ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2018

துரத்தி வரும் நாயைப் பார்த்ததும் பதட்டமும் பயமும் வேகமும் வருகிறது - அந்தப் பயத்தை நாம் எப்படி மாற்றுவது...?


ரோட்டில் நாம் போகும் போது ஒரு பையனை நாய் துரத்துகிறது என்று பார்க்கின்றோம். அடப் பாவமே...! அந்தப் பையனை நாய் துரத்துகிறது...! என்று சொல்லிப் பதட்டமாகின்றோம்.

அப்பொழுது பயம் கலந்த நிலைகளில் நாம் என்ன செய்கிறோம்...! வேகமான உணர்வைச் செலுத்தி நாயைத் துரத்துகின்றோம். நாயை விரட்டி விடுகின்றோம்.

ஆனால் நாம் எடுத்த அந்த வேகமான உணர்வு நமக்குள் வந்து என்ன செய்கின்றது...?
1.உமிழ் நீராக மாறுகின்றது.
2.இந்த வேக உணர்ச்சிகள் இரத்தத்துடன் கலந்து நம் நல்ல குணங்களுடன் இரண்டறக் கலந்துடுகின்றது.

அந்தப் பையனைக் காப்பாற்றிவிடுகின்றோம். ஆனாலும் அந்த வேக உணர்ச்சிகள் தூண்டி உடலுக்குள் என்ன செய்கின்றது...?
1.உயிரிலே படும் போது குருக்ஷேத்திரப் போராகின்றது
2.அது உடலுக்குள் சென்றபின் மகாபாரதப் போராகின்றது.
3.இரத்தத்தில் கலந்தவுடனே நல்ல அணுக்களுக்கும் அதற்கும் ஒவ்வொன்றுக்கும் போராகிறது.
(சாந்தமான அணுக்களுக்கும் - பயம் பதட்டம் கோபம் ஆத்திரம் போன்ற அணுக்களுக்கும் போராகின்றது)

அதாவது நம்மை அறியாமலே அந்த உணர்ச்சிகள் நம் உடலிலுள்ள நல்ல அணுக்களை இயக்கவிடாது தடைப்படுத்துகின்றது.

நம் உடலிலுள்ள நல்ல அணுக்களைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றும் தீமைகள் புகாது தடுக்கும் சேனாதிபதி என்றும் ஞானிகள் காட்டியிருக்கின்றார்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த வலுவான உணர்வுகளை எடுத்து நம் புருவ மத்தியில் எண்ணித்
3.தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடைபடுத்த வேண்டும்.
4..அதாவது தீமைகள் நம் உடலுக்குள் புகாதபடி நாம் கட்டளையிட்டு விடுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று உடலுக்குள் அனுப்பியவுடன்
1.அந்த வலு வந்து விடுகின்றது
2.நல்ல அணுக்கள் எல்லாம் அது உஷாராகி நல்ல சக்திகளை ஈர்க்கும் சக்தி பெறுகிறது
3.அப்பொழுது வேதனை போன்ற தீமையான உணர்வு உள்ளுக்குள் வராதபடி தடுத்து விடுகிறோம் அல்லது ஒதுக்கி விடுகிறோம்.

இது தான் சேனாதிபதி. தீமைகள் புகாது தடுக்கும் சக்தியைச் “சேனாதிபதி...!” என்று சுலபமாகத் தான் ஞானிகள் கொடுத்திருக்கிறார்கள்.

சாமி (ஞானகுரு) சொல்கிறார்..! அது அர்த்தம் புரியவில்லை... என்று விட்டு விட்டீர்கள் என்றால் அர்த்தம் புரியாமல் தான் போகும். புரிய வேண்டும் என்று நினைத்தால் அடுத்தாற்போல உங்களுக்கு அந்த ஞானம் வரும்.

உங்கள் வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் இதை எடுத்தீர்கள் என்றால் வரும் தீமைகளை நீக்கி அந்த மன வலிமை கொண்டு உங்களைக் காக்கும் உணர்வு உங்களுக்குள்ளேயே வரும்.

ஆறாவது அறிவால் தீமைகள் புகாது காக்கும் நிலைதான் சேனாதிபதி என்பது.