பாம்பு விஷம் கொண்டது.
பாம்பு தீண்டினால் நாம் மடிகின்றோம். அந்தப் பாம்பின் நினைவு நமக்குள் உச்சகட்டம் அடைகின்றது.
1.இந்த உடலை விட்டுப் போன
பிற்பாடு எங்கே போகின்றோம்..?
2.பாம்பின் ஈர்ப்புக்குள்
தான் செல்கின்றோம்.
3.அடுத்தாற்போல பாம்பாகத்
தான் பிறவி எடுப்போம்.
ஆனால் அந்தப் பாம்பை நாம்
அடித்து விட்டால் அது வேதனைப்பட்டுத் துடிக்கும். அதை ரசிக்கின்றோம். வேதனையை உருவாக்கும்
அணுக்களாக நம் உடலுக்குள் விளைந்து விடுகிறது.
பாம்பிடமிருந்து நாம் மீள்கின்றோம்
தப்புகின்றோம் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அந்த உயிரான்மா நமக்குள் வந்து என்ன
செய்கின்றது…?
நம் உணர்வை எடுத்து நம்மிடமிருந்து
“தன்னைப் பாதுகாக்கின்றது…” அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.
இதற்காகத் தான் ஒரு காவியத்
தொடர்பைக் கொடுக்கின்றார்கள் ஞானிகள். “நீ பாம்பாகப் போ…!” என்று ஒரு ரிஷி சாபம் கொடுத்தார்
என்று கதையைச் சொல்வார்கள்.
ஏனென்றால் வீட்டில் வேதனைப்படுவார்கள்.
“என் வீட்டில் அப்படி இருக்கின்றது… இப்படி இருக்கின்றதே… அது இருக்கின்றதே… இது இருக்கின்றதே…!
என்று வேதனைப்படுகின்றார்கள். இதெல்லாம் விஷத்தை வளர்த்துக் கொள்வது தான்
நம் உயிர் எத்தனையோ கோடிச்
சரீரங்களில் நஞ்சினை வென்று நம்மை மனிதனாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது. நஞ்சினை
வென்றிடும் சக்தியாக வளர்த்து வந்தது. ஆனால்
1.நம் ஆசையை வைத்துக் கொண்டு
2.“அவன் அப்படிச் செய்கின்றானே…
இவன் இப்படிச் செய்கின்றானே… இதைச் செய்கின்றானே…!” என்று வேதனையை அதிகமாக்கப்படும்
பொழுது
3.அந்த விஷத்தின் தன்மை
எல்லாம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
அதைத்தான் கீதையிலே "நீ
எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…" என்று சொல்லப்பட்டது.
அந்த வேதனை உணர்வுகள் உடலிலே
விளைந்து உயிராத்மாவில் விஷம் அதிகமான பின் உடலை விட்டுச் சென்ற பின் பாம்பாகப் பிறக்கின்றது.
பாம்பு விஷத்தை உமிழ்த்தி அதை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றது.
உயிர் எத்தனையோ தரம் காப்பாற்றியது.
இப்படி வேதனையை வளர்த்த பின் “நீ பாம்பாகப் போ…!” என்று உயிர் அந்த அளவுக்கு வளர்த்து
விடுகின்றது… அந்த ரிஷி சாபமிடுகின்றான்…! என்று காட்டுகின்றார்கள்.
உயிர் சிருஷ்டிக்கும் வன்மை
பெற்றது. அதனால் உயிரை ரிஷி என்றார்கள் ஞானிகள். (நீ பாம்பாய் போ என்று உயிர் சொல்வதாகத்
தெளிவாகக் காட்டுகின்றனர்) அப்பொழுது
1."ஐயனே என்னை அறியாத
இந்தப் பிழையிலிருந்து நான் விடுபடும் உபாயத்தை நீங்கள் காட்ட வேண்டும்."
2.”நான் செய்த பிழையை மன்னித்தருள
வேண்டும்" என்று கேட்கின்றார்.
