ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2018

தீமையை நீக்கும் கூட்டமைப்பு... இது ஆயிரமாகும்... ஆயிரம் பல இலட்சங்களாகும்...!

இன்றிருக்கக்கூடிய காற்று மண்டலத்தை..,
1.யார்.., எந்த நிலையில் நச்சுத் தன்மையாக ஆக்கியிருந்தாலும்..,
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.நம் உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றோம்.
4.அந்த நச்சுத் தன்மை நம்மைப் பாதிக்காது தப்ப முடியும்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த உடலில் இத்தகைய நிலையை உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை கல்கி ஒளியின் உடலாக மாற்றும்.

இதில் சிரமம் ஒன்றும் இல்லை. உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை எண்ணினால் காற்றிலிருந்து எளிதில் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு டி.வி க்களில் இன்னென்ன அலைவரிசை என்கிற பொழுது ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வைக் கவர்கின்றது.

இன்ன அலைவரிசை என்கிற பொழுது இந்த இடம்.., இந்த நாடு.., என்று அறிந்து அதை எடுத்துக் கொள்கிறோம்.

இதைப் போன்று தான் மக்கள் பேசும் தவறான உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு அவர்களை எண்ணினால் அந்த அலை\வரிசைப்படி நமக்குள் கோபம் வரும்.., சங்கடம் வரும்.., வேதனை வரும்.

இத்தனையும் வருகின்றது.

ஆனால், “இத்தனை தீமைகளையும் நீக்கிய..,” உணர்வின் அறிவு கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குருவின் துணை கொண்டு அதைக் கவர்ந்தால் “அந்த அலைவரிசை நமக்குள் வந்து
1.தீமைகளை நீக்கும்.
2.சிந்தித்துச் செயல்படும்
3.நம் வாழ்க்கையை உயர்த்தும்.

இந்த உயர்ந்த உணர்வு வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.

அருள் ஞானிகளாக நீங்கள் மாறி உங்கள் பார்வையில் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும். உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும். உங்கள் பார்வை எல்லோரையும் ஞானியாக்க வேண்டும்.

இத்தகையை.., “கூட்டங்கள் அமைந்தால் தான் பேதங்களை மாற்ற முடியும். குருவின் அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்க்ள்.

இதைப் படிப்போர்.., உபதேசத்தைக் கேட்போர்.., அனைவரும் இதன்படி செய்தால்
1.பல ஆயிரம் பேராக மாற்றலாம்.
2.பல ஆயிரம் பேர் பல இலட்சக்கணக்கான பேரை மாற்றலாம்.
3.இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.

ஒரு வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் கசப்பான உணர்வைக் கண்டதும் மற்ற உணர்வலைகள் “எப்படி ஓடுகின்றதோ..,” இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்க்கப்படும் பொழுது பூமியில் படர்ந்துள்ள
1.“சர்வ தீமையான உணர்வலைகளையும்.., ஓடச் செய்யலாம்.
2.அல்லது அந்த உணர்வுகள் இயங்காது தடைப்படுத்தலாம்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் எல்லோருடனும் பழகுகின்றோம். பார்க்க நேர்கின்றது, கேட்க நேர்கின்றது.

இப்படி நமக்குள் பலருடைய உணர்வுகளும் பதிவாகி இருப்பதால் அதை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது. அதனால் நம் உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணமாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஏங்கி எடுத்து தீமைகள் புகாது தடுத்தால் “காலையில் ஆறு மணிக்கெல்லாம்.., நாம் இழுக்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளை சூரியன் மேலே கவர்ந்து சென்றுவிடுகின்றது.

நம்முடைய ஆன்மா சுத்தமாகின்றது.

நமக்கு எப்பொழுது தொல்லை வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி தீமைகள் புகாது தடுத்துப் பழகுங்கள்.

குருநாதர் காட்டிய வழியில் நம் ஆத்மாவைச் சுத்தம் செய்ய வேண்டிய முறை இதுதான். ஆத்ம சுத்தி என்பது இதுதான்.

நம் குருநாதர் “ஒவ்வொரு உயிரையும் ஈசன் என்று மதித்தார் எல்லோரும் நலம் பெறவேண்டும் என்றும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று தான் இந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்.


ஆகவே, அஞ்ஞான வாழ்க்கை நமக்குள் புகுந்து இயங்கிடாது அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் “மெய் ஞான உலகை.., நமக்குள் சிருஷ்டிப்போம்.