1.“வேதனையும் அதிக சலிப்பும்...”
எடுத்தால் உப்புச் சத்து கூடுகின்றது.
2.”கோபம்…மகிழ்ச்சி கோபம்…மகிழ்ச்சி”
என்று மாறி மாறி எடுத்தால் சர்க்கரைச் சத்து வந்துவிடுகின்றது.
3.”கோபம்… கோபம்.. கோபம்..” என்று
அதீதமாக எடுத்தால் இரத்தக் கொதிப்பாகின்றது.
இந்த மூன்றையும் தடுக்க எப்படித்
தியானிக்க வேண்டும்…?
எங்கள் கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய
அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
என்று உங்கள் கண்ணின் நினைவைக் கல்லீரலில் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற
அலைகளைப் பாய்ச்சுங்கள்.
இப்போது அந்தக் கல்லீரல் மண்ணீரலில்
வீக்கம் இருந்தால் தணியும். அசுத்தங்கள் இருந்தால் அகலும். அதை உருவாக்கிய அணுக்களுக்கு
வீரிய சக்தி ஊட்டும்போது உங்கள் இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும்.
ஏனென்றால் உணவாக வரும் நிலைகளில்
அசுத்தங்களை அகற்றி நல்ல உணர்வாக மாற்றும். கல்லீரலும் மண்ணீரலும் அதைச் சீராக இயக்கச்
செய்யும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்
கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு அந்த உணர்வலைகளக் கணையத்திற்குப் பாயுச்சுங்கள்.
கணையங்களை உருவாக்கிய அணுக்கள்
சீரானால்
1.உப்புச் சத்தைக் குறைக்கும்
2.சர்க்கரைச் சத்தைக் குறைக்கும்
3.இரத்தக் கொதிப்பைக் குறைக்கும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணி
ஏங்கித் தியானியுங்கள்.
1.இரத்தத்தை நீராக மாற்றும் நிலைகளையும்
2.இரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்தும்
நிலைகளையும்
3.இரத்தத்தில் கார உணர்வின் சத்துகளை
அதிகப்படுத்தும்
4.இது போன்ற உணர்வுகளைத் தூண்டும்
அந்த அணுக்களை வடிகட்டி
5.நமக்குள் சமப்படுத்தும் நிலைகள்
வரும்.
இவ்வாறு உடலிலுள்ள தீமைகளைச்
சமப்படுத்தி ஒன்றாக்கி நல்ல உணர்வுகளை ஊட்டும் நல்ல உணர்ச்சிகளை உங்கள் கணையங்களுக்கு
ஊட்டுங்கள்.
நாம் சமையல் செய்யும் பொழுது
பல பொருள்களைச் சேர்த்து ஒன்றாக்குகின்றோம். எல்லாம் சமமாக இருந்தால் சுவையும் ஒன்றாகின்றது.
சம நிலை குறைந்தால் அதன் சுவைகளும் மாறுகிறது.
உதாரணாக நாம் காபி (குடிக்கும்)
போடுகிறோம் என்றால் சூடு சமமாக இருந்தால் சர்க்கரையும் காபியும் ஒன்றாகிறது.
1.சூட்டின் தன்மை குறைந்தால்…
2.நாம் போடும் காபித் தூளின்
தன்மையும் பாலின் தன்மையும் மாறி
3.இனிப்பின் தன்மையை ஒன்றாக்கதபடி
“சுவை கெடும்...!”
இதைப்போல அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளைப் பெற்று உப்புச் சத்தையும் சர்க்கரைச் சத்தையும் இரத்தக் கொதிப்பையும் இந்த
மூன்றையும் சமப்படுத்தும் தெளிவான நிலைகள் பெற்று… “அருள் கணையங்களாக…! நாம் மாற்றுதல்
வேண்டும். இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்.
இப்போது உங்கள் கணையங்கள் சீராக
இயங்குவதை உங்களால் உணர முடியும். துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி கணையங்களில் படும்போது கணையங்களில் ஒரு விதமான புத்துணர்ச்சி பெரும்.
நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று
காசைச் செலவழித்து இயந்திரத்தின் மூலமாக நீரை வெளியேற்றி உப்புச் சத்தைக் குறைத்தாலும்
இன்சுலின் மருந்தைக் கொடுத்து சர்க்கரையைக் குறைத்தாலும் சிறிது காலத்திற்குத்தான்
நன்றாக ஆகும்.
அதற்கப்புறம் அந்த உறுப்பை உருவாக்கிய
அணுக்கள் செயலிழந்த பின் மடிய வேண்டியது தான்.
1.ஏனென்றால் உறுப்பை உருவாக்கிய
அணுக்களைச் சீராக்கும் நிலை இன்றைய மருத்துவத்தில் இல்லை.
2.ஆனால் மேலே சொன்ன முறைப்படி
நீங்கள் தியானித்தால் உங்கள் கணையத்தை உருவாக்கிய அணுக்களைச் சீராக்க முடியும்
3.உங்கள் எண்ணத்தினாலேயே துருவ
நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி “எண்ணத்தால் வந்த நோய்களிலிருந்து… முழுவதும் விடுபட
முடியும்…!”