ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 6, 2018

அழுக்கான சட்டையைக் கழற்றிவிட்டுத் தூய்மையான ஆடையை அணிகின்ற மாதிரி தீமைகள் வரும் போதெல்லாம் அருள் ஒளியைப் புத்தாடையாக அணிய வேண்டும்...!


உதாரணமாக சாக்கடையைப் பூசி கொண்டு போகின்றோம் என்றால் அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துப் “போய்யா…!” என்று விலகித் தான் போய்க் கொண்டு இருப்பார்கள்.

(அது போல்) நீங்கள் சங்கடத்தையும் வெறுப்பையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் எடுத்துக் கொண்டு அடுத்தவர்களிடம் பேசினால் என்ன செய்யும்…?

நம் மீது அவர்களுக்குக் கண்டிப்பாக வெறுப்பு தான் வரும்.

அதற்குத்தான் ஞானிகள் தீபாவளி அன்று புத்தாடைகளை அணியும் நிலையைக் காட்டினார்கள்.
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் புத்தாடையாக
2.ஒவ்வொரு சமயமும் நம் ஆன்மாவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அதிகாலையில் துருவ தியானம் இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாங்கள் வேண்டும்.. எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
2.எங்கள் தொழிம் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் வாழ்க்கை வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்.
4.எங்கள் செயல் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்.
5.எங்கள் வாடிக்கையாளர்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரது வாழ்க்கையும் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அடிக்கடி இவ்வாறு எண்ணினால் இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…?

கையிலோ உடலிலோ அதிகமாக அழுக்காகி விட்டால் அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

நாம் உடுத்தியிருக்கும் உடை அழுக்காகிவிட்டால் அந்த அழுக்குத் துணியைக் கழற்றி விட்டு வேறு நல்ல துணியைப் போடுகிறோம்.

அது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் இணைத்து வரும் தீமைகளை எல்லாம் சட்டையை மாற்றுகிற மாதிரி மாற்ற வேண்டும்.

ஒரு மான் புலியைப் பார்க்கின்றது. பயத்தின் காரணமாகப் புலியின் உணர்வுகளை அதிகமாக அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் இழுக்கின்றது.
1.புலியின் உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டே இருந்தால்
2.அடுத்து மான் புலியாகப் பிறக்கின்றது.
3.இந்தச் சட்டையைக் (மான்) கழற்றிப் போட்டு விட்டு (புலி) சட்டையை எடுத்துப் போட்டுக் கொள்கிறது.

ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று அவர்கள் துயரத்தைக் கேட்டறிந்து நாம் உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துயரம் நமக்குள் அழுக்காகப் படிந்து விடுகின்றது. நாம் கேட்டறிந்து நுகர்ந்த அந்தத் துயரத்தை நாம் நீக்குகின்றோமா…? ஆனால்
1.நாம் உடுத்தியிருக்கும் சட்டை மீது சாக்கடை விழுந்து விட்டது என்றால்
2.உடனே சட்டையைக் கழற்றிவிடுகின்றோம்
3.அடுத்து அந்தச் சட்டையைத் துவைக்காமல் மீண்டும் உடுத்துகின்றோமா…?

அப்போது அந்த மாதிரித் துயரப்படும் உணர்வுகளைக் கேட்டறிந்தபின் அருள் மகரிஷியின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று என்று சொல்லி
1.நம் சட்டையை மாற்றுகின்ற மாதிரி
2.உடனே அந்த அருள் ஒளிச் சுடரை மாற்ற வேண்டும்.

தினசரி நாம் தூய்மையான உடையை அணிந்தாலும் அழுக்கு வந்து சேர்ந்து கொண்டு தான் இருக்கும். தினசரி அதைக் கழற்றி மாற்றிக் கொண்டே தான் இருக்கின்றோம்.

அதைப் போல நம் வாழ்க்கையில எத்தனையோ தீமைகள் வந்தாலும் உடனே அதை நாம் மாற்றப் பழக வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து எடுத்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அப்போது ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் இருளை நீக்கும் அந்த ஒளியான அணுக்கள் விளைகின்றது. வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தியைப் பெறுகின்றோம். அவ்வளவு தான்…!