தியானம் என்றால் நாம் சும்மா
சாமியையே நினைத்துக் கொண்டிருப்பது இல்லை.
1.அந்த உயர்ந்த குணங்கள்
நாங்கள் பெற வேண்டும்.
2.உயர்ந்த வாழ்க்கை நாங்கள்
வாழ வேண்டும்.
3.உயர்ந்த தொழில் எங்களுக்குள்
வளர வேண்டும்.
4.உயர்ந்த குணங்கள் எங்கள்
எல்லோருக்குள்ளும் வளர வேண்டும்.
5.நாங்கள் பார்க்கும் அனைவரும்
அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்
இதைத் திரும்பத் திரும்ப
எண்ணி வளர்த்துக் கொண்டால் அது தான் உண்மையான தியானம்.
அப்போது இந்த உணர்வுகள்
நமக்குள் விளைகின்றது. இது விளையப்படும் போது இது நமக்குள் என்ன செய்யும்..? அந்த அழியாத
சொத்தாகப் பேரருள் பேரொளி பெறுவோம்.
பெரும் பகுதி நான் (ஞானகுரு)
இதையே எண்ணிக் கொண்டு இருப்பதனால் “என்னை எதுவும் பாதிப்பது இல்லை….!”
ஓடுகின்ற தண்ணீர் கடலில்
போய் ஐக்கியமானால் அது அழைத்து இழுத்து அழித்துவிட்டுப் போய்விடுகின்றது. கலந்த தண்ணீரும்
சுத்தமாகின்றது.
ஆனால் ஆற்றில் போகும் போது
என்ன செய்யும்…?
1.போகின்ற இடத்தில் எல்லாம்
அந்த அழுக்குத் தெரியும்.
2.ஆற்றின் ஓரத்தில் தெரியும்…
அந்த மணம் கொஞ்சம் வீசுகின்றது.
3.தொடர்ந்து எவ்வளவு நேரம்
வருகின்றதோ அவ்வளவு நேரத்திற்கு இது தெரியும்.
4.அவ்வளவு நேரத்திற்கு
அந்தக் குணத்தைக் காட்டும்.
அந்த மகா ஞானிகளின் மெய்
ஒளிக் கடலுடன்… அந்த அருள் ஒளியுடன்… நாம் கலந்தோம் என்றால்
1.அங்கே அலைகள் அழைத்து
அங்கே கொண்டு போய் அடக்கும்.
2.தீமைகளை அது கரைக்கும்.
அந்த மகா மகரிஷிகளுடன்
கலக்கும் பழக்கம் வர வேண்டும். இதை அனுபவரீதியில் நீங்கள் செய்யலாம் உங்கள் வாழ்க்கையில்
இது வாழ்க்கையே தியானம்.