ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2018

இராமன் குகனை ஏன் முதலில் நட்பாக்கிக் கொண்டான்…! – “ஞானிகள் காட்டிய டயாலிசிஸ் (DIALYSIS)”


நாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக அலைகளாகப் பரவி இருக்கின்றது.

ஒருவரை நாம் உற்றுப் பார்க்கும் பொழுது நம் கண்களின் கருவிழி அவரைப் படமாக்கி நமக்குள் பதிவாக்குகின்றது.

மீண்டும் நாம் அவரை நினைக்கப்படும் பொழுது அந்தக் கருவிழி பதிவானதை
1.கண்ணோடு சேர்ந்த காந்தப் புலனறிவு அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைக் கவர்ந்து
2.பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது
3.நம் ஆன்மாவாக மாற்றி நம் நெஞ்சுப் பகுதிக்கு முன் சேர்த்தபின்
4.நமக்குள் உணர்ச்சிகள் தூண்டுவதற்கொப்ப நமது உயிர் சுவாசத்தின் வழியாக உள்ளே இழுத்து
5.உடலிலுள்ள அந்தந்த அணுக்களுக்குத் தேவையான உணவைக் கொடுக்கின்றது.
6.நம் இரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் பாய்ச்சுகின்றது.
7.அப்பொழுது ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்களுக்குச் செல்கின்றது.

இராமயாணத்தில் குகன் இராமன் குகனைத் தன் சகோதரனாக்கிக் கொள்கின்றான் என்று காட்டப்பட்டுள்ளது. குகன் அங்கே ஆற்றில் படகிலே செல்கின்றான்.

அதாவது இந்த உடலான குகைக்குள்… உடலுக்குள் இரத்தங்கள் தான் ஆறாகவும் ஓடையாகவும் ஓடுகின்றது,

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் அருள் ஒளியின் சுடரை நமக்குள் எடுக்கப்படும் போது
1.அந்த உணர்வலைகள் இரத்தத்தில் கலந்து
2.பகைமையற்ற உணர்வுகளாக உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும் இயக்குகின்றது.
3.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நம் உடலுக்குள் நட்பின் தன்மையை உருவாக்குகின்றது.

அதாவது
1.உயர்ந்த குணத்தின் உணர்வை நமக்குள் எடுத்து
2.இந்த இரத்தத்தில் அந்த உயர்ந்த குணங்களைக் கொண்டால்
3.நம் உடலுக்குள் என்றைக்குமே நல்லது செய்யும்…! என்பதுதான் அதனுடைய உட்பொருள்.
4.அதனால்தான் குகனை முதலில் நட்பாக்கிக் கொள்கின்றான் இராமன். (இராமன் என்றால் எண்ணங்கள்)

காடு வனாந்திரங்களுக்குள் சென்றாலும் பகைமையற்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்கும் தன்மை வருகின்றது.  அதனால் முதலில் குகனை நட்பாக்கிக் கொள்கின்றான். (இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்துகின்றான்)

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள்  பெற வேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். எங்கள் உடலிலுள்ள அனைத்து இரத்தங்களிலும் படர வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வுகள் உடலிலுள்ள எல்லா இடங்களுக்கும் போகின்றது.
1.நம் உறுப்புகளில் எங்கெங்கெல்லாம் தீங்கு விளைவிக்கக்கூடிய நிலைகள் இருக்கின்றதோ
2.அதை எல்லாம் இது அடக்குகின்றது.
3.நம் இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றது.
4.சிறுநீரகத்தைச் சீராக இயங்கச் செய்கின்றது.

இன்றைய நச்சான காற்று மண்டலத்திலிருந்து நாம் சுவாசிக்கக் கூடிய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் சிறுநீரகம் சரியாக இயங்க வேண்டும் என்றால் இந்த முறையை அவசியம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.