நமக்குத் தெளிவாக்குவதற்கு
இந்தக் குட்டிக் கதையைப் போடுகின்றார்கள்.
சரி… “நீ நல்லவனைத் தீண்ட
எண்ணுவாய்… அவன் கை படும்... நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்….!
பாம்பு கடிக்க வந்தவுடனே
நாம் என்ன செய்வோம்..? அடிப்போம். அப்போது அந்த மனித உடலுக்குள் பாம்பின் உயிர் போகின்றது.
பாம்பு மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.
ஆனால் மனிதனான பின் இப்போது
வேதனை என்ற உணர்வு வரப்போகும் போது பாம்பாகப் பிறக்கின்றோம். ஆக விஷத்தின் தன்மை நமக்குள்
எடுக்கும் போது “இந்த நிலை தான்” என்று தெளிவாக்குகின்றார்கள்.
நண்பர்களுக்குள் நாம் பழகுகின்றோம்.
நண்பன் உதவி செய்திருந்தாலும்கூட மறந்து விட்டால் சந்தர்ப்பத்தால் நீ நாசமாகப் போக
வேண்டும் என்று நாம் சொல்கின்றோம்.
பிள்ளையை வளர்த்திருப்போம்.
அவன் சரியானபடி வராமல் தவறு செய்தால் நாசமாகப் போகிறவனே…! என்று பிள்ளையாக இருந்தாலும்
சாபமிடுகின்றோம்.
அவன் அப்படி இருக்கின்றானே.
அப்படிச் செய்கின்றானே இப்படிச் செய்கின்றானே என்று எண்ணும்போது இந்தப் பேய் மனமாகிவிடுகின்றது.
இங்கே வளர்த்ததை விட்டு
விட்டு அடுத்தவர்களுடைய நிலையை எண்ணப்படும் போது… தனக்குள் வளர வேண்டியது எது…? என்பதை
மறந்துவிடுகின்றோம்.
அந்த அதை எடுத்து அவன்
இப்படிப் பேசினானே அப்படிப் பேசினானே என்று எண்ணும்போது பேய் மனமாகின்றது. “நீ பேயாய்ப்
போ…!”
அப்போது நாம் யாரை எண்ணி
நமக்குள் மேல் இதைச் சேர்க்கின்றமோ அந்த வெறுப்பின் தன்மை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த
பின்
1.அந்த உடலுக்குள் போகின்றோம்.
2.அந்த உடலையே வீழ்த்த
எண்ணுகின்றோம்.
3.அங்கே பேயாகச் சென்று
நோயாகி எக்குணத்தின் தன்மை வருகிறோமோ அதன் வழி மாறுகிறது.
4.அந்த உடலுக்குள் சென்று
குழந்தையாகப் பிறப்பதற்கு முடியாது.
அதாவது பேய் மனம் கொண்டு
அடுத்த மனித உடலுக்குள் போனால் “இவன் மனிதனாகப் பிறக்க முடியாது…!” “நீ பேயாகப் போ…!”
என்று அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
அந்த உடலுக்குள் போன பின்னாடியும்
இந்த பேய் மனதைத் தான் அங்கே காட்டுகின்றது. இந்த உணர்வைத் தான் அங்கே வளர்க்கின்றது.
1."ஐயனே…! என்னை அறியாது
செய்த இந்தப் பிழையில் இருந்து மீள வேண்டும் என்று கேட்கின்றார்கள்.
2."நல்லவனின் நிழல்
படும் அப்போது நீ மனிதனாகப் பிறப்பாய்…!” என்று அங்கே உணர்த்துகின்றார்கள்.
அடுத்து நல்ல உணர்வு கொண்ட
மனித உடல்களில் நல்ல உணர்வை வளர்த்து மீண்டும் “மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறும்…!”
என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
இதை எல்லாம் நாம் தெளிவாகத்
தெரிந்து இப்பொழுது பெற்ற இந்த மனிதச் சரீரத்திலேயே மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேர்த்து
உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதற்காகத்தான் இதைச் சொல்வது.