இடி மின்னல் வந்தாலும் கடலுக்குள் தாக்கியவுடனே என்ன செய்கின்றது...?
இது இழுத்து வைத்துக் கொள்கின்றது. ஹைட்ரஜனாக (HARD WATER) மாற்றுகின்றது.
அதனால் கடல் நீருக்குள் அணு இயக்கச் சக்தி அதிகமாக வருகின்றது.
பாருங்கள்...! கடலுக்குள் தண்ணீர் மோதினால் “பளீர்...!” என்று நெருப்பே தெரியும்.
ஹைட்ரஜன் அந்த அணு இந்த வினைகள் ஒன்றோடொன்று மோதும் போது தான் இது
வருகின்றது. புயல் வரும் போது பார்த்தால் கடலில் இருந்து பெரிய தீயே பறக்கும்.
அதைப் பார்க்கத்தான் குருநாதர் என்னைக் (ஞானகுரு) கோகர்ணத்திற்குப்
போகச் சொன்னார். அங்கே போயிருக்கும் போது பெரிய மழை வருகிறது.
அதைப் பார்த்ததும் அங்கே
இருக்கின்றவர்கள் எல்லாம் எழுந்து ஓடினார்கள். என்னடா ஓடுகின்றார்கள் என்று
பார்த்தால் அவர்களுக்கு அனுபவம் இருக்கின்றது. எனக்கு அனுபவம் இல்லை.
இங்கே ஓரத்தில் மணல் மேடு இருக்கிறது. தண்ணீர் எங்கேயோ இருந்து
வருகிறது. வந்தவுடனே அடித்து என்னைத் தூக்கி இந்தப் பக்கம் கொண்டு வந்து போட்டுவிட்டது.
மழை பெய்கிறது என்று கையில் குடையை விரித்து வைத்திருந்தேன்.
அடுத்து பார்த்தால் குடையைக் காணோம். வெறும் கம்பி மட்டும் தான் இருக்கிறது.
கோகர்ணம் கோயிலுக்குப் பக்கத்தில் அழுக்குத் தண்ணீர் எல்லாம் போகின்றது.
அதைத் தாண்டி அந்தச் சுவற்றில் மேலே அந்தப் பக்கத்தில் கொண்டு போட்டு விட்டது.
இந்தப் பக்கம் விழுந்தாலும் தண்ணீர் கடலுக்கடியில் பின்னாடி இழுத்துக்
கொண்டு ஓடிவிடும். எல்லாரும் எழுந்து ஓடிப் போய்விட்டார்கள்.
ஆனால் நான் ஆனந்தமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது
தான் கடலுக்குள் அங்கே “படீர்….ர்ர்ர் படீர்…ர்ர்ர்...!” என்று நெருப்பு வருவதை எல்லாம்
காட்டுகின்றார்.
ஏனென்றால் குருநாதர் அங்கே இருக்கச் சொல்கின்றார். நான் என்ன செய்யட்டும்...?
அவர் சொல்வதைத்தானே நான் செய்ய முடியும்.
பாறை மேல் நின்று ஆனந்தமாக பார்த்த்க் கொண்டிருந்தேன். கொஞ்ச கொஞ்சமாக
அலைகள் வந்து கடைசியில் என்னைத் தூக்கிக் கொண்டு மல்லாந்து போட்டுவிட்டது.
ஒவ்வொரு இடத்திலேயும் இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கின்றது...?
என்று காட்டுகிறார்.
இந்தப் பக்கம் மலை மேல் கோகர்ணத்திற்குப் போக வேண்டும். இடது
புறத்தில் ராமர் கோவில் இருக்கின்றது அந்த ராமர் கோயில் போகின்ற இடத்தை ஒட்டி கொண்டு
வீடுகளெல்லாம் இருக்கின்றது.
ராமர் கோயிலுக்குப் போனோம் என்றால் அங்கே ஒரு விதமான அலைகள் இழுக்கின்றது.
இதை விட்டு விட்டு நேராக மேலே போனால் காளி கோயில். அங்கே போக முடியாது கம்பி போட்டு
வைத்து இருக்கின்றார்கள்.
கடல் தண்ணீர் கீழே இருக்கின்றது. அலைகள் வருவதைப் பார்த்தோம் என்றால்
அதிலிருக்கும் காந்தப் புலன் “கிர்…!” என்று இழுக்கின்றது.
இழுக்கின்றது என்றால் அந்தக் காற்று அப்படியே அடித்து ஆளையே உள்ளே
இழுக்கின்றது. அதனால் தான் கம்பியைப் போட்டு வைத்துள்ளார்கள்.
அங்கே அர்ச்சனை எல்லாம் செய்து கொண்டு இருப்பார்கள். கீழே குகை
இருக்கின்றது. அங்கே செல்ல வேண்டும் என்றால் நடந்து தான் போக வேண்டும்.
அதற்கப்புறம் பரசுராம் குகை என்று ஒன்று இருக்கின்றது. அங்கே பார்த்தால்
கல் குகையாக இருக்கும். மேலே ஓட்டை போட்டு இருப்பார்கள்.
உள்ளுக்குள் போனால் அறை அறையாக இருக்கும். அந்தக் குகையில் ஒவ்வொன்றிலிருக்கும்
சுவிட்சைத் (பொறி) தட்டினோம் என்றால் இந்தக் கல் விலகுகின்றது. அதில் எவ்வளவு நுட்பமாக
வைத்து இருக்கின்றார்கள்.
உள்ளே இறங்கிப் போக வேண்டும் குகை அப்படியே இருட்டாக இருக்கும்.
அப்புறம் அதற்குள் போனவுடனே ஐந்தாறு பாதை போகும். ஒரு பாதை ஒரு பக்கமும் வேறொரு பக்கம்
போவதும் இப்படி இருக்கிறது.
இது எல்லாம் முடிந்தவுடனே கடைசியில் காளி கோவிலுக்குப் போகின்ற
பாதை தான் இருக்கும். மேலே போனவுடனே லபக்கென இழுத்து கொள்ளும்.
இன்றைக்குக் கம்பி போட்டுப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள்.
அன்றைக்குக் கம்பி கிடையாது. அங்கே எட்டிப் பார்ப்பார்கள். லபக் என்று இழுத்துக் கடலுக்குள்
விட்டு விடும்.
ஆனால் அதற்குள்ளேயும் குகைகளும் பாதையும் நிறைய போகின்றது. எத்தனை
பாதை போகின்றது என்று சொல்ல முடியாது. அந்தக் குகைக்குள் எல்லாம் போய் உட்காந்து
பார்த்து வந்தேன்.
கோகர்ணம் என்றால் என்ன என்கிற வகையில் முதலில் அப்போது தான் தெரிந்து
கொண்டேன்.
அதற்குப் பின்னாடி நான் கொண்டு போன மற்ற பொருள் பணம் எல்லாம் எல்லாருக்கும்
கொடுத்து விட்டு ஒரு வேஷ்டி ஒரு துண்டுடன் புறப்பட்டேன்.
பண்டரிபுரம் போய் மறுபடியும் பூனா வந்து பம்பாய் வந்து
அங்கிருந்து காசிக்குப் போய் எல்லாம் சுற்றிப் பார்த்தது. சிரமப்பட்டுத்தான் எல்லாவற்றையும்
தெரிந்து கொண்டோம்.