ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 6, 2018

யாம் உபதேசிக்கும் உணர்வை உங்கள் உணர்வுடன் ஒட்டித் திருப்பி விட்டால் தான் பேருண்மைகளை அறிய முடியும்…! உணர முடியும்…!


படிப்பறிவை வளர்ப்பவர்கள் புத்தகத்தைப் படிக்கின்றார்கள். பாடத்தை நன்றாக மனதில் வைத்திருக்கின்றார்கள்.

ஏனென்றால் “வாத்தியார்…” படித்துத் தானே பாடத்தைச் சொல்லிக் கொடுப்பார். அது அப்படியே நினைவில் இருக்கும், அதை அப்படியே பரீட்சையில் ஒப்பித்துவிடுவார்கள். பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்று விடுகின்றார்கள்.

பரீட்சையில் முதலாவதாகத் தேர்ச்சி அடைந்தாலும் கடைசியில் தொழிலுக்குப் போகும்போது என்ன செய்யும்…? நுட்பமான நிலைகள் வரும் பொழுது சிக்கலாகும்.

ஒரு அன்பருடைய பையன் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறான். வகுப்பில் முதன்மை நிலை (class first) படிப்பில் தேர்வாகிவிட்டான். அந்தப் பையனின் தங்கையும் படிப்பில் முதன்மை நிலை.

ஆனால் அந்தப் பையன் ஒரு விஷயத்திற்கும் லாயக்கு இல்லை. ஏனென்றால் நான்கு முறை கேள்வி கேட்டு ஒரு வார்த்தையைச் சொன்னோம் என்றால் முழிக்கின்றான்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.சொல்வதை மட்டும் (இங்கே உபதேசிப்பதை) நாம் பதிவாக்கிவிடக் கூடாது
2.அதையே திருப்பிப் பேசக்கூடாது.
3.இந்த உபதேசத்தின் உணர்வுகள் எதுவோ
3.உங்களிடத்தில் நான் (ஞானகுரு) பேசும் பொழுது உங்களுடைய உணர்விற்குத் தக்க பேசுகின்றேன்
4.நான் சொன்னதையே எடுத்துப் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களுடைய உணர்வு ஏற்றுக் கொள்ளவும் மறுக்கும்
5.உங்கள் உணர்வோடு ஒட்டி… “அந்த உணர்வைத் திருப்பி விட்டால் தான்…!” அங்கே அறியச் செய்யும். (தோசையைப் பிரட்டிப் போடுவது போல்)

சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா..?

ஒருவரிடம் நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால் அவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு எப்படா இவர் முடிப்பார் என்று…! எண்ணுவார். இல்லையா…? நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும் போது எத்தனை பேர் எழுந்து ஓடிவிடுகின்றார்கள்.

இப்போது நானே உபதேசித்துக் கொண்டும் வரும்போது சிலருடைய உணர்வை எடுத்து பேசிக் கொண்டே இருப்பேன்

ஆயிரம் பேர் வருகின்றார்கள் என்றால் அந்த ஆயிரம் பேரின் எண்ணத்தை  எடுத்துப் பிரதிபலிக்கப்படும் போது
1.அந்த ஆயிரம் பேருக்கும் பொருந்துவது போலத்தான் இந்த உபதேசம் இருக்கும்.
2.நான் நினைத்துக் கொண்டு வந்தேன்… சாமி (ஞானகுரு) சொல்லிவிட்டார்…! என்று ஒவ்வொருவரும் சொல்வார்கள்
3.அப்போது அங்கே ஒரு பற்று வருகின்றது.

(அதாவது) எனக்குச் சொல்வது போல் இருக்கின்றது என்று நீங்கள் எண்ணினாலும் அடுத்தவரிடம் சொல்லும் பொழுது அவருடைய மனதிற்குத் தக்கவாறு இதை இணைத்து அவர்களை அறிய வைக்க வேண்டும்.

உங்கள்  ஒவ்வொருக்குமே வாழ்க்கையில் இதைப் போன்ற எத்தனையோ சந்தர்ப்பங்கள் வரும். ஆனால் அதைச் சீராகப் பயன்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இதை உங்களுக்குச் சொல்வது.

ஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்கு எளிதில் கொடுக்கின்றேன். கஷ்டப்பட்டுத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அறிய வைத்தார்.

உங்களுக்கு நினைத்தவுடன் அந்த மகரிஷிகளின் ஆற்றலைக் கிடைக்கும்படியாக யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

சாமி தான் காப்பாற்றுவார் என்று நினைக்கிறார்கள்.
1.சாமி சொன்ன வழியில்…
2.நம் எண்ணம் நம்மைக் காப்பாற்றும்…! என்று என்றைக்கு எவர் எடுக்கின்றார்களோ
4.அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.

யாம் உபதேசிக்கும் உணர்வை உங்கள் உணர்வுடன் திருப்பி விட்டால் குருநாதர் எமக்கு உணர்த்திய அத்தனை பேருண்மைகளையும் நீங்கள் நிச்சயம் அறிய முடியும்.