அருள் ஒளியின் சுடரை நமக்குள் ஏற்றி மோட்சத்திற்கு வழியைக் காட்டுகின்றார்கள்
ஞானிகள். “வருடா வருடம்” நரகாசுரனைக் கொன்ற நாள் என்று தீபாவளியைக் கொண்டாடுகின்றோம்.
ஆனாலும் அந்த விஷத்தின் தன்மை மறுபடியும் இயக்குவதற்குக் கொண்டு
வருகின்றான். காவியங்களில் இப்படி எழுதி இருப்பார்கள். அர்த்தம் சொல்ல வேண்டுமே…!
ஏனென்றால் எதிலும் எனக்கு இறப்பு வரக்கூடாது என்று இரண்யன் வரம்
வாங்கிக் கொள்கின்றான். அந்த வரத்தைக் கொடுக்கின்றார்கள். கொடுத்த வரப்படி எதுவுமே
மடிவதில்லை.
1.நாராயணன் யாரையாவது கொல்கின்றானா...?
2.விஷ்ணு யாரையாவது கொல்கின்றானா...?
3.கடைசியிலே எந்த முடிவுக்கு வருகின்றார்கள்...!
ஒளியாக மாற்றி (நஞ்சை ஒடுக்கி) அதன் உணர்வை எடுத்தோமென்றால்
1.ஒன்றை இயக்கச் செய்கின்றது.
2.இங்கேயும் காக்கச் செய்கின்றது... மற்றொன்றையும் காக்கச் செய்கின்றது.
3.அவனுக்குக் கொடுத்த வரப்படி கொல்வதில்லை.
மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொருவரும் நமக்குள் சேர்த்து வலிமையாக்கினால்
தீமை செய்யும் உணர்வுள் நம் ஆன்மாவில் இருந்து அகன்று சென்றுவிடும். அனாதையாகிவிடும்.
தீமைகளை அகலச் செய்து விட்டால் அதைச் சூரியன் தனக்குள் எடுத்துக்
கொள்கின்றது. சூனிய மண்டலத்திற்குள் இணைக்கச் செய்து கடலுக்கடியில் உப்பு நீருடன் இணைத்து
அதை மாற்றிவிடுகின்றது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், ஞானிகள் காட்டிய மூலத்தை அறிந்து
கொண்டால் போதும்.
ஆகவே எதுவுமே மடிவதில்லை. மலர்கின்றது. மாற்றம் அடைகின்றது. இதைத்
தான் கீதையிலே
1.இந்த உடல் மடிகின்றது.
2.உணர்வுகள் வளர்கின்றது.
3.உணர்வுகளுக்கொப்ப உருக்கள் பெறுகின்றது.
4.இன்றைய நிலை நாளை இல்லை என்று தெளிவாக்குகின்றார்கள்.
இன்றைய செயல் நாளைய சரீரம். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாக
நமக்குக் கொடுக்கின்றார். இவ்வளவு பெரிய விளக்கத்தை எவ்வளவோ நாள் அலைந்து திரிந்து
தான் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டேன்.
தெரிந்து கொண்ட பிற்பாடு நாம் எத்தனை பேர் இந்தத் தியானத்தில் இருப்பவர்கள்
கடைப்பிடிக்கின்றோம். ஏனென்றால் தீமை செய்யும் உணர்வுகளை அடிமையாக்குவதற்குத் தான்
உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றோம்.
மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.