான பாசத்தை வைக்கின்றது.

எதனின் பற்று இங்கே அதிகமாகின்றதோ இதனின் தொடர் கொண்டு இந்த ஆன்மா சென்ற பின்
1.அந்த நண்பன் அமெரிக்காவில் இருப்பினும்
2.உன் நண்பன் இறந்துவிட்டான்…! என்ற செய்தியை எப்பொழுது கொடுக்கின்றனரோ அப்பொழுது அவன் ஈர்ப்புக்குள் செல்லும்.
3.உடலை விட்டு வெளியில் வந்தாலும் அந்த நண்பன் உணர்வு கொண்டே இந்த உயிரான்மா இருக்கும்.
4.அது வரையிலும் எவர் உடலுக்கும் செல்லாது.

அந்த நண்பன் இப்படி இறந்துவிட்டான் என்று சொன்னதும் ஆ…! அப்படியா…! என்றஅந்த உணர்வின் வேகத்தால் அந்த உடலுக்குள் சென்றுவிடுகிறது.

சென்ற பின் இவன் எப்படி எல்லாம் தன் குடும்பத்தில் சிக்கலாகி எந்தெந்த வெறுப்பின் தன்மை அடைந்தானோ எப்படி நோயாக ஆனதோ இதைப் போல் அங்கேயும் நோயாக்கி இவனைப் போன்றே அந்தக் குடும்பத்திலும் பல தொல்லைகள் உருவாகி  அவனின் வளர்ச்சியும் குன்றிவிடும்.

முதலில் சொன்ன மாதிரி ஒரு தவளை எப்படிப் பாம்பின் உடலுக்குள் சென்றபின் அதனின் கருவை எடுத்து அதனின் ரூபமாக மாற்றியதோ இதைப் போல
1.இவனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மனித உடலுக்குள் சென்ற பின்
2.தனக்குள் விளைந்த விஷமான உணர்வுகளை நண்பன் உடலுக்குள்ளும் நிரந்து (பரவச் செய்து)
3.அதே கஷ்டத்தின் தன்மையை உருவாக்கி அந்த மனிதனின் நிலைகளையும் சீர்கெடச் செய்கின்றது.

நண்பராகப் பழகியது தப்பா..? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆக இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

நம்மை அறியாமல் இப்படி இயக்கும் இருள் சூழ்ந்த நிலைகளைத் தடுப்பதற்குத்தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால் அந்த மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கிப் பழகியவர்கள், உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக ஆக்கிக் கொண்டவர்கள்,

இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை
1.மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து
2.உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலிலும் அதை இணைத்துக் கொண்டே வந்தால்
3.அந்தந்த நேரத்தில் அதற்குண்டான அளவுகோல் (ஞானம்) கொடுக்கும்.
4.மகரிஷிகளின் உணர்வுகளைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்துவிடும்.

மகரிஷிகளின் உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருகிவிட்டால் அது மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறி தீமைகள் புகாது தடுத்துவிடும். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.