ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2018

நாம் எங்கே சென்றாலும் அருள் ஒளிக்குத் தான் நாம் இடம் கொடுக்க வேண்டும்… அசுர உணர்வுகளுக்கு அல்ல…!


இங்கே தபோவனத்தில் கொஞ்சம் பேரை இந்தத் தியான வழியில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கின்றோம். ஆனால் அவர்கள் ஒன்றாக இருக்கப்போகும் போது என்ன செய்கின்றார்கள்….?

“என்னை இப்படிச் செய்கின்றார்களே…!” என்று இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அசுர குணங்களைத் தான் வளர்த்துக் கொள்கின்றார்களே தவிர குறைப்பதற்குண்டான சக்தி இல்லை.
1.ஏனென்றால் இங்கே ஒதுங்கும் இடம்..
2.தீமைகள் வராது தடுக்கும் இடம்…
3.நன்மைகள் பெறக்கூடிய இடம் என்று தெரிகின்றது.

இங்கு வந்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

அசுரனுக்குதான் நாம் இடம் கொடுக்கின்றோம். அருள் ஒளிக்கு நாம் இடம் கொடுக்கவில்லை.

தீடீரென எல்லாம் சேர்வார்கள். ஒருவருக்கொருவர் சண்டையைப் போட்டு தூக்கி வாரிப் போட்டுவிடுவார்கள். வாரி போட்டுவிட்டேன் என்று இவர் நினைப்பார்.
1.அந்தக் கோபம் இவருக்குள் இருந்து கொண்டு
2.கிடு..கிடு கிடு..கிடு… என்று ஆட்டும் என்பது அவருக்குத் தெரியாது.

நாம் நினைக்கின்றோம். நாம் இப்படி அடுத்தவர்களைத் தள்ளி விட்டால் “ரொம்பக் கெட்டிக்காரர்…” என்று நினைக்கின்றோம். ஆனால் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள்
1.நமக்குள் கெட்டிக்காரத்தனமாக உள்ளுக்குள் புகுந்து என்ன செய்யும்..?
2.நம் உடலுக்குள் அந்த அசுர உணர்வுகள் வலுவாகிவிடுகின்றது.
3.யாரை எண்ணிக் கோபப்பட்டோமோ அவன் உணர்வைதான் வளர்க்கின்றமே தவிர
4.நாம் அருள் ஒளியைச் சிறிதும் நமக்குள் வளர்க்கவில்லை.

ஏனென்றால் நாம் எடுக்கும் அந்தத் தீமையின் உணர்வுகள் ராஜ தந்திரமாக உள்ளுக்குள் புகுந்து நம்மைச் செயல்படுத்துகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் தீமையை நீக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்து உங்களுக்குள் வலுவாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வளர்த்துக் கொண்ட நிலையில் அந்த மெய் ஞானத்தின் உணர்வை அவர்களுக்கு எடுத்து நீங்கள் அவர்களுக்குச் சொன்னீர்கள் என்றால்
1.நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ
2.அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் வளர்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

ஒருவரிடம் நீங்கள் சொல்கின்றீர்கள். நினைவு அங்கே மகரிஷிகளின் பால் போகின்றது. தீமை புகாது தடுக்கின்றது.

1.மற்றவர்களுக்குள் அறியாது இயக்கிக் கொண்டிருக்கும்
2.அந்த தீமையை அடக்கக்கூடிய வல்லமை உங்களிடம் இருந்து போகிறது.
3.நம் உணர்வுகள் என்றுமே மற்றவரை அருள் வழியில் அழைத்துச் செல்வதாகத்தான் இருக்க வேண்டும்.

சொல்வது அர்த்தம் ஆகின்றதா…!