ஒன்றிலிருந்து தொண்ணூறு நாளுக்குள் சண்டை போடுவது வேதனைப்படுவது
போன்ற உணர்வுகளை ஒரு கர்ப்பிணியான தாய் உற்றுப் பார்த்து அதைக் கேட்டறிந்து நுகர்ந்தால்
1.கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அதே உணர்வுகள் விளைகின்றது
2.அவன் பிறந்ததிலிருந்து தாய் தந்தையை எதிர்க்கக்கூடிய நிலைதான்
இருக்கும்.
3.ஆயிரம் பேர் புத்திமதி சொன்னாலும் கேட்க மாட்டான்.
ஆனால் கர்ப்பமுற்ற தாயோ சண்டை போட்டவர்களை வேடிக்கையாகத்தான் பார்த்தது.
அதாவது அந்தக் குடும்பத்தில் தவறு செய்பவனைப் பார்த்து நல்லவர்களுக்கு
இப்படிக் கெடுதல் செய்கின்றானே என்று எண்ணும்போது அந்தக் கெடுதல் செய்த உணர்வைத் தாய்
நுகரப்படும் போது கருவிலிருக்கும் குழந்தைக்கு அது பூர்வ புண்ணியமாகின்றது.
இதைப் பூர்வத்திலே குழந்தை வளர்த்துக் கொண்ட பின் பிறந்து
வளர்ந்த பின் அதைத் தான் செய்வான்.
அவனை மாற்ற வேண்டும் என்றால் எந்தச் சாமியாரிடம் போனாலும்
ஒன்றும் நடக்காது. எந்தச் சாமியும் எந்த மநதிரமும் ஒன்றும் அவனை மாற்ற முடியாது.
எந்தத் தாய் எதை எடுத்து நீங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்குக்
கொடுத்தீர்களோ அதே தாய் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும்
படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று கொஞ்ச நேரம் எடுத்து வலுவாக்கிக்
கொள்ள வேண்டும்.
அப்புறம் பையனை நினைக்கும் போதெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவன் உடல் முழுவதும்
படர வேண்டும்
2.அவன் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்.
3.அவன் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற வேண்டும் என்று
4.இந்த உணர்வுகளை அவனுக்குப் பாய்ச்சிக் கொண்டேயிருக்க
வேண்டும்.
5.அப்பொழுது அவன் உணர்வு உங்களிடம் விளையாது.
அவனுக்குச் சாப்பாடு போடும் போதெல்லாம் இதே மாதிரி துருவ
நட்சத்திரத்தை எண்ணிப் பரிமாற வேண்டும். அதே உணர்வுடன் அவனிடம் ஒரு அன்பான வார்த்தையைச்
சொல்லி
1.படிப்பில் இந்த மாதிரிச் செய்யப்பா...
2.உன் காரியங்களை எல்லாம் இப்படிப் பக்குவமாகச் செய்யப்பா..!
3.உனக்கு எல்லாம் நல்லதாக வரும் என்று
4.அவன் கண்களைப் பார்த்துச் சொல்லிச் சந்தோஷமாகப் பதிவாக்கிப் பாருங்கள்.
5.இந்த உணர்வுகள் பதிவாகி அவனைச் சரியாக்கும்
டாக்டராகப் படித்து விட்டு வருகின்றவர்கள் ஒரு பைத்தியக்காரன் சரியான
நிலைகளில் பேசவில்லை என்றால் என்ன செய்கின்றார்கள்...?
அவன் உணர்வுடன் சேர்த்து அவன் மனதிற்குத் தகுந்த மாதிரிச் சொல்லி
மனோதத்துவ ரீதியில் அவனை மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
ரொம்பவும் சுட்டித்தனமாக இருக்கக்கூடிய குழந்தைகளை நீங்கள் மாற்ற
இந்த மாதிரி முறைகளைக் கையாண்டு அவர்களை நம் வழிக்குக் கொண்டு வரலாம்.
ஆனால் இதை விட்டு விட்டு பையன் செய்யும் தவறுகளைப் பார்த்து
1.நீ எப்பொழுது பார்த்தாலும் இப்படியே செய்து கொண்டிருக்கின்றாய்
2.தினமும் நான் சாமியைக் கும்பிட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன்.
3.தினமும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன் என்று இதை
எடுத்தால் எப்படி இருக்கும்...?
பற்றாக் குறைக்குக் காசு வைத்திருப்பவர்கள் சம்பாரித்த
பணத்தைக் கொண்டு போய் மந்திரக்காரனிடமோ ஜோசியக்காரனிடமோ கொடுத்து விட்டு் கஷ்டத்தையெல்லாம்
அவன் போக்குவான் என்றால் அவன் எப்படிப் போக்குவான்.
1.அவன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வான்...!
2.நம்மிடம் இருக்கும் காசை எல்லாம் வாங்கிக் கொண்டு போவான்...!
இது தான் நடக்கும்..!
ஆகவே “கஷ்டம்...!” என்ற வார்த்தையை நீங்கள் விட்டுவிட்டு மகரிஷிகளின்
அருள் ஒளியைப் பெருக்கி பையன் நன்றாக வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
1.உங்கள் உடலும் நிம்மதியாகின்றது.
2.உங்கள் சொல் அவனைத் திருத்தவும் செய்யும்.
ஏனென்றால் நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் “நன்மை செய்தோம்...!”
என்று எண்ணினால் விக்கலாகின்றது. அதே நண்பனுக்குள் பகைமையானால் “துரோகம் செய்தான் பார்..!”
என்று சொன்னால் புரை ஓடுகின்றது.
இது எல்லாருக்கும் தெரிந்தது தான்...!
அதே மாதிரிப் பையன் மேல ரொம்பப் பாசமாக இருக்கின்றோம். அவன் சொன்னபடி
கேட்கவே மாட்டேன் என்கிறான் என்ற நிலையில் அந்த வேதனையோடு “ஏன்டா இப்படிச் செய்தாய்...?”
என்று தான் பதிவு செய்கிறோம்.
இது அவனை இயக்கி இன்னும் தவறு செய்பவனாகவே ஆக்கும். இதை நாம்
தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே பையனைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய்
1.நீ நல்லவனாக ஆக வேண்டும்.. நல்லவனாக வருவாய்..!
2.உன் எதிர் காலம் நன்றாக இருக்கும்
3.எல்லோரும் போற்றும் தன்மைக்கு வருவாய் என்று
4.அவன் காதில் படும்படியாக ஒரு நான்கு நாளைக்குச் சொல்லுங்கள்.
பையன் மேல் சங்கடம் வரும் நேரத்தில் எல்லாம் இந்த மாதிரி எண்ணுங்கள்.
நிச்சயம் அவனை மாற்றும். செய்து பாருங்கள்...